Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Viral Video : 52 வயதில் MBA பாஸ் செய்த நபர்.. பார்டி வைத்து கொண்டாடிய மகன்.. வைரல் வீடியோ!

52 Year Old Man Earns MBA | இணையத்தில் ஒவ்வொரு நாளும் பல வகையான வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில் இளம் இளைஞர் ஒருவர் 52 வயதில் எம்பிஏ பாஸ் செய்த தனது தந்தைக்கு பார்டி கொண்டாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Viral Video : 52 வயதில் MBA பாஸ் செய்த நபர்.. பார்டி வைத்து கொண்டாடிய மகன்.. வைரல் வீடியோ!
வைரல் வீடியோ
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 07 Sep 2025 23:50 PM IST

கல்வி கற்பதற்கு வயது ஒரு தடையில்லை, யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் கல்வி கற்கலாம். சிலர் கல்வி மீது கொண்ட அதீத பற்று காரணமாக தங்களது வாழ்நாள் முழுவதும் ஏதேனும் படித்துக்கொண்டே இருப்பர். அந்த வகையில் தனது 52வது வயதில் எம்பிஏ (MBA – Master of Business Administration) படித்து முடித்த தந்தைக்காக அவரது மகன் ஏற்பாடு செய்த பார்ட்டியின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வைரல் வீடியோ குறித்து பலரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இந்த நிலையில், வைரல் வீடியோவில் இடம்பெற்றுள்ளது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

52வது வயதில் எம்பிஏ படித்த தந்தை – பார்டி வைத்து கொண்டாடிய மகன்

மும்பையை சேர்ந்த நபர் ஒருவர் தனது 52வது வயதில் எம்பிஏ படிப்பை படித்து முடித்துள்ளார். அந்த வயதிலும் தனது தந்தை மிகவும் கடினமாக படித்து தேர்ச்சி பெற்றதை கொண்டாடும் விதமாக அவரது மகன் அவருக்கு சர்ப்ரைஸ் பார்டி கொண்டாடியுள்ளார். அந்த நபரின் ஒட்டுமொத்த குடும்பமே இந்த பார்ட்டியில் பங்கேற்றுள்ளது. அது தொடர்பான வீடியோ தான் தற்போது இணையத்தில் வெளியாகி மிக வேகமாக வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : குருகிராமில் 1BHK வீட்டின் மாத வாடகை ரூ.1.2 லட்சமா? ரஷ்ய பெண் பகிர்ந்த அதிர்ச்சி தகவல்

இணையத்தில் வைரலாகும் வீடியோ

இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் எம்பிஏ பாஸ் பண்ண அந்த நபர் தனது வீட்டிற்குள் நுழைகிறார். அப்போது வீட்டில் உள்ள அனைவரும் அந்த நபரின் புகைப்படத்தை மாஸ்காக அணிந்துள்ளனர். அதுமட்டுமன்றி, வீடு முழுவதும் பலூன்களை அவர்கள் கட்டி அலங்காரம் செய்துள்ளனர். அந்த வீடே ஒரு கொண்டாட்டமாக காணப்படுகிறது. இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.

இதையும் படிங்க : மன அமைதியே போச்சு…. வங்கி வேலையை விட்ட பெண் – வைரலாகும் வீடியோ

வைரல் வீடியோவுக்கு நெட்டிசன்கள் கருத்து

இந்த வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வரும் நிலையில் பலரும் அது குறித்து தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இப்படி ஒரு குடும்பம் இருந்தால் அனைத்திலும் சாதிக்கலாம் என்று ஒருவர் கருத்து பகிர்ந்துள்ளார். இந்த நபர் தேர்வில் மட்டுமன்றி வாழ்க்கையிலும் வெற்றி பெற்றுவிட்டார் என்று மற்றொருவர் கருத்து தெரிவித்துள்ளார். இவ்வாறு பலரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.