Viral Video : தாய் அன்பிற்கே ஈடேதம்மா.. குட்டி யானைக்கு கரும்பை உடைத்து கொடுக்கும் தாய் யானை.. அழகிய வீடியோ!
Mother Elephant's Tender Act | இணையத்தில் ஒவ்வொரு நாளும் யானைகள் தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், தாய் யானை ஒன்று குட்டி யானைக்கு கரும்பை சாப்பிடுவதற்கு ஏதுவாக சிறு துண்டாக உடைத்து கொடுக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

யானைகள் எந்த அளவுக்கு ஆக்ரோஷமான குணம் கொண்டுள்ளனவோ, அதே அளவுக்கு மிகுந்த பாசமும் கொண்டு இருக்கும். மனிதர்களிடமே யானைகள் மிகுதியான பாசத்தைன் கொண்டுள்ளன என்றால் அவற்றின் குழந்தைகள் மீது சொல்லவா வேண்டும். அந்த வகையில் தாய் யானை ஒன்று தனது குட்டிக்கு கரும்பை உடைத்து கொடுக்கும் வீடியோ காட்சி ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. யானையின் அந்த பாச செயலை கண்டு பலரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இந்த நிலையில், இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
குட்டி யானைக்கு கரும்பை உடைத்து கொடுத்த தாய் யானை
எந்த உயிரினம் என்றாலும் அதில் தாய் மிகுந்த அன்புடைய உயிரினமாக இருக்கும். தாய் அன்புக்கு இந்த உலகில் வேறு ஏதுன் இணையில்லை என்றால் அது மிகை ஆகாது. ஒரு குழந்தை பிறந்து, வளர்ந்து அதன் வாழ்க்கை பாதையை தேர்வு செய்யும் வரை ஒரு தாய் தனது பிள்ளைகளுக்கு உறுதுணையாக இருப்பார். தனது வாழ்நாள் முழுவதும் தனது குழந்தைகளையே முதன்மையாக நினைப்பவள் தான் தாய். மனித இனத்தில் மட்டுமன்றி, மிருக இனத்திலும் தாயின் பன்பு இதுவாக தான் உள்ளது. இந்த நிலையில், தாய் யானை ஒன்று தனது குட்டிக்கு கரும்பு துண்டை உடைத்து கொடுக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.




இதையும் படிங்க : தோஸ்த் படா தோஸ்த்…. 55 ஆண்டுகளாக நண்பனை பிரியாத யானை – வைரலாகும் வீடியோ
இணையத்தில் வைரலாகும் வீடியோ
View this post on Instagram
இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோவில் தாய் யானை ஒன்று பெரிய கரும்பு துண்டை வாயில் வைத்து கடிக்கிறது. அப்போது குட்டி யானை ஒன்று, எனக்கும் வேண்டும் என்பதை போல தாய் யானையிடம் கொஞ்சுகிறது. உடனடியாக அந்த தாய், தான் வாயில் வைத்திருந்த பெரிய கரும்பு துண்டை காலில் வைத்து இரண்டாக உடைக்கிறது. பிறகு அந்த சிறிய கரும்பு துண்டை தனது குட்டிக்கு சாப்பிட கொடுக்கிறது. இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.
இதையும் படிங்க : Viral Video : பழங்குடியின மக்களை தொந்தரவு செய்த இன்ஃப்ளூயன்சர்.. இணையத்தில் குவியும் கண்டனம்!
வைரல் வீடியோவுக்கு நெட்டிசன்கள் கருத்து
இந்த வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வரும் நிலையில், பலரும் தாய் பாசம் குறித்து உருக்கமாக தங்களது கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.