Viral Video : மகனின் அமெரிக்க காதலி.. மலர் தூவி மகிழ்ச்சியுடன் வரவேற்ற ஜம்மு & காஷ்மீர் குடும்பம்!
Family Welcomes Son's Girlfriend | பெரும்பாலான இந்திய குடும்பங்களில் வேறு சாதி பெண்ணையோ, ஆணையோ காதலித்தாலே அனுமதிக்கமாட்டார்கள். ஆனால், ஜம்மு & காஷ்மீரை சேர்ந்த குடும்பம் ஒன்று தனது மகனின் வெளிநாட்டு காதலியை மிக உற்சாகமாக வரவேற்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

ஸ்மார்ட்போன்கள் மற்றும் சமூக ஊடகங்களின் உதவியால் நாள்தோறும் ஏராளமான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகும். இந்த வீடியோக்களில் சில நம்மை மகிழ்ச்சிப்படுத்தும் விதமாகவும், சில உணர்ச்சிவசப்படுத்தும் விதமாகவும் இருக்கும். அத்தகைய வீடியோக்களில் ஒன்றுதான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, தனது மகனின் வெளிநாட்டு காதலியை ஜம்மு காஷ்மீரில் உள்ள குடும்ப உறுப்பினர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்கும் வீடியோ தான் அது. இந்த வீடியோ பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அப்படி அந்த வீடியோவில் என்ன தான் இடம்பெற்றுள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
மகனின் காதலியை உற்சாகமாக வரவேற்ற குடும்பத்தினர்
காதல் மனிதர்களின் வாழ்வில் மிகவும் முக்கியமான ஒன்று. காதலிக்காமல் எந்த மனிதராலும் இருக்க முடியாது. மனிதராக பிறந்தவர்கள் அனைவரும் தங்களது வாழ்நாளில் ஒருமுறையாவது காதலிப்பார்கள். ஆனால், இந்தியாவை பொருத்தவரை காதல் திருமணங்கள் குடும்பங்களில் வரவேற்கப்படுவதில்லை. இந்திய பெற்றோர்கள் தங்களது பிள்ளைகள் ஒரே மதம், ஒரே சாதி, ஒரே பிரிவில் திருமணம் செய்ய வேண்டும் என நினைக்கின்றனர். ஆனால், காதல் இவை அனைத்தையும் தாண்டியது. எந்த ஒரு கட்டுப்பாடுகளாலும் காதலை தடுக்க முடியாது. காதலை கடுமையாக எதிர்க்கும் பெற்றோர்களுக்கு மத்தியில், அமெரிக்க காதலியை அழைத்து வந்த தனது மகனையும் அவரது காதலியையும் ஒரு குடும்பம் மிகவும் உற்சாகமாக வரவேற்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.




இதையும் படிங்க : Viral Video : சன்ரூஃபை திறந்து வேடிக்கை பார்த்த சிறுவன்.. அடுத்து காத்திருந்த அதிர்ச்சி.. ஷாக் வீடியோ!
இணையத்தில் வைரலாகும் வீடியோ
View this post on Instagram
இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் இளைஞர் ஒருவர் தனது அமெரிக்க காதலியை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு வருகிறார். அவர்களை அந்த இளைஞரின் மொத்த குடும்பமும் வாசலுக்கு வந்து வரவேற்கின்றனர். ஆரத்தி எடுத்து, மலர் தூவி, இனிப்பு வழங்கி என மிகவும் மன மகிழ்ச்சியுடன் அவர்கள் தங்களது வருங்கால மருமகளை வரவேற்கின்றனர். அதனை பார்க்கும் அந்த வெளிநாட்டு பெண் தனது காதலனின் குடும்பத்தின் அன்பை கண்டு மிகுந்த மகிழ்ச்சிக்கு உள்ளாகிறார். இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.
இதையும் படிங்க : Viral Video : சஃபாரி சென்ற வாகனத்தை ஆக்ரோஷமாக விரட்டிய யானை.. பதைபதைக்க வைக்கும் வீடியோ!
இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், அனைவருக்கு இத்தகைய அன்பான குடும்பம் கிடைக்க வேண்டும் என பலரும் கருத்து பகிர்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.