Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Viral Video : Drone மூலம் டெலிவரி செய்யப்பட்ட ஸ்நாக்ஸ்.. அசத்திய வால்மார்ட்.. ஆச்சர்யத்தில் வாடிக்கையாளர்!

Drone Delivers Snacks | இணையத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில் டிரோன் ஒன்று ஸ்நாக்ஸ் பார்சலை வீட்டின் வாசலில் வீசிவிட்டு செல்லும் வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

Viral Video : Drone மூலம் டெலிவரி செய்யப்பட்ட ஸ்நாக்ஸ்.. அசத்திய வால்மார்ட்.. ஆச்சர்யத்தில் வாடிக்கையாளர்!
வைரல் வீடியோ
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 02 Sep 2025 22:36 PM

உலகம் முழுவதும் வீட்டிற்கே சென்று உணவு டெலிவரி (Food Delivery) செய்யும் சேவையை மேலும் எளிதானதாகவும், விரைவானதாகவும் மாற்ற பல நிறுவனங்கள் முயற்சி செய்து வருகின்றன. அந்த வகையில், அமெரிக்காவில் ஒரு தம்பதி ஆன்லைனில் ஸ்நாக்ஸ் ஆர்டர் செய்த நிலையில், அந்த ஸ்நாக்ஸ் டுரோன் மூலம் டெலிவரி செய்யப்பட்டதை கண்டு மிகுந்த ஆச்சர்யத்திற்கு உள்ளாகியுள்ளனர். அவர்கள் வியப்பில் ஆழ்ந்துப்போகும் வீடியோ இணையத்தில் வெளியாகி மிக வேகமாக வைரலாகி வருகிறது. இந்த நிலையில், டிரோன் மூலம் ஸ்நாக்ஸ் டெலிவரி செய்யப்பட்டது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஆன்லைனில் ஸ்நாக்ஸ் ஆர்டர் செய்த தம்பதி

உலக அளவில் கடைசி நேரத்தில் பொருட்களை வீடுகளுக்கே விநியோகம் செய்யும் நிறுவனங்கள், வீடுகளுக்கு பொருட்களை விநியோகம் செய்யும் சேவையை மேலும் விரைவானதாகவும், மக்களை எளிதாக கவரக்கூடிய வகையிலும் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், அமெரிக்காவில் உள்ள பல்பொருள் அங்காடியான வால்மார்ட் (Walmart) ஆன்லைனில் ஸ்நாக்ஸ் ஆர்டர் செய்த தம்பதிக்கு டுரோன் மூலம் உணவு பொருட்களை அனுப்பி வைத்துள்ளது. தற்போது இந்த வீடியோ தான் இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : Viral Video : பேட்மேன் வாகனத்தில் ஊர்வலம் வந்த மாப்பிள்ளை.. வாய் பிளந்த உறவினர்கள்.. வைரல் வீடியோ!

இணையத்தில் வைரலாகும் வீடியோ

 

View this post on Instagram

 

A post shared by Ronald Stahl (@rahn_stahl)

இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோவில் சிறிய ரக விமானம் ஒன்று ஒரு வீட்டை நோக்கி செல்கிறது. அது அந்த வீட்டின் அருகே சென்றதும், ஒரு பார்சலை வீசிவிட்டு மீண்டும் பறக்க தொடங்குகிறது. அந்த பார்சலுக்காக ஒருவர் அந்த வீட்டின் வாசலில் காத்துக்கொண்டு இருக்கிறார். அவர் பார்சல் வந்ததும் அதனை தனது மனைவியிடம் கொடுக்கிறார். அவர்  அதனை பிரித்து பார்க்கும்போது ஒரு நீல நிற அட்டை பெட்டியில் மிகவும் பாதுகாப்பாக ஸ்நாக்ஸ்கள் பேக் செய்யப்பட்டு இருந்தன. இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.

இதையும் படிங்க : Viral Video : காதலனை கட்டிப்பிடித்தபடி பைக்கில் சென்ற இளம் பெண்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!

வைரல் வீடியோவுக்கு நெட்டிசன்கள் கருத்து

இந்த வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வரும் நிலையில், அது குறித்து பலரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அதாவது, டிரோன் மூலம் உணவு டெலிவரி செய்யப்படுவது வரவேற்க கூடிய விஷயம் தான். ஆனால் இவ்வாறு அந்தரத்தில் இருந்து உணவு பொருட்கள் வீசப்படுவது உணவு பொருட்களை சேதப்படுத்தும் என பலரும் கூறி வருகின்றனர்.