Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Viral Video : ஆற்றில் வட்டமேசை மாநாடு நடத்திய ஆமைகள்.. இணையத்தில் வைரலாகும் வியப்பூட்டும் வீடியோ!

Turtles Forming a Circle in River | இணையத்தில் ஒவ்வொரு நாளும் பல வித்தியாசமான மற்றும் வியப்பூட்டும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், ஆற்றில் ஆமைகள் வட்டமாக நின்றுக்கொண்டு இருக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Viral Video : ஆற்றில் வட்டமேசை மாநாடு நடத்திய ஆமைகள்.. இணையத்தில் வைரலாகும் வியப்பூட்டும் வீடியோ!
வைரல் வீடியோ
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 24 Aug 2025 23:37 PM

இயற்கை பல்வேறு அதிசயங்களை தன்னுள் கொண்டுள்ளது. அவ்வாறு இயற்கையில் உள்ள  அதிசயங்கள் நம்மை அவ்வப்போது ஆச்சர்யப்படும். அந்த வகையில், ஆமைகள் சில ஆற்றில் வட்டமாக நின்றுக்கொண்டு இருக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அது பார்ப்பதற்கு மிகவும் அசாத்தியமாகவும், ஆச்சர்யமாகவும் உள்ளது. இந்த நிலையில், இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோ குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஆற்றில் வட்டமாக நின்றுக்கொண்டு இருந்த ஆமைகள்

உலகில் எந்த மூலையில் ஏதேனும் ஆசாத்தியாமான மற்றும் ஆச்சர்யமான சம்பவங்கள் நடைபெற்றாலும் அது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், ஆமைகள் சில ஆற்றில் வட்டமாக நின்றுக்கொண்டு இருக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. மிகவும் அசாத்தியாமான இந்த நிகழ்வு அடங்கிய வீடியோ இணையத்தில் வைரலாகும் நிலையில், பலரும் அது குறித்து வியந்து தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

இதையும் படிங்க : Viral Video : டெலிவரிக்கு சென்ற வீட்டில் மழையில் நனைந்த துணிகள்.. எடுத்து மடித்து வைத்த போஸ்ட்மேன்!

இணையத்தில் வைரலாகும் வீடியோ

இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் ஆறு ஒன்று இருக்கிறது. அந்த ஆற்றின் கரையில் சில ஆமைகள் உள்ளன. ஆனால் அந்த ஆமைகள் சாதாரனமானவையாக தோன்றவில்லை. காரணம், அந்த ஆமைகள் வட்டமாக நின்றுக்கொண்டு இருக்கின்றன. சில ஆமைகள் சுற்றி வட்டமாக நின்றுக்கொண்டு இருக்கும் நிலையில், அந்த வட்டத்திற்கு நடுவே இரண்டு ஆமைகள் நின்றுக்கொண்டு இருக்கின்றன. மிகவும் அரிதான காட்சிகள் அடங்கிய இந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : இவர் தான் ரியல் ஹீரோ.. கொட்டும் மழையில் விமானத்தை ஸ்மூத் ஆக தரையிறக்கிய விமானி!

வைரல் வீடியோவுக்கு நெட்டிசன்கள் கருத்து

இந்த வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வரும் நிலையில், பலரும் அது குறித்து தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அந்த ஆமைகள் ஏதோ பெரிய திட்டம் தீட்டுகின்றன என்று ஒருவர் கருத்து பகிர்ந்துள்ளார். இது தான் ஆமைகளின் வட்ட மேசை மாநாடு என ஒருவர் கருத்து பகிர்ந்துள்ளார். இவ்வாறு பலரும் அந்த வீடியோ குறித்து நகைச்சுவையாகவும், வியந்தும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.