கார் வாங்க பட்ஜெட் இல்லை… ஆட்டோ ஓட்டும் பெங்களூர் பெண் – வைரலாகும் வீடியோ
Inspiring Viral Video: இந்தியாவில் 80 சதவிகிதம் பேர் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்கள் தான். பொருளாதார சூழ்நிலை காரணமாக பெரும்பாலும் தங்கள் ஆசைகளை மனதில் புதைத்துக்கொண்டு தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் பெங்களூருவை சேர்ந்த பெண் ஒருவர் தனது கனவுகளுக்காக வித்தியாசமான வழியைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்.

இந்தியாவில் 80 சதவிகிதம் பேர் நடுத்தர வர்க்கத்தை வர்க்கத்தை சேர்ந்தவர்கள் தான். அவர்களுக்கு மீதமுள்ள 20 சதவிகித பணக்காரர்களைப் போல வாழ ஆசை இருந்தாலும் பொருளாதார சூழல் அவர்களுக்கு தடையாக இருக்கும். ஆனால் ஒரு சிலரே அதற்கு மாற்று வழிகளை தேடுவர். அப்படி ஒரு பெண் தான் சஃபிரா . மிகவும் பரபரப்பான நகரமான கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் (Bengaluru) ஆட்டோ ஓட்டிக்கொண்டிருக்கிறார். தனக்கு கார் (Car) ஓட்டுவதில் மிகவும் விருப்பம் என தெரிவிக்கும் சஃபிரா. தனக்கு கார் வாங்க பட்ஜெட் இல்லை என ஏக்கமாக தெரிவிக்கிறார். ஆனால் அதற்காக அவர் முடங்கி விடவில்லை. அந்த ஆசையை ஆட்டோ ஓட்டி தீர்த்துக்கொள்கிறார். அவரது வீடியோ சமூக வலைதலங்களில் வைரலானதுடன் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
கார் கனவை ஆட்டோ மூலம் நிறைவேற்றிய பெண்
இது தொடர்பாக தமன்னா தன் வீர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இது தொடர்பாக வீடியோ வெளியிட்டுள்ளார். அவரது பதிவில, தான் ஒரு நாள் ஓலா, ராபிடோ போன்ற செயலிகள் கைகொடுக்காத நேரத்தில் சஃபிராவை சந்தித்திருக்கிறார். அவரது ஆட்டோவில் தமன்னா பயணம் செய்தபோது அவருடன் பேசியபடி வந்திருக்கிறார். அந்த வீடியோவில் சஃபிரா தனக்கு கார் ஓட்டுவதில் மிகுந்த ஆர்வம் இருப்பதாக தெரிவிக்கிறார். ஆனால் கார் வாங்கும் அளவுக்கு பட்ஜெட் இல்லை. அப்போது அவரிடம் இருக்கும் பட்ஜெட் மூலம் ஆட்டோ தான் வாங்க முடியும் என முடிவெடுக்கிறார்.




இதையும் படிக்க : என்னை ஏன் திருமணம் செய்தாய்? அமெரிக்க பெண்ணுக்கு பதிலளித்த இந்தியர்
வைரலாகும் சஃபிராவின் வீடியோ
View this post on Instagram
இதனையடுத்து ஆட்டோ வாங்க முடிவெடுக்கிறார். அதன் மூலம் சம்பாதித்து ஆட்டோ வாங்கலாம் என நினைக்கிறார். இதற்காக தனது கார் ஓட்டும் ஆர்வத்தையையே முதலீடாக மாற்றுகிறார். அதாவது மற்ற வேலைகள் செய்யும்போது சலிப்பு ஏற்படும் என சொல்லும் அவர், வாகனம் ஓட்டுவது தனக்கு பிடிக்கும் என்பதால் தனக்கு சலிப்பே ஏற்படவில்லை என்கிறார். அதாவது மற்ற வேலைகள் பார்க்கும்போது திங்கள்கிழமை வந்தால் ஏற்படும் கஷ்டம் இந்த வேலையில் தனக்கு இல்லை எனவும் முழு ஆற்றலுடன் வேலை செய்வதாகவும் அவர் தெரிவிக்கிறார்.
இதையும் படிக்க : அருகே சென்று புகைப்படம் எடுக்க முயன்ற நபர்.. விடாமல் துரத்திய யானை.. வைரல் வீடியோ!
இந்த வீடியோ கடந்த ஆகஸ்ட் 18, 2025 அன்று @tamannapasha_official இன்ஸ்டாகிராம் ஹேண்டில் இருந்து பகிரப்பட்ட இந்த வீடியோ 9 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். மேலும் மக்கள் சஃபிராவை பாராட்டு தெரிவித்து வருகின்றனர். ஒரு பயணர், வாழ்க்கை குறித்த பழைய பிற்போக்குத்தனங்களை உடைத்ததற்காக உங்களை பாராட்டுகிறேன் என்று கருத்து தெரிவித்தார். இன்னொருவர், உங்கள் புன்னகையில் நிறைய புத்துணர்ச்சி இருக்கிறது. உன் கனவுகள் எல்லாம் நனவாகட்டும் என்றார்.