RAC டிக்கெட் வைத்திருக்கும் பயணிகளிடம் முழு கட்டணம் வசூலிக்கப்பட்டும், பயணத்தின் போது முழு படுக்கை வசதி வழங்கப்படாத நிலையில், அவர்களுக்கு பகுதி கட்டணத் திருப்பிச் செலுத்தல் வழங்கும் முறையை உருவாக்க வேண்டும் என பாராளுமன்ற பொது கணக்குகள் குழு ரயில்வே அமைச்சகத்திற்கு பரிந்துரை செய்துள்ளது. ‘இந்திய ரயில்வேயில் ரயில் இயக்க நேர்த்தியும் பயண நேரமும்’ என்ற அறிக்கையை பிப்ரவரி 4ஆம் தேதி பாராளுமன்றத்தில் தாக்கல் செய்த PAC, முழு படுக்கை வழங்கப்படாத RAC பயணிகளிடம் முழு கட்டணம் வசூலிப்பது நியாயமற்றது என குறிப்பிட்டுள்ளது.