போலீஸ் முன்பு டான்ஸ் ஆடும் பெண் – வைரலாகும் வீடியோ
Viral Video : சமூக வலைதளங்களில் ரீல்ஸ் என்ற பெயரில் சிலர் மோசமான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அப்படி வைரலாகும் ஒரு வீடியோவில் மேற்கு வங்கம் மாநிலத்தில் பெண் ஒருவர் போக்குவரத்து காவல்துறையினர் முன் டான்ஸ் ஆடுகிறார். இது காண்போரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இந்தியாவில் ரீல்ஸ் மோகம் மோசமான நிலையை அடைந்து வருகிறது. சமூக வலைதளங்களில் (Social Media) டிரெண்டாக வேண்டும் என்பதற்காக மக்கள் பல்வேறு சாகசங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் உயிரிழப்புகளும் பொதுமக்களுக்கு பாதிப்புகளும் ஏற்படுகின்றன. இது அவர்களின் பொறுப்பற்ற தன்மயைத் தான் காட்டுகிறது. பொது இடங்களில் இதுபோன்று ரீல்ஸ் எடுப்பதற்கு வலுவான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாக இருக்கிறது. இந்த நிலையில் போக்குவரத்து காவல்துறையினர் முன்பு ஒரு பெண் நடனமாடும் வீடியோ இன்ஸ்டாகிராமில் (Instagram) வைரலாகி வருகிறது. காவல்துறையினர் அந்த பெண்ணை கண்டுகொள்ளாமல் நிற்கின்றனர்.
சமூக ஊடகங்களின் தற்போதைய காலகட்டத்தில், பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. உலகிற்கு முன்னால் தங்கள் திறமையை வெளிப்படுத்த ஒரு கருவியாக சமூக வலைதளங்கள் மாறிவிட்டன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினரும் சமையல், ஓவியம், பாட்டு என தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். இதனால் அவர்களது திறமைகள் சரியாக அங்கீகரிக்கப்பட்டு திரைப்பட வாய்ப்பு பெற்றவர்களும் இருக்கிறார்கள். சில பெண்கள் தங்கள் நடனத் திறமையை வெளிப்படுத்தி மக்களிடம் கவனம் ஈர்த்து வருகின்றனர்.
இதையும் படிக்க : கார் வாங்க பட்ஜெட் இல்லை… ஆட்டோ ஓட்டும் பெங்களூர் பெண் – வைரலாகும் வீடியோ
காவல்துறையினர் முன் டான்ஸ் ஆடும் பெண்
ஆனால் ஒரு சிலர் மோசமான முறையில் பயன்படுத்துகிறார்கள். ரீல்ஸ் என்ற பெயரில் பொது இடங்களில் தவறாக நடந்துகொள்கிறார்கள். இதில் பெண்களும் விதிவிலக்கல்ல. அந்த வகையில் மேற்கு வங்கத்தில் ஒரு பெண், போக்குவரத்து காவலர்கள் முன் எந்த வித பயமும் இன்றி நடனமாடுகிறார். ஆனால் காவல்துறையினர் அந்த பெண்ணை கட்டுப்படுத்த முயற்சிக்கவில்லை.
வைரலாகும் வீடியோ
Leave stray dogs, arrest these Reelers 🤣 #SupremeCourt
— V🐧 (@Vtxt21) August 22, 2025
இதையும் படிக்க : வகுப்பறையில் அமர்ந்து தலைக்கு எண்ணெய் தேய்த்த அரசு பள்ளி ஆசிரியை.. பணியிடை நீக்கம்!
இதுகுறித்து அந்த பெண்ணை தடுக்க முயற்சிக்க வில்லை. அதற்கான காரணம் இதுவரை தெரியவில்லை. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி காண்போரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. காவல்துறையினர் அவரை தடுக்காததை வைத்து பார்க்கும்போது அந்தப் பெண் மதுமயக்கத்தில் இப்படி நடனமாடுகிறாரா அல்லது மனநோய் பாதிக்கப்பட்டவரா என கேள்வி எழுப்பி வருகின்றனர். நெட்டிசன் ஒருவர் உச்சநீதிமன்றம் தெருநாய்களுக்கு எதிராக எடுக்கும் நடவடிக்கைகளில் இதுபோன்ற ரீல்ஸ் எடுப்பவர்களுக்கும் கொஞ்சம் கட்டுப்பாடு விதிக்கலாம் என தெரிவித்து வருகின்றனர். ஹைதராபாத்தில் இது போன்ற பெண் சாலையின் நடுவே காரின் மீது ஏறி நின்று டான்ஸ் ஆடும் சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.