Viral Video : பாராகிளைடிங் செய்துக்கொண்டே DJ போட்ட இளம் பெண்.. வைரல் வீடியோ!
Woman Playing DJ While Doing Paragliding | இணையத்தில் ஒவ்வொரு நாளும் பல வகையான வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், இளம் பெண் ஒருவர் பாராகிளைடிங் செய்துக்கொண்டே டிஜே போடும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

உலகின் எந்த மூலையில் வித்தியாசமான மற்றும் வியப்பூட்டும் சம்பவங்கள் நடைபெற்றாலும் அது மிக விரைவாக உலகிற்கு தெரிய வந்துவிடும். வயது வித்தியாசமின்றி அனைத்து தரப்பினரும் தங்களது அன்றாட வாழ்வில் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தும் நிலையில், சமூக ஊடகங்களின் உதவியால் இத்தகைய வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வகையில், இளம் பெண் ஒருவர் பாராகிளைடிங் (Paragliding) செய்துக்கொண்டே டிஜே (DJ – Digital Jockey) வாசிக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
பாகிளைடிங் செய்துக்கொண்டே DJ போட்ட இளம் பெண்
பாராகிளைடிங் ஒரு சாகச விளையாட்டாகும், அதனை தங்களது வாழ்நாளில் ஒருமுறையாவது செய்ய வேண்டும் என பெரும்பாலான மக்கள் விரும்புவர். அதன் காரணமாக கை கால்கள் செயலிழந்தவர்கள், முதியவர்கள் என பலரும் பாராகிளைடிங் செய்வது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் அவ்வப்போது வெளியாகி வைரலாகும். அந்த வகையில், தற்போது அந்த இளம் பெண் பாராகிளைடிங் செய்தபடி, டிஜே போடும் வீடியோ இணையத்தில் வெளியாகி மிக வேகமாக வைரலாகி வருகிறது.




இதையும் படிங்க : Viral Video : பேட்மேன் வாகனத்தில் ஊர்வலம் வந்த மாப்பிள்ளை.. வாய் பிளந்த உறவினர்கள்.. வைரல் வீடியோ!
இணையத்தில் வைரலாகும் வீடியோ
View this post on Instagram
இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் இளம் பெண் ஒருவர் மடியில் டிஜேவில் பயன்படுத்தப்படும் கருவிகளை கழுத்தில் கட்டிக்கொண்டு பாராகிளைடிங் செய்ய புறப்படுகிறார். பிறகு அவர் அந்தரத்தில் தொங்கியபடி டிஜே போடுகிறார். இவை அனைத்தும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. அதுமட்டுமன்றி, அந்த வீடியோவில் பாராகிளைடிங் செய்துக்கொண்டு டிஜே போடும் முதல் பெண் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : துபாயில் ரோல்ஸ் ராய்ஸ் காரை ஸ்டைலாக ஓட்டும் 72 வயது இந்திய பெண் – வைரலாகும் வீடியோ
வைரல் வீடியோவுக்கு நெட்டிசன்கள் கருத்து
இந்த வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வரும் நிலையில், பலரும் அது குறித்து தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இதனை சாதனையாக நீங்கள் நினைத்தாலும், மிகவும் ஆபத்தானது என்பதை உணர வேண்டும் என்று ஒருவர் பதிவிட்டுள்ளார். பலருக்கும் தவறான உதாரணமாக இருக்கிறது இந்த வீடியோ என்று ஒருவர் பதிவிட்டுள்ளார். இவ்வாறு பலரும் பாதுகாப்பை மையப்படுத்தி கருத்து பதிவிட்டுள்ள நிலையில், சிலர் அந்த பெண்ணை பாராட்டியும் தங்களது கருத்துக்களை பகிர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.