Viral Video : Thar காரில் டெலிவரி செய்யப்பட்ட Blinkit ஆர்டர்.. இணையத்தை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய வீடியோ!
Blinkit Delivery Through Thar Car | தற்போது பொதுமக்கள் மத்தியில் ஸ்விக்கி, சொமேட்டோ, பிளிங்கிட் உள்ளிட்ட டெலிவரி சேவைகள் மிகவும் பிரபலமாக உள்ளன. அந்த வகையில், தார் கார் மூலம் பிளிங்கிட் ஆர்டர் டெலிவரி செய்யப்படும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

வீடுகளுக்கே வந்து பொருட்களை டெலிவரி செய்யும் நிறுவனங்கள் பொதுமக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளன. அவ்வாறு, வீட்டிற்கு வந்து உணவு உள்ளிட்ட பொருட்கள் டெலிவரி செய்யப்படுவது தொடர்பான வீடியோக்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி வைரலாகும். அந்த வகையில் தார் (Thar) காரில் வந்து பிளிங்கிட் (Blinkit) ஆர்டர் டெலிவரி செய்யப்படும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வைரல் வீடியோ குறித்து விரிவாக பார்க்கலாம்.
தார் காரில் டெலிவரி செய்யப்பட்ட பிளிங்கிட் ஆர்டர்
தற்போதைய காலக்கட்டத்தில் மனிதர்கள் பரபரப்பாக ஓடிக்கொண்டு இருக்கும் சூழலில் அவர்களின் வேலை பளுவை குறைக்கும் வகையில் சில நிறுவனங்கள் சேவைகளை வழங்கி வருகின்றன. அதாவது உணவு, மளிகை பொருட்கள், உடைகள் உள்ளிட்டவற்றை வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கே சென்று டெலிவரி செய்யும் பணியை ஸ்விக்கி, சொமேட்டோ, பிளிங்கிட் உள்ளிட்ட நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன. அவ்வாறு வித்தியாசமான முறையில் உணவு பொருட்கள் உள்ளிட்டவை டெலிவரி செய்யப்படுது தொடர்பான வீடியோக்கள் சில வைரலாகும். அந்த வகையில் தார் கார் மூலல் பிளிங்கிட் டெலிவரி செய்யப்படும் வீடியோ வைரலாகி வருகிறது.




இதையும் படிங்க : Viral Video : ஜிம்மில் Workout செய்யும்போது ஏற்பட்ட திடீர் நிலநடுக்கம்.. லெக் டேவால் எழுந்து ஓட முடியாமல் தவித்த இளைஞர்!
இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ
View this post on Instagram
இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோ ஒரு வீட்டின் மொட்டை மாடியில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் சாலையில் ஒரு தார் கார் வந்து நிற்கிறது. அந்த காரில் இருந்து பிளிங்கிட் உடை அணிந்த ஒரு இளைஞர் டெலிவரிக்கான பொருட்களை எடுத்து வருகிறார். மாடியில் இருக்கும் அந்த நபர் கயிறு கட்டப்பட்டுள்ள கூடையை கீழே இறக்கும் நிலையில், அந்த நபர் அதில் பொருட்களை வைத்துவிட்டு மீண்டும் தார் காரில் ஏறிச் செல்கிறார். இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.
இதையும் படிங்க : Viral Video : இது பாரிசா?.. ஷாக்கான இந்திய இளைஞர்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!
வைரல் வீடியோவுக்கு நெட்டிசன்கள் கருத்து
இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி மிக வேகமாக வைரலாகி வரும் நிலையில், இதுதான் பிளிங்கிட் பிரீமியம் என பலரும் கிண்டலாக கருத்து பகிர்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.