Viral Video : டெலிவரிக்கு சென்ற வீட்டில் மழையில் நனைந்த துணிகள்.. எடுத்து மடித்து வைத்த போஸ்ட்மேன்!
Postman Act of Kindness | ஆஸ்திரேலியாவில் ஒரு வீட்டிற்கு டெலிவரி செய்ய சென்ற இந்திய வம்சாவளி போஸ்ட்மேன் ஒருவர், அங்கு மழையில் நனைந்த துணிகளை எடுத்து மடித்து வைத்துள்ளார். அது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், போஸ்ட்மேனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

சில நேரங்களில் நாம் செய்யும் மிக சிறிய செயல் கூட ஒருவருக்கு மிகப்பெரிய உதவியாக இருக்கும். எனவே எப்போதும் பிறர் இடத்தில் இரக்கத்துடன் நடந்துக்கொள்வது சிறந்த பண்பாக கருதப்படுகிறது. அந்த வகையில், ஆஸ்திரேலியாவில் இரக்கத்துடன் இந்திய வம்சாவளியை சேர்ந்த போஸ்ட்மேன் ஒருவர் செய்த செயல் அவரை உலகம் முழுவதும் புகழ் அடைய செய்துள்ளது. அவருக்கு உலகம் எங்கிலும் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இந்த நிலையில், அந்த போஸ்ட்மேன் அப்படி என்ன செய்தார் இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோவில் என்ன இடம்பெற்றுள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
டெலிவரிக்கு சென்ற இடத்தில் மழையில் நனைந்த துணிகளை மடித்து வைத்த போஸ்ட்மேன்
தற்போது ஆன்லைனில் ஆர்டர் செய்யும் பொருட்கள் வீட்டிற்கே வந்து டெலிவரி செய்யப்படுகிறது. அதற்காக ஏராளமானவர்கள் டெலிவரி ஊழியர்களாக பணியாற்றி வருகின்றனர். அவ்வாறு டெலிவரி ஊழியர்களாக இருப்பவர்கள் தங்களது வேலையை செய்து முடித்துவிட்டி கிளம்பி விடுவர். ஆனால், ஆஸ்திரேலியாவில் ஒரு வீட்டிற்கு டெலிவரி சென்ற போஸ்ட்மேன் ஒருவர் அங்கு மழையில் நனைந்த துணிகளை எடுத்து, மடித்து வைத்துவிட்டு சென்றுள்ளார். அது தொடர்பான வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.




இதையும் படிங்க : Viral Video : சிறுவர்களை துரத்திய தெரு நாய்.. ஹீரோ என்ட்ரி கொடுத்து காப்பாற்றிய ஜெர்மன் ஷெப்பர்ட்!
இணையத்தில் வைரலாகும் போஸ்ட்மேனின் வீடியோ
View this post on Instagram
இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் டெலிவரி மேன் ஒருவர் ஒரு வீட்டிற்கு டெலிவரி செய்ய செல்கிறார். அப்போது திடீரென மழை பெய்ய தொடங்குகிறது. இந்த நிலையில், வீட்டில் காய்ந்துக்கொண்டு இருக்கும் துணிகளை அவர் பார்க்கிறார். உடனடியாக அந்த துணிகளை அவர் எடுத்து வைக்கிறார். இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.
இதையும் படிங்க : Viral Video : சீனாவில் போக்குவரத்தை சரிசெய்யும் ரோபோ.. ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் வீடியோ!
வீடியோ குறித்து பதிவிட்ட பெண்
இந்த வீடியோ குறித்து அந்த வீட்டின் உரிமையாளரான வேண்டல் என்ற பெண் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அது குறித்து கூறியுள்ள அவர், நான் வீட்டிற்கு சென்றுக்கொண்டு இருந்தேன். அப்போது மழை பெய்ததால் வீட்டில் காயப்போட்டிருந்த துணிகள் ஈரமாகி இருக்கும் என நினைத்தேன். ஆனால், வீட்டிற்கு சென்று பார்த்தபோது துணிகள் எடுத்து மடித்து வைக்கப்பட்டு இருந்தன. உடனடியாக நான் சிசிடிவி காட்சிகளை சோதனை செய்தேன். அப்போதுதான் இந்த மனிதர் துணிகளை எடுத்து வைத்ததை தெரிந்துக்கொண்டேன் என்று பதிவிட்டுள்ளார்.