குடும்பத்துடன் சஃபாரி சென்ற 13 வயது சிறுவன்.. மறைந்திருந்து தாக்கிய சிறுத்தை.. ஷாக் வீடியோ!
Leopard Attacks Child | வனபகுதிகளில் இருந்து வெளியேறும் சிறுத்தைகள் பொதுவெளிக்கு வந்து பொதுமக்களை தாக்கும் வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வகையில் உயிரியல் பூங்காவுக்கு குடும்பத்துடன் சுற்றுலா சென்ற சிறுவனை சிறுத்தை தாக்கிய வீடியோ இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது.

பெங்களூரில் உள்ள ஒரு உயிரியல் பூங்காவில் சிறுத்தை ஒன்று சிறுவனை தாக்கிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுவன் தனது குடும்பத்தினருடன் ஜீப்பில் பயணம் செய்துக்கொண்டிருந்தபோது வாகனத்தை பின்தொடர்ந்த சிறுத்தை, சிறுவனை கடுமையாகி தாக்கியுள்ளது. இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி மிக வேகமாக வைரலாகி வருகிறது. இந்த நிலையில், சஃபாரி சென்ற சிறுவனை சிறுத்தை தாக்கியது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
சஃபாரி சென்ற சிறுவனை தாக்கிய சிறுத்தை – அதிர்ச்சி சம்பவம்
பெங்களூரில் உள்ள பன்னர்கட்ட உயிரியல் பூங்காவுக்கு ஆகஸ்ட் 15, 2025 அன்று 13 வயது சிறுவன் ஒருவர் தனது குடும்பத்துடன் சென்றுள்ளார். அங்கு சிறுவன் தனது குடும்பத்துடன் ஜீப்பில் சஃபாரி சென்றுள்ளார். அப்போது உயிரியல் பூங்காவில் இருந்த சிறுத்தை ஒன்று மறைந்திருந்து வாகனத்தில் பயணம் செய்த சிறுவனை தாக்கியுள்ளது. இந்த சம்பவத்தின் வீடியோ தான் தற்போது இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.




இதையும் படிங்க : அருகே சென்று புகைப்படம் எடுக்க முயன்ற நபர்.. விடாமல் துரத்திய யானை.. வைரல் வீடியோ!
இணையத்தில் வைரலாகும் சிறுத்தை தாக்கும் வீடியோ
Leopard attacks 13-year-old at Bannerghatta National Park in Bengaluru during a safari ride.
The incident happened this afternoon and the minor was immediately attended to by the park staff and was then taken to a hospital. He was discharged after treatment. pic.twitter.com/Oc7rEubsNH
— Vani Mehrotra (@vani_mehrotra) August 15, 2025
இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோவில் உயிரியல் பூங்காவில் ஜீப் வாகனம் ஒன்று நின்றுக்கொண்டு இருக்கிறது. பிறகு அந்த வாகனம் மெல்ல புறப்படுகிறது. அப்போது அந்த வாகனத்தில் பின்னால் சிறுத்தை ஒன்று பதுங்கியிருக்கிறது. வாகனம் சற்று நகர்ந்ததும் அந்த சிறுத்தை திடீரென வாகனத்தின் மீது பாய்ந்து ஜன்னல் வழியாக உள்ளே இருப்பவர்களை தாக்குகிறது. இவை அனைத்தும் அந்த ஜீப்பின் பின்னால் சென்ற வாகனத்தில் இருந்து எடுக்கப்பட்ட வீடியோவில் பதிவாகியுள்ளது.
இதையும் படிங்க : Viral Video : இப்படி ஒரு பிரின்சிபல் இருந்தால் யார் தான் ஸ்கூலுக்கு லீவு போடுவாங்க.. வைரலாகும் கியூட் வீடியோ!
பலத்த காயமடைந்த சிறுவன்
இந்த சிறுத்தை தாக்குதலில் ஜீப்பில் பயணித்த 13 வயது சிறுவனின் கைகளில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், பெரிய வித ஆபத்துகள் தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவத்தை தொடர்ந்து உயிரியல் பூங்காவில் கடுமையான விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.