இவர் தான் ரியல் ஹீரோ.. கொட்டும் மழையில் விமானத்தை ஸ்மூத் ஆக தரையிறக்கிய விமானி!
Pilot's Safe Landing of Flight | கனமழை பெய்யும் நேரங்களில் விமானத்தை தரை இறக்குவது சற்று சவாலான காரியமாக இருக்கும். இந்த நிலையில், மும்பையில் கொட்டித் தீர்க்கும் கனமழையின் போது விமானி ஒருவர் விமானத்தை திறம்பட இறக்கிய வீடியோ வைரலாகி வருகிறது.

கனமழையின் போது வானில் விமானங்கள் பறப்பதற்கு சற்று சவாலாக இருக்கும். கனமழை காரணமாக ஆபத்துகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ள நிலையில், வானிலை மோசமாக இருந்தால் விமானங்கள் ரத்து செய்யப்படும். ஒருவேளை விமானம் வானில் பறந்துக்கொண்டு இருக்கும்போது வானிலை மோசமானால் தரை இறங்குவது சவாலானதாக மாறிவிடும். அத்தகைய சவாலான சூழலை விமானி ஒருவர் மிகவும் திறம்பட கையாண்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோ குறித்து பலரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
மோசமான வானிலை – பத்திரமாக விமானத்தை தரையிறக்கிய விமானி
ஒரு விமானம் வானில் பறப்பதற்கு அதன் என்ஜின்கள் எந்த அளவுக்கு முக்கியமோ அதே அளவுக்கு சீரான வானிலையும் முக்கியம் ஆகும். மோசமான வானிலையின் போது விமானங்கள் வானில் பறக்கும் பட்சத்தில் விமானத்தின் இறக்கைகள் சேதம் ஆவது, சிக்னல் கிடைக்காமல் போவது, பாதை மாறுபடுவது உள்ளிட்ட சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக மோசமான வானிலை நிலவும் போது விமானங்கள் ரத்து செய்யப்படும். இந்த நிலையில், மும்பையில் கடந்த சில நாட்களாகவே கனமழை கொட்டித் தீர்த்து வரும் நிலையில், கொட்டும் மழையிலும் விமானத்தை பத்திரமாக தரை இறக்கிய விமானியின் வீடியோ வைரலாகி வருகிறது.




இதையும் படிங்க : Viral Video : பள்ளிக்கு குதிரையில் செல்லும் சிறுவன்.. வியக்கவைக்கும் சுவாரஸ்ய வீடியோ!
இணையத்தில் வைரலாகும் வீடியோ
#Mumbai airport landing in midst of heavy rains. #MumbaiRains Hats off to Captain Mr. Neeraj Sethi for landing safely with less visibility. @airindia VT-TNC pic.twitter.com/khvJTSWnv7
— 🇮🇳 Vidyasagar Jagadeesan🇮🇳 (@jvidyasagar) August 19, 2025
இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோவில் கொட்டும் மழையில் விமானம் தரை இறக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. அதனை பயணிகள் இருக்கையில் இருந்து பயணி ஒருவர் எடுத்துள்ளார். அந்த வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள நபர், மும்பையில் கனமழைக்கு மத்தியில் தரை இறக்கப்பட்ட விமானம். மிகவும் கடினமான சூழலில் விமானத்தை பாதுகாப்பாக தரை இறக்கிய விமானிக்கு பாரட்டுக்கள் என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க : குடும்பத்துடன் சஃபாரி சென்ற 13 வயது சிறுவன்.. மறைந்திருந்து தாக்கிய சிறுத்தை.. ஷாக் வீடியோ!
விமானிக்கு குவியும் பாரட்டுக்கள்
இந்த வீடியோ இணையத்தில் பதிவிடப்பட்டது முதலே மிக வேகமாக வைரலாகி வருகிறது. அந்த விமானி மிகவும் சாமர்த்தியமாக விமானத்தை தரை இறக்கிய நிலையில், அவருக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.