Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Viral Video : பேட்மேன் வாகனத்தில் ஊர்வலம் வந்த மாப்பிள்ளை.. வாய் பிளந்த உறவினர்கள்.. வைரல் வீடியோ!

Groom Arrives in Batmobile | இந்தியர்கள் மிகவும் கோலாகலமாக தங்களது திருமணத்தை நடத்துவர். அவ்வாறு பிரம்மாண்டமாக நடத்தப்படும் திருமணங்கள் தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகும். அந்த வகையில், இந்திய மனமகன் ஒருவர் பேட்மேன் வாகனத்தில் ஊர்வலம் வரும் வீடியோ வைரலாகி வருகிறது.

Viral Video : பேட்மேன் வாகனத்தில் ஊர்வலம் வந்த மாப்பிள்ளை.. வாய் பிளந்த உறவினர்கள்.. வைரல் வீடியோ!
வைரல் வீடியோ
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 28 Aug 2025 00:53 AM

இந்திய திருமண விழாக்களில் கொண்டாட்டங்களுக்கு பஞ்சமே இருக்காது. ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என அன்றைய தினத்தை வெகு சிறப்பாக கொண்டாடுவார்கள். ஒவ்வொருவரும் தங்களது திருமண விழாவை தங்களுக்கு பிடித்து முறையில் மிகவும் வித்தியாசமாக கொண்டாடுவர். அதாவது அவர்கள் தங்களது நீண்ட நாள் ஆசைகளை அன்றைய தினத்தில் பூர்த்தி செய்துக்கொள்வர். அந்த வகையில், இந்தியர் ஒருவர் தனது திருமணத்திற்கு பேட்மேன் வாகனத்தில் ஊர்வலம் வந்த வீடியோ இணையத்தில் வெளியாகி மிக வேகமாக வைரலாகி வருகிறது.

பேட்மேன் வாகனத்தில் ஊரவலம் சென்ற மாப்பிள்ளை

இந்திய கலாச்சாரத்தை பொருத்தவரை திருமணங்கள் மிக முக்கியமானவையாக கருதப்படுகிறது. அதன் காரணமாக திருமணங்கள் மிக சிறப்பாக கொண்டாடப்படுகின்றன. ஆடை, அணிகலன்கள், தோரணைகள், பாடல் என பல சிறப்பு அம்சங்கள் இந்த இந்திய திருமணங்களில் இடம்பெற்று இருக்கும். இத்தகைய கொண்டாட்டங்கள் மிகுந்த இந்திய திருமணங்களில் வித்தியாசமான திருமணங்கள் குறித்த வீடியோக்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், திருமண விழாவில் மாப்பிள்ளை பேட்மேன் வாகனத்தில் வரும் வீடியோ வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : Viral Video : ஆற்றில் வட்டமேசை மாநாடு நடத்திய ஆமைகள்.. இணையத்தில் வைரலாகும் வியப்பூட்டும் வீடியோ!

இணையத்தில் வைரலாகும் வீடியோ

 

View this post on Instagram

 

A post shared by Friends Studio (@friendsstudio.in)

இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் வெள்ளை நிற உடை அணிந்த மனமகன் கருப்பு நிற வாகனத்தில் ஊர்வலம் வருகிறார். அந்த வாகனத்தில் அப்படி என்ன சிறப்பு என கேட்கலாம். நிச்சயம் அந்த வாகனத்தில் சிறப்பு உள்ளது. அது பேட்மேன் திரைப்படத்தில் வரும் வாகனம் ஆகும். அது ஒரு பேண்டசி திரைப்படம் என்பதால் அந்த வாகனம் மிகவும் புகழ்பெற்றதாக உள்ளது. இந்த நிலையில், அத்தகைய சிறப்பு வாய்ந்த வாகனத்தில் மாப்பிள்ளை வந்து இறங்கிய நிலையில், அங்கு கூடியிருக்கும் மாப்பிள்ளையின் உறவினர்கள் உற்சாகத்தில் கத்துகின்றனர். இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : Viral Video : டெலிவரிக்கு சென்ற வீட்டில் மழையில் நனைந்த துணிகள்.. எடுத்து மடித்து வைத்த போஸ்ட்மேன்!

வைரல் வீடியோவுக்கு நெட்டிசன்கள் கருத்து

இந்த வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வரும் நிலையில், அது குறித்து பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். பலரது கனவை அந்த நபர் தனது திருமணத்தின் போது நிறைவேற்றியுள்ளார் என்று பலரும் கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.