துபாயில் ரோல்ஸ் ராய்ஸ் காரை ஸ்டைலாக ஓட்டும் 72 வயது இந்திய பெண் – வைரலாகும் வீடியோ
Age Is Just a Number: துபாயில் ரோல்ஸ் ராய்ஸ் காரை 72 வயதான இந்திய பெண் ஓட்டும் வீடியோ சமூக வலைதலங்களில் வைரலாகி வருகிறது. கேரளாவில் ஓட்டுநர் பயிற்சி பள்ளி நடத்தி வரும் அவரை நெட்டிசன்கள் டிரைவர் அம்மா என அழைக்கின்றனர்.

துபாயில் தெருக்களில் 72 வயதாகும் இந்திய பெண் கார் ஓட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் வெள்ளை நிற ரோல்ஸ் ராய்ஸ் காரை ஓட்டுகிறார். கட்டுப்பாடுகள் நிறைந்த துபாய் சாலைகளில் ஒரு பெண் அதுவும் 72 வயதான இந்திய பெண் கார் ஓட்டுவது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அந்த பெண் வேறு யாரும் அல்ல. கேரளாவை சேர்ந்த மணியம்மா என்ற பெண். இவர் இன்ஸ்டாகிராமில் கார் வீடியோக்கள் மூலம் மிகவும் பிரபலமாக இருக்கிறார். தற்போது துபாயில் ரோல்ஸ் ராய்ஸ் வீடியோ மூலம் இந்திய அளவில் பிரபலமாகியிருக்கிறார். அவருக்கு தற்போது பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
11 லைசென்ஸ்கள் வைத்திருக்கும் மணி அம்மா
கேரளாவை சேர்ந்த மணியம்மா தி டிரைவர் அம்மா என்ற பெயரில் சமூக வலைதளங்களில் பிரபலமாகியிருக்கிறார். கேரளாவில் ஓட்டுநர் பயிற்சி மையத்தை நடத்தும் அவர், தனது கார் ஓட்டும் திறமை மக்களிடையே மிகவும் பிரபலமாகியிருக்கிறார். அவரிடம் ஒன்றல்ல, இரண்டல்ல 11 வகையான டிரைவிங் லைசென்ஸை வைத்திருக்கிறார். மேலும் அவர் சொகுசு கார்களை மட்டுமல்ல, ரோடு ரோலர்கள், கிரேன்கள், பேருந்துகள் மற்றும் ஜேசிபி போன்ற ஆண்களே ஓட்டுவதற்கு சிரமப்படும் கனகரங்களை அசால்டாக ஓட்டும் திறமை படைத்தவர்.




இன்ஸ்டாகிராமில் @maniamma_official என்ற பக்கத்தில் டிரைவர் அம்மா பகிரும் வீடியோக்களைப் பார்க்கும் நெட்டிசன்கள் வயது என்பது வெறும் நம்பர் தான் என்பதற்கு அவர் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என வர்ணித்துள்ளனர். அவரது வீடியோக்களுக்கு நெட்டிசன்கள் ஃபயர் எமோஜிக்களை பறக்க விடுகின்றனர்.
மணி அம்மாவின் வீடியோ வைரல்
View this post on Instagram
தி பெட்டர் இந்தியா வெளியிட்ட அறிக்கையின் படி பெண்கள் வீட்டை விட்டு வெளியே வருவதே பிரச்னையாக இருந்த காலகட்டத்தில் மணி அம்மா துணிந்து டிரைவிங் கற்று சாதித்து வருகிறார், கடந்த 1978 ஆம் ஆண்டு அவரை அவர் கணவர் ஓட்டுநர் பயிற்சி பள்ளியைத் திறக்க ஊக்குவித்தார். இதனையடுத்து ஒரு பெண்ணாக வாகன ஓட்டுநர் பயிற்சி பள்ளியை அவர் தொடங்கினார். கடந்த 2004 ஆம் ஆண்டு அவர் கணவர் இறந்த நில
தி பெட்டர் இந்தியா அறிக்கையின்படி, பெண்கள் அவ்வாறு செய்வது வழக்கமாக இல்லாத நேரத்தில் மணி அம்மா காரை ஓட்டும் பொறுப்பை வகித்தார். 1978 ஆம் ஆண்டில் ஒரு ஓட்டுநர் பள்ளியை அவர் கணவர் தொடங்கியிருக்கிறார். இந்த நிலையில் 2004 இல் அவரது கணவர் இறந்த பிறகு, வீட்டை நடத்த இந்தப் பள்ளியின் பொறுப்பை அவர் ஏற்றுக்கொண்டார். அன்றிலிருந்து 20 வருடங்களாக கேரளாவில் ஓட்டுநர் பயிற்சி பள்ளியை நடத்தி வருகிறார். மேலும் கார் மட்டுமல்லாமல் கனகர வாகனங்களை ஓட்டுவதையும் கற்றுக்கொண்டதோடு அது குறித்து மக்களுக்கு படிப்பித்து வருகிறார்.
கடந்த ஆண்டு, மஹிந்திரா குழுமத்தின் தலைவரான ஆனந்த் மஹிந்திராவும் டிரைவர் அம்மாவின் கதையை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மணி அம்மாவை #MondayMotivation என்று வர்ணித்து, அவர் ‘வாழ்க்கையின் மீது தீராத பசி’ கொண்டிருப்பதாக குறிப்பிட்டிருந்தார்.