Viral Video : வகுப்பறையில் அமர்ந்து தலைக்கு எண்ணெய் தேய்த்த அரசு பள்ளி ஆசிரியை.. பணியிடை நீக்கம்!
Uttar Pradesh Government Teacher Suspended | உத்தர பிரதேசத்தை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அந்த ஆசிரியர் வகுப்பறையில் அமர்ந்து தனது தலையில் எண்ணெய் தேய்க்கும் வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலான நிலையில், அது குறித்து அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்த வைரல் வீடியோ குறித்து விரிவாக பார்க்கலாம்.

உத்தர பிரதேசத்தில் (Uttar Pradesh) மாணவர்களுக்கு பாடம் நடத்தாமல் வகுப்பறையில் அமர்ந்து தலையில் எண்ணெய் தேய்த்துக்கொண்டிருந்த பெண் ஆசிரியர் ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஆசிரியர் இவ்வாறு பொறுப்பற்ற முறையில் நடந்துக்கொள்ளும் வீடியோ இணையத்தில் வெளியான நிலையில், அது குறித்து அரசு துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த நிலையில், இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோவில் என்ன இடம்பெற்றுள்ளது அந்த பெண் ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதற்கான காரணம் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
வகுப்பறையில் அமர்ந்து தலையில் எண்ணெய் தேய்த்த அரசு பள்ளி ஆசிரியர்
இந்தியாவை பொருத்தவரை அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அதிகாரிகள் பொறுப்பற்று நடந்துக்கொள்வது தொடர்கதையாகி வருகிறது. இது தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் அவ்வப்போது வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வகையில் அரசு பள்ளியில் பணியாற்றும் பெண் ஆசிரியர் ஒருவர் மாணவர்களுக்கு பாடம் நடத்தாமல் இந்தி பாடல்களை கேட்டுக்கொண்டு தலையில் எண்ணெய் தேய்க்கும் வீடியோ வெளியாகி கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.




இதையும் படிங்க : ரூ.4 கோடி மதிப்பிலான ஃபெராரி காரை சாண்டிலியிராக பயன்படுத்தும் யூடியூபர்? வைரலாகும் வீடியோ!
இணையத்தில் வைரலாகும் ஆசிரியரின் வீடியோ
🚨 A primary teacher in Uttar Pradesh’s Bulandshahr has been suspended after a video showed her oiling her hair and playing Bollywood songs inside a government school classroom. pic.twitter.com/9juiKHxLUa
— Indian Tech & Infra (@IndianTechGuide) July 22, 2025
இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோவில் அரசு பள்ளி வகுப்பறை ஒன்றில் மாணவர்கள் அனைவரும் அமர்ந்துக்கொண்டு இருக்கின்றனர். அந்த வகுப்பறையில் அமர்ந்திருக்கும் பெண் ஆசிரியர் ஒருவர் மாணவர்களுக்கு பாடம் நடத்தாமல் நாற்காலியில் அமர்ந்துக்கொண்டு தலையில் எண்ணெய் தேய்த்துக்கொண்டு இருக்கிறார். அதுமட்டுமன்றி அவர் வகுப்பறையில் அமர்ந்துக்கொண்டு மிகவும் சத்தமாக இந்தி பாடல்களை கேட்டுக்கொண்டு இருக்கிறார். இதனை யாரோ ஒருவர் வகுப்பறையின் வெளியே நின்று வீடியோ எடுத்துள்ளனர். தற்போது இந்த வீடியோ தான் இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க : Viral Video : இதுதான் உண்மையான நட்பு.. கண் தெரியாத பூனையுடன் விளையாடும் நாய் குட்டி.. வியக்கும் இணையவாசிகள்!
வைரல் வீடியோவுக்கு நெட்டிசன்கள் கருத்து
இந்த வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வரும் நிலையில், பலரும் அது குறித்து தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். குறைவாக ஊதியம் பெறும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு இருக்கும் பொறுப்பு கூட அதிக சம்பளம் பெறும் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு இருப்பதில்லை என்று ஒருவர் பதிவிட்டுள்ளார். இத்தகைய செயல்களில் ஈடுபடும் ஆசிரியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மற்றொருவர் பதிவிட்டுள்ளார். இவ்வாறு பலரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.