ஸ்விக்கியை மிஸ் செவேன்.. அமெரிக்க பெண் வெளியிட்ட வீடியோ வைரல்!
American Mom's Video Goes Viral | வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டவர்கள் பலர் இந்தியாவில் உள்ள ஸ்விக்கி, சொமேட்டோ உள்ளிட்ட சேவைகளை கண்டு வியப்படைவது வழக்கம். அந்த வகையில், அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் ஸ்விக்கியை மிஸ் செய்ய போவதாக பதிவிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.

இந்தியாவில் இருந்து கிளம்பும் வெள்நாட்டு பெண் ஒருவர் தான் இந்தியாவில் இருந்து சென்றதும் ஸ்விக்கியை (Swiggy) மிஸ் செய்ய போவதாக வீடியோ வெளியிட்டுள்ளார். தற்போதைய காலக்கட்டத்தில் ஸ்விக்கி, சொமேட்டோ (Zomato) உள்ளிட்ட டெலிவரி நிறுவனங்கள் பொதுமக்களின் வாழ்வில் ஒரு முக்கிய அங்கமாக மாறிவிட்டன. தங்களது அத்தியாவசிய தேவைகளுக்கு பொதுமக்கள் பெரும் அளவில் இந்த செயலிகளையே நம்பியுள்ளனர். இந்த நிலையில், இந்தியர்கள் மட்டுமன்றி வெளிநாட்டு பெண்ணும் ஸ்விக்கி சேவையை மிஸ் செய்ய போவதாக கூறியுள்ளது இணையத்தில் கவனத்தை பெற்று வருகிறது.
ஸ்விக்கியை மிஸ் செய்வேன் – வீடியோ வெளியிட்ட வெளிநாட்டு பெண்
ஏராளமான வெளிநாட்டவர்கள் தங்களது நாட்டில் இருந்து இந்தியாவுக்கு வர விரும்புகின்றனர். இந்திய கலாச்சாரம், வாழ்வாதாரம், காலநிலை உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் ஈர்க்கப்படும் அவர்கள் இந்தியாவுக்கு வருகின்றனர். அந்த வகையில் இந்தியாவில் தனது குழந்தைகள் மற்றும் கணவருடன் தங்கியிருந்த வெளிநாட்டு பெண் ஒருவர், தான் இந்தியாவில் இருந்து கிளம்புவது குறித்து உருக்கமான வீடியோ ஒன்றை அவர் பதிவிட்டுள்ளார். அதில் அவர் ஸ்விக்கியை குறித்துதான் முக்கியமாக பேசியுள்ளார்.




இதையும் படிங்க : Viral Video : பெங்களூரில் ஆட்டோ ஓட்டும் இளம் பெண்.. காரணம் இதுதான்.. சுவாரஸ்ய கதை!
இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ
View this post on Instagram
நான் அமெரிக்காவை சேர்ந்த தாய், இந்தியாவில் வசிக்கிறேன். இந்தியாவில் நான் வசிக்கும் கடைசி நாள் இதுதான். நாங்கள் நாளைக்கு கிளம்புகிறோம். அதனால், இதுதான் என் கடைசி நாள். நான் எனது குழந்தைகளை தயார்படுத்திவிட்டு, என்னுடைய கடைசி ஸ்விக்கி ஆர்டரை பெற்றுக்கொண்டேன். நான் ஸ்விக்கியை மிஸ் பண்ணுவேன் என்று கூறியுள்ளார். இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.
இதையும் படிங்க : மெட்ரோ தண்டவாளத்தில் விழுந்த பாதுகாவலர் …. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ
இந்தியாவில் இருப்பதை போல பல உலக நாடுகளில் வீட்டிற்கே வந்து மளிகை பொருட்களை வழங்கும் ஸ்விக்கி, சொமேட்டோ உள்ளிட்ட சேவைகள் இல்லை. இதன் காரணமாக, இந்தியவுக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஸ்விக்கி, சொமேட்டோ சேவைகளை கண்டு வியந்து வீடியோ பதிவிடுவர். அந்த வகையில், அந்த பெண் தான் ஸ்விக்கியை மிஸ் செய்யபோவதாக பதிவிட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது குறிப்பிடத்தக்கது.