Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

குருகிராமில் 1BHK வீட்டின் மாத வாடகை ரூ.1.2 லட்சமா? ரஷ்ய பெண் பகிர்ந்த அதிர்ச்சி தகவல்

Viral Video : குருகிராமில் வசிக்கும் ரஷ்ய பெண் தன் மாதாந்திர செலவுகளை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துகொண்டுள்ளார். அதில் அவர் 1 BHK வீட்டுக்கு மாத வாடகையாக ரூ.1.2 லட்சம் அளிப்பதாக குறிப்பிட்டுள்ளார். இந்த தகவல் நெட்டிசன்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து விவரமாக பார்க்கலாம்.

குருகிராமில் 1BHK வீட்டின் மாத வாடகை ரூ.1.2 லட்சமா? ரஷ்ய பெண் பகிர்ந்த அதிர்ச்சி தகவல்
குருகிராமில் ரூ.1 லட்சம் வாடகை செலுத்தும் ரஷ்ய பெண்
Karthikeyan S
Karthikeyan S | Published: 04 Sep 2025 22:20 PM IST

ஹரியானா மாநிலம் குருகிராமில் வசிக்கும் ஒரு ரஷ்ய பெண் தனது மாதாந்திர செலவுகளை இன்ஸ்டாகிராம் (Instagram) பக்கத்தில் பகிர்ந்து அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளார். அந்தப் பெண் தனது 1BHK  வீட்டுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.1.2 லட்சம் வாடகை செலுத்துவதாகக் கூறுகிறார்.  அவரது பதிவு வைரலாகி வரும் நிலையில், பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.  குருகிராமில் வாழ்வது உண்மையில் மிகவும் விலை உயர்ந்ததா அல்லது இந்த பெண் தனது விருப்பப்படி இவ்வளவு செலவு செய்கிறாரா என சமூக வலைதளங்களில் பெரும் விவாதமே தொடங்கியுள்ளது.

வீட்டு வாடகை ரூ.1.2 லட்சமா?

ரஷ்யாவை சேர்ந்த விக்டோரியா கோவன் தனது @meowvi.vi  என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவை வெளியிட்டுள்ளார்.  அதில் அவர் தனது மாதாந்திர செலவுகளின்  பட்டியலை பகரிந்தார். அந்தப் பெண்ணின் கூற்றுப்படி, அவர்  ரூ.1.2 லட்சம் பிளாட் வாடகையைச் செலுத்துகிறார். மேலும் உபர் கேப் சேவைக்கு ஒரு பயணத்திற்கு சுமார் ரூ.1,000, ஒரு உணவகத்தில் மதிய உணவிற்கு சுமார் ரூ.2,500 மற்றும் மின்சாரக் கட்டணத்திற்கு ரூ.15,000 செலுத்துகிறார்.

இதையும் படிக்க : ஸ்விக்கியை மிஸ் செவேன்.. அமெரிக்க பெண் வெளியிட்ட வீடியோ வைரல்!

இது தவிர, அவர் ஷாப்பிங்கிற்காக செலவிட்ட தொகையை பகிர்ந்து கொண்டிருக்கிறார். அங்கு அவர் ரூ.30,000 செலவிடுகிறார். அதே நேரத்தில், அவர் மருந்துகளுக்கு ரூ.20,000 மற்றும் அழகு சாதனப் பொருட்களுக்கு ரூ.15,000 செலவிட்டார். இது தவிர, அவர் ரூ.40,000 மளிகைப் பொருட்களுக்கு செலவிட்டார், இது இன்னும் அதிர்ச்சியை ஏற்படுவதாக அமைந்துள்ளது.

இதில் ஹைலைட்டாக ரஷ்யப் பெண் தனது வீடியோவில், இந்தியாவில் வாழ்வது மலிவானது என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால் உண்மை என்னவென்றால், குருகிராமில் ஒரு நல்ல வாழ்க்கை வாழ மிகவும் அதிகம் செலவு செய்ய வேண்டியிருக்கும்.

வைரலாகும் ரஷ்ய பெண்ணின் வீடியோ

 

 

View this post on Instagram

 

A post shared by Viktoriia Kovan (@meowvi.vi)

இருப்பினும், இந்த வீடியோ வைரலானவுடன், நெட்டிசன்கள் அந்தப் பெண்ணை ட்ரோல் செய்யத் தொடங்கினர். பெரும்பாலான மக்கள் அவர் தேவையற்ற மற்றும் விலையுயர்ந்த பொருட்களுக்கு அதிகமாகச் செலவிடுகிறார் என்று கமெண்ட் செய்துள்ளனர்.

இதையும் படிக்க : பேட்மேன் வாகனத்தில் ஊர்வலம் வந்த மாப்பிள்ளை.. வாய் பிளந்த உறவினர்கள்.. வைரல் வீடியோ!

ஒரு பயனர், உங்கள் வீட்டு உரிமையாளர் உங்களைக் கொள்ளையடிக்கிறார் என்று கருத்து தெரிவித்தார். மற்றொருவர், 15 ஆயிரம் மின்சாரக் கட்டணமா? என ஆச்சரியம் தெரிவித்துள்ளார்.  வாடகை அதிகமாக இருந்தால், குறைந்த வாடகைக்கு ஒரு அடுக்குமாடி குடியிருப்பைத் தேடுங்கள் என்று அட்வைஸ் செய்துள்ளார்.  மற்றொரு பயனர், நீங்கள் சொர்க்கத்தில் வசிக்கிறீர்களா? என்று கேட்டார். அதே நேரத்தில், பல நெட்டிசன்கள், அந்தப் பெண்ணின் செலவுகள் என்பது உண்மையானது அல்ல.  அவர் தனது  சொந்த விருப்பத்தின் பேரில் செலவு செய்துள்ளார் எனக் குறிப்பிட்டுள்ளார்.