Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Viral Video : மினி டிரக் வாகனத்தை முட்டி தள்ளிய யானை.. பதற வைக்கும் வீடியோ!

Elephant Tosses Mini Truck | இணையத்தில் ஒவ்வொரு நாளும் யானைகள் தொடர்பான பல வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், யானை ஒன்று மினி டிரக் வாகனத்தை முட்டி தள்ளும் வீடியோ வெளியாகி கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அந்த வைரல் வீடியோ குறித்து விரிவாக பார்க்கலாம்.

Viral Video : மினி டிரக் வாகனத்தை முட்டி தள்ளிய யானை.. பதற வைக்கும் வீடியோ!
வைரல் வீடியோ
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 23 Aug 2025 23:51 PM

யானைகள் தொடர்பான வீடியோக்கள் பல இணையத்தில் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், யானை ஒன்று மினி டிரக் வாகனத்தை முட்டி கீழே தள்ளும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. யானைகளின் கோபம் மற்றும் குறுப்புத்தனம் தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வரும் நிலையில், இந்த வீடியோவும் வைரலாகி வருகிறது. இந்த நிலையில், இணையத்தில் வெளியாகி வைரலாகும் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

மினி டிரக் வாகனத்தை முட்டி கீழே தள்ளும் யானை – வைரல் வீடியோ

யானைகள் எந்த அளவுக்கு சாதுவான மிருகங்களாக உள்ளனவோ அதே அளவுக்கு மிகுந்த கோபம் கொண்ட உயிரினங்களும் ஆகும். யானைகளின் கோபத்துக்கு இறையாகிவிட்டால் கடுமையான பாதிப்புகளை சந்திக்க வேண்டி இருக்கும். அந்த வகையில், யானையின் கோபத்துக்கு உள்ளான மினி டிரக் வாகனம் ஒன்று யானையால் பந்தாடப்படும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : இவர் தான் ரியல் ஹீரோ.. கொட்டும் மழையில் விமானத்தை ஸ்மூத் ஆக தரையிறக்கிய விமானி!

இணையத்தில் வைரலாகும் யானையின் வீடியோ

இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோவில், சாலையில் நிற்கும் மினி டிரக் வாகனத்தை யானை ஒன்று மிக கடுமையாக தாக்கிறது. ஒரு கட்டத்தில் ஆத்திரம் தலைக்கேறிய அந்த யானை, மினி டிரக்கை மொத்தமாக முட்டி கீழே தள்ளுகிறது. இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.

இதையும் படிங்க : Viral Video : குழந்தையை போல மகிழ்ச்சியாக பந்து விளையாடிய யானை.. இணையத்தில் வைரலாகும் கியூட் வீடியோ!

வீடியோ குறித்து பதிவிட்ட வனத்துறை அதிகாரி

அந்த வீடியோ குறித்து பதிவிட்டுள்ள வனத்துறை அதிகாரி ஒருவர், வனத்திலிருந்து ஒரு எச்சரிக்கை. யானை மினி டிரக் வாகனத்தை மோதுவது அதன் பலத்தை மட்டும் அல்ல அதன் மன வேதனையையும் வெளிப்படுத்துகிறது. வனம் பொழுதுபோக்குக்கானது அல்ல. அதற்கு மரியாதையும், தனி உரிமையும் வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.