Viral Video : காதலனை கட்டிப்பிடித்தபடி பைக்கில் சென்ற இளம் பெண்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!
Couple's Risky Motorbike Ride | இணையத்தில் ஒவ்வொரு நாளும் பல விதமான வித்தியாசமான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், இளம் பெண் ஒருவர் தனது காதலனை கட்டிபிடித்தப்படி செல்லும் வீடியோ இணையத்தில் வெளியாகி கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
 
                                பொதுமக்கள் தங்களது அன்றாட வாழ்வில் சமூக ஊடக செயலிகளை அதிகம் பயன்படுத்தும் நிலையில், உலகின் எந்த மூலையில் ஏதேனும் அசாத்தியாமான மற்றும் ஆச்சர்யமான விஷயங்கள் நடைபெற்றால் அது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகும். இவ்வாறு இணையத்தில் வைரலாகும் வீடியோக்கள் மூலம் குற்றவாளிகள், குற்ற சம்பவங்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிகழ்வுகளும் உள்ளன. இந்த நிலையில், இளம் பெண் ஒருவர் பெட்ரோல் டேங்க் மீது அமர்ந்துக்கொண்டு தனது காதலனை கட்டிப்பிடித்தபடி பயணம் செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
காதலனை கட்டிப்பிடித்படி பைக்கில் சென்ற இளம் பெண்
உத்தர பிரதேசத்தின், கோரக்பூர் பகுதியில் இளம் பெண் ஒருவர் இருசக்கர வாகனத்தின் பெட்ரோல் டேங்க் மீது அமர்ந்துக்கொண்டு தனது காதலனை கட்டிப்பிடித்தபடி பயணம் செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. சாலையில், வாகனத்தில் பயணம் செய்ய வேண்டும் என்றால் அதற்காக சில குறிப்பிட்ட உதவிகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் உள்ளன. இந்த நிலையில், அவர்கள் விதிகளை மீறி பொதுமக்களுக்கு இடையூறாக பயணம் செய்யும் வீடியோவுக்கு கடும் கண்டங்கள் எழுந்து வருகிறது.




இதையும் படிங்க : Viral Video : மினி டிரக் வாகனத்தை முட்டி தள்ளிய யானை.. பதற வைக்கும் வீடியோ!
இணையத்தில் வைரலாகும் வீடியோ
अब गोरखपुर मे देखने को मिला बाइक पर सरे आम रोमांस 👇
आजकल ऐसे अश्लीलता फैलाना बात हो गई
इसलिए पुलिस ने भी ऐसे मामलो को सीरियस मे लेना छोड़ दिया है शायद pic.twitter.com/rfiREOLIO6— दिव्या कुमारी (@divyakumaari) August 23, 2025
இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் இருசக்கர வாகனம் ஒன்று சாலையில் செல்கிறது. அந்த வாகனத்தை இளைஞர் ஒருவர் ஓட்டிச் செல்லும் நிலையில், வாகனத்தின் பெட்ரோல் டேங் மீது அமர்ந்துக்கொண்டு இருக்கும் இளம் பெண் ஒருவர் வாகனம் ஓட்டும் நபரை கட்டி அணைத்தபடி பயணம் செய்கிறார். சாலையில் வாகனங்கள் செல்லும் நிலையில், அவர்கள் எந்த வித கவலையும் இல்லாமல் பயணம் செய்கின்றனர். இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.
இதையும் படிங்க : Viral Video : பாத்திரத்தில் சிறுநீர் கழித்த பணிப்பெண்.. இணையத்தில் வைரலாகும் ஷாக் வீடியோ!
வைரல் வீடியோவுக்கு நெட்டிசன்கள் கருத்து
இந்த வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வரும் நிலையில், பலரும் அது குறித்து தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இத்தகைய செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
 
                         
                    
                       
                      					  
					  
                 
                    
                       
                      					  
					  
                 
                    
                       
                      					  
					  
                 
                    
                       
                      					  
					  
                 
 
                                     
 
                                     
 
                                     
 
                                     
 
                                     
 
                                     
 
                                     
 
                                     
 
                                    