Viral Video : முட்டையில் மோனலிசா.. இப்படி ஒரு ஓவியமா?.. வியக்கும் நெட்டிசன்கள்!
Mona Lisa Egg Art | இணையத்தில் ஒவ்வொரு நாளும் பல வகையான வித்தியாசமான மற்றும் வியப்பூட்டும் வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், இளைஞர் ஒருவர் முட்டையை பயன்படுத்தி மோனலிசா ஒவியம் வரையும் வீடியோ இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது.

ஓவியம் என்பது ஒரு மிகச்சிறந்த கலை ஆகும், அந்த கலை ஒருசிலருக்கு மட்டுமே கொடையாக வழங்கப்பட்டு இருக்கும். உலகம் முழுவதும் பல அசாத்திய திறமை கொண்ட ஓவியர்கள் உள்ள நிலையில், சமூக ஊடகங்களின் மூலம் சிலரது திறமைகள் உலகிற்கு தெரிய வரும். அந்த வகையில், முட்டையில் ஆம்லெட் போடுவதை போல ஒருவர் மோனலிசா உருவத்தை வரையும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த நிலையில், இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோ குறித்து விரிவாக பார்க்கலாம்.
முட்டையில் மோனலிசா ஓவியம் வரைந்த நபர் – இணையத்தில் வைரலாகும் வீடியோ
சமூக ஊடகங்களின் உதவியால் பலரின் அசாத்திய திறமைகள் உலகிற்கு தெரிய வருகிறது. அந்த வகையில், ஒருவர் முட்டையில் மோனலிசா ஓவியம் வரையும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. பலரும் பல விதமாக மோனலிசா ஓவியத்தை வரைந்து அதனை இணையத்தில் வெளியிட்டு வரும் நிலையில், இந்த நபரின் வீடியோ பலரது கவனத்தையும் பெற்றுள்ளது. பலரும் அவரது அந்த அசாத்திய திறமையை பாராட்டி தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.




இதையும் படிங்க : Viral Video : Pray for us.. லைவில் பார்வையாளர்களுக்கு கோரிக்கை வைத்த செய்தியாளர்!
இணையத்தில் வைரலாகும் வீடியோ
View this post on Instagram
இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோவில் இளைஞர் ஒருவர் ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊத்துகிறார். அதனை பார்க்கும்போது அவர் முட்டையை சமைக்க போவது போல தோன்றுகிறது. ஆனால் அந்த இளைஞர் பாத்திரத்தில் ஊற்றிய முட்டையை ஒரு சிறிய தூரிகை எடுத்து தோசை கல்லில் எதையோ வரைய ஆரம்பிக்கிறார். அவர் மிகவுக் பொருமையாகவும், நிதானமாகவும் அந்த ஓவியத்தை வரைகிறார். முட்டையின் மஞ்சள் கருவை கொண்டு உருவத்தை வரையும் அந்த இளைஞர், அதன் மீது வெள்ளை கருவை ஊற்றுகிறார். அப்போது அதில் மோனலிசா உருவம் தோன்றுகிறது. இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.
இதையும் படிங்க : Viral Video : Porsche-ல் மின்னல் வேகத்தில் பறந்த தாய்.. ஆச்சரியத்தில் வாயடைத்து போன மகன்!
வைரல் வீடியோவுக்கு நெட்டிசன்கள் கருத்து
இந்த வீடியொ இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வரும் நிலையில், பலரும் அந்த இளைஞரின் திறமையை பாராட்டி கருத்து பகிர்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.