Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

அதிரடியாக குறையும் பைக் கார்களின் விலை? – ஜிஎஸ்டி குறித்து வெளியான தகவல்

GST Relief Ahead : இந்தியாவில் கார்கள், எஸ்யுவி ரக கார்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட ஜிஎஸ்டி வரி குறைய வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் பைக் மற்றும் கார்களின் விற்பனை அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

அதிரடியாக குறையும் பைக் கார்களின் விலை? – ஜிஎஸ்டி குறித்து வெளியான தகவல்
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 17 Aug 2025 22:11 PM

இந்தியாவில் கார்கள் (Car), எஸ்யூவி மற்றும் இரு சக்கர வாகனங்கள் வாங்க விரும்பும் மக்களுக்கு விரைவில் மிகப்பெரிய வரி தளர்வு கிடைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  இந்தியாவின் பொருட்களின் விலையை தீர்மானிப்பதில் ஜிஎஸ்டி (GST) முக்கிய பங்கு வகிக்கிறது. இந்திய அரசு புதிய சரக்கு மற்றும் சேவையில் மாற்றம் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் புதிதாக வாகனம் வாங்குபவர்களுக்கு வரி சலுகை கிடைக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து கார்கள் மற்றும் பைக் வாங்குபவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தகவல் மக்களிடையே மிகவும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து இந்த கட்டுரையில் விரைவாக பார்க்கலாம்.

தற்போதைய வரி நிலைமை

இந்தியாவில் தற்போது சிறிய கார்களுக்கு 28 சதவிகிதம் ஜிஎஸ்டி வரி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதே போல எஸ்யுவி கார்கள் அதிகபட்சம் 50 சதவிகிதம் ஜிஎஸ்டி வரி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வாகனங்கள் வாங்கும்போது பெரிய சுமையாக இருந்து வந்தது.  மேலும் சமீபத்தில் வெளியான தகவலின் படி, ஜிஎஸ்டி  வரிவிதிப்பில் எஸ்யுவி வழங்கப்பட்ட தனிப்பட்ட வரையறையை மத்திய அரசு நீக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மற்ற கார்களோடு எஸ்யுவி வகை கார்களுக்கும் வரி திட்டமிடப்படும். இதன் மூலம் குழப்பங்கள் தவிர்க்கப்படும்.

இதையும் படிக்க : வரி குறைப்பு முதல் வேலைவாய்ப்பு வரை.. சுதந்திர தினத்தில் பிரதமர் மோடி வெளியிட்ட டாப் அறிவிப்புகள்!

புதிய ஜிஎஸ்டி அமைப்பு

புதிய வரி அமைப்பில் இரண்டு வகைகள் இருக்கும் என்று கூறப்படுகிறது. அதில் முதல்வதாக மெரிட் கேட்டகிரயில் அதிகபட்சம் ஜிஎஸ்டி வரி 5 சதவிகிதமாக இருக்கும். இரண்டாவதாக ஸ்டேண்டர்டு கேட்டகிரி. இதில் ஜிஎஸ்டி வரி அதிக பட்சமாக 18 சதவிகிதமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த புதிய நடைமுறை இந்தியாவின் கார், இருசக்கர வாகன சந்தைக்கு மிகப்பெரிய உதவியாக இருக்கும் என கூறப்படுகிறது. இதன் மூலம் இந்தியாவில் கார் மற்றும் இரு சக்கர வாகனங்கள் அதிக அளவில் விற்பனையாகும் எனவும் இதன் மூலம் இந்தியாவில் முதலீட்டு வாய்ப்புகள் அதிகரிக்கும் எனவும் கூறப்படுகிறது.

பிரதமர் நரேந்திர மோடி தனது சுதந்திர தன உறையில் கார்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களுக்கு வரி குறையும்  என்பதை சுட்டிக்காட்டி பேசினார். அதோடு ஏர் கண்டிஷனர் மற்றும் கட்டுமானப்பொருட்களுக்கு ஜிஎஸ்டி குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிக்க : உலகில் நடக்கும் நேரடி பணப் பரிவர்த்தனைகளில் 50% யுபிஐ.. பிரதமர் மோடி பெருமிதம்!

யாருக்கு அதிக நன்மை?

இதன் மூலம் ரூ.10 லட்சத்திற்கு குறைவான சிறிய கார்கள் வாங்க விரும்பும் பயனர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் அடிப்படை விலையில் உள்ள பைக் வாங்க நினைப்பவர்களுக்கும் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் எலக்ட்ரிக் கார்களுக்கு தற்போது உள்ள போலவே 5 சதவிகிதம் ஜிஎஸ்டி தொடரும் என்று கூறப்படுகிறது. அதே நேரம் விலையுர்ந்த கார்களுக்கு இந்த வரி சலுகை கிடைக்கும் வாய்ப்பு குறைவு என்று கூறப்படுகிறது.

இதனால் ஆட்டோ மொபைல் துறைக்கு மிகப்பெரும் நன்மை காத்திருக்கிறது. காரணம் ஜிஎஸ்டி வரி குறைந்தால் உற்பத்தி செலவு குறையும். உதிரி பாகங்களின் விலைகள் குறையும். இதனால் விற்பனைக்கு அதிகரிக்கும். உற்பத்தி துறை வளர்ச்சி பெறும். இந்த புதிய ஜிஎஸ்டி வரி திட்டம் தீபாவளிக்குள் நடைமுறைக்கு வரும் என்று கூறப்படுகிறது.