Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Viral Video : பிரசவம் குறித்து பதற்றமாக இருந்த மனைவி.. டான்ஸ் ஆடி கூல் செய்த கணவர்.. வைரல் வீடியோ!

Husband Danced to Calm Wife | ஒரு குழந்தையை பெற்றுக்கொள்வதில் தாய்க்கு எவ்வளவு பங்கு உள்ளதோ அதே அளவுக்கு தந்தைக்கும் பங்கு உள்ளது. தந்தையால் உடல் ரீதியான கஷடங்களை அனுபவிக்க முடியவில்லை என்றாலும், குழந்தையை பெற்றுக்கொள்ளும் தனது துணைக்கு துணையாக இருக்க வேண்டும்.

Viral Video : பிரசவம் குறித்து பதற்றமாக இருந்த மனைவி.. டான்ஸ் ஆடி கூல் செய்த கணவர்.. வைரல் வீடியோ!
வைரல் வீடியோ
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 01 Sep 2025 19:41 PM

பெண்களின் வாழ்வின் மிக முக்கியமான தருணம் என்றால் அது பிரசவம் தான். காரணம் ஒவ்வொரு பெண்ணும் பிரசவத்தின் போது செத்து பிழைப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், பிரசவத்தை நினைத்து பதற்றத்தில் இருக்கும் பெண் ஒருவரை அவரது கணவர் நடனமாடி மகிழ்ச்சி படுத்தும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்க்கும் பலரும் அந்த கணவனுக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

பிரசவ பதற்றத்தில் இருந்த மனைவியை டான்ஸ் ஆடி கூல் செய்த கணவர்

பிரசவத்தின் போது மிகுந்த வலி ஏற்படும். சில சமயங்களில் அதிக ரத்த போக்கு ஏற்பட்டு, பெண்கள் உயிரிழக்கும் சம்பவங்களும் நடைபெற்றது உண்டு. இதன் காரணமாக பிரசவம் ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையிலும், மிக முக்கியமான பகுதியாக கருதப்படுகிறது. எனவே பிரசவத்தின் போது பதற்றம் அடையாமல் இருப்பது பாதுகாப்பானதாக கருதப்படுகிறது. இந்த நிலையில், பிரசவத்தை நினைத்து பதற்றமாக இருக்கும் மனைவியை அவரது கணவர் நடனமாடி மகிழ்விக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : Viral Video : பெங்களூரில் ஆட்டோ ஓட்டும் இளம் பெண்.. காரணம் இதுதான்.. சுவாரஸ்ய கதை!

இணையத்தில் வைரலாகும் வீடியோ

 

View this post on Instagram

 

A post shared by Rajesh rajan (@kaippan_vlogs)

இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோவில் பெண் ஒருவர் மருத்துவமனை படுக்கையில் படுத்துக்கொண்டு இருக்கிறார். அவரை மருத்துவர்கள் பிரசவத்திற்காக தயார் செய்து வருகின்றனர். அவர் மிகுந்த பதற்றத்துடன் காணப்படுகிறார். இந்த நிலையில் அவரது கணவர் நடனமாடி அந்த பெண்ணை மகிழ்ச்சி படுத்துகிறார். உடனடியாக அந்த பெண்ணும் சிரிக்கிறார். இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.

இதையும் படிங்க : Viral Video : டெலிவரிக்கு சென்ற வீட்டில் மழையில் நனைந்த துணிகள்.. எடுத்து மடித்து வைத்த போஸ்ட்மேன்!

வைரல் வீடியோவுக்கு நெட்டிசன்கள் கருத்து

இந்த வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வரும் நிலையில், அது குறித்து பலரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். ஒவ்வொரு பெண்ணுக்கும் இத்தகைய உறுதுணையான கணவன் கிடைக்க வேண்டும் என்று ஒருவர் பதிவிட்டுள்ளார். வாழ்க்கையின் அர்த்தம் இதுதான் என மற்றொருவர் பதிவிட்டுள்ளார். இவ்வாறு பலரும் அந்த வீடியோவை பாராட்டி கருத்து பதிவிட்டாலும் சிலர் அதனை செயற்கையாக தயாரிக்கப்பட்ட வீடியோ என்று கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.