வெள்ளத்தில் ஜீப்போடு அடித்து செல்லப்பட்ட இளைஞர்கள் – வைரலாகும் வீடியோ
Shocking Visuals : பஞ்சாபில் கடந்த நான்கு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் மாநிலம் முழுவதும் கடுமையான வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதன் ஒரு பகுதியாக போலீசாரின் எச்சரிக்கையையும் மீறி இளைஞர்கள் ஜீப்பில் சென்ற நிலையில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர்.

நம் நாட்டில் ஒரு சிலர் என்ன வேலை செய்யாதீர்கள் என சொல்கிறார்களோ அதைத் தான் செய்கிறார்கள். இப்படி செய்வதன் மூலம் அவர்கள் சிக்கலில் மாட்டியும் கொள்கிறார்கள். அரசின் பேச்சைக் கேட்டு ரூல்ஸை சரியாக கடைபிடித்தாலே எந்த பிரச்னையும் இருக்காது. அப்படி ஒரு சம்பவம் தான் பஞ்சாபில் (Punjab) நடந்திருக்கிறது. சாலையில் வெள்ளமாக மழை நீர் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் யாரும் தேவையில்லாமல் வெளியே வரவேண்டாம் என அரசு எச்சரிக்கைவிடுத்திருந்தது. இந்த நிலையில் அரசின் பேச்சை பொருட்படுத்தாமல் இளைஞர்கள் பயமில்லாமல் சாலையில் தேங்கியுள்ள நீரில் ஜீப் ஒன்றை எடுத்து செல்கிறார்கள். ஒரு கட்டத்தில் அவர்கள் சென்ற ஜீப் நீரில் அடித்து செல்லப்படுகிறது. இந்த சம்பம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கனமழை காரணமாக பஞ்சாபில் கடும் பாதிப்பு
பஞ்சாபில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக பெரும்பாலான பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. மாநிலத்தின் ஆறுகள் மற்றும் கால்வாய்கள் நிரம்பி வழிகின்றன. இதனால் மக்கள் வசிக்கும் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இந்த சூழலில், கடந்த ஆகஸ்ட் 24, 2025 அன்று பருவகால நதி நிரம்பி வழிகிறது. இதன் காரணமாக, முல்லன்பூர் – ஜாந்தி சாலையில் வெள்ள நீர் ஆபத்தான முறையில் பாய்கிறது. இதன் காரணமாக, அந்த சாலையில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. மக்கள் யாரும் அந்த சாலையில் பயணிக்க வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த வரிசையில், ஜீப்பில் வந்த இரண்டு இளைஞர்கள், காவலர்களின் அறிவுரையை மீறி ஆபத்தான முறையில் ஓடும் சாலையைக் கடக்க முயன்றனர்.




இதையும் படிக்க : பள்ளிக்கு குதிரையில் செல்லும் சிறுவன்.. வியக்கவைக்கும் சுவாரஸ்ய வீடியோ!
வைரலாகும் இளைஞர்களின் வீடியோ
चंडीगढ़ में जयंती देवी नदी के पास बाढ़ के पानी से जबरदस्ती निकलने की कोशिश में एक जीप बह गई। इसमें सवार लोगों ने जैसे–तैसे जान बचाई। pic.twitter.com/32j0QF7uKT
— Sachin Gupta (@SachinGuptaUP) August 24, 2025
அவர்கள் தங்கள் ஜீப்பை ஸ்டார்ட் செய்து சிறிது தூரம் ஓட்டிச் சென்றனர். இதற்கிடையில், நீர் ஓட்டம் மேலும் அதிகரித்ததால் அவர்களால் ஜீப்பை கட்டுப்படுத்த முடியவில்லை. ஒரு கட்டத்தில் ஜீப் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டது. அதைக் கவனித்த உள்ளூர்வாசிகள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். அங்கு விரைந்த அதிகாரிகள், இரண்டு இளைஞர்களுடன் சேர்ந்து ஜீப்பையும் மீட்டு, ஜேசிபி உதவியுடன் அவர்களை வெளியே கொண்டு வந்தனர்.
இதையும் படிக்க : குடும்பத்துடன் சஃபாரி சென்ற 13 வயது சிறுவன்.. மறைந்திருந்து தாக்கிய சிறுத்தை.. ஷாக் வீடியோ!
இருப்பினும், அங்கிருந்த சில உள்ளூர்வாசிகள் இந்த சம்பவத்தை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர். இதன் மூலம், இந்த வீடியோக்கள் தற்போது வைரலாகி வருகின்றன. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் இளைஞர்களின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஒருவர், சொன்னால் கேட்காவிட்டால் இப்படித்தான் இருக்கும் என தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.