Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Viral Video : பழங்குடியின மக்களை தொந்தரவு செய்த இன்ஃப்ளூயன்சர்.. இணையத்தில் குவியும் கண்டனம்!

Influencer Slammed for His Video | இணையத்தில் ஒவ்வொரு நாளும் பல வகையான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அவற்றில் சில நல்ல வரவேற்பை பெறும் நிலையில், சில வீடியோக்கள் கடுமையான விமர்சனங்களையும் பெறும். அந்த வகையில் இன்ஃப்ளூயன்சரின் வீடியோ சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது.

Viral Video : பழங்குடியின மக்களை தொந்தரவு செய்த இன்ஃப்ளூயன்சர்.. இணையத்தில் குவியும் கண்டனம்!
வைரல் வீடியோ
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 29 Aug 2025 23:54 PM

பப்புவா நியூ கினியாவில் (Papua New Guinea) வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு (Tribal People) உப்பு கொடுத்ததற்கான இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளூயன்சர் (Instagram Influencer) ஒருவர் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறார். அந்த பழங்குடியின மக்கள் தனிமையாக வாழ்ந்து வரும் நிலையில், அவர்களை தொந்தரவு செய்வது மிகப்பெரிய குற்றம் என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், இணையத்தில் வைரலாகி விமர்சனங்களை பெற்று வரும் வீடியோவில் இடம்பெற்றுள்ளது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

பப்புவா நியூ கினியா பழங்குடியின மக்களை தொந்தரவு செய்த இன்ஃப்ளூயன்சர்

உலகின் மிகவும் வித்தியாசமான மற்றும் அழகான பகுதிகளுக்கு சென்று அவற்றை வீடியோ பதிவு செய்த அந்த பகுதி மக்களின் வாழ்க்கை முறையை வீடியோவாக பதிவிடுவதை இன்ஃப்ளூயன்சர்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். அந்த வகையில், ஐரிஷ் பகுதியை சேர்ந்த இன்ஃப்ளூயன்சர் ஒருவர் பப்புவா நியூ கினியாவுக்கு சென்று அங்குள்ள பழங்குடியின மக்களை வீடியோ பதிவு செய்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ தான் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது.

இதையும் படிங்க : Viral Video : காதலனை கட்டிப்பிடித்தபடி பைக்கில் சென்ற இளம் பெண்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!

இணையத்தில் வைரலாகும் வீடியோ

 

View this post on Instagram

 

A post shared by Dara Tah (@daratah)

இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோவில் அந்த இன்ஃப்ளூயன்சர் ஒருவர் சிலருடன் படகில் பயணம் செய்கிறார். அவ்வாறு பயணம் செய்வதை வீடியோ பதிவு செய்துக்கொண்டே செல்கிறார். அப்போது இந்த சுற்றுலா குழுவை காணும் அந்த பப்புவா நியூ கினியா பழங்குடியின மக்கள் கடும் ஆத்திரத்திற்கு உள்ளாகி கூச்சலிடுகின்றனர். அப்போது அவர்களுக்கு ஏதேனும் பொருளை கொடுக்க வேண்டும் என்று அந்த வழிகாட்டும் நபர் கூறும் நிலையில், அந்த இன்ஃப்ளூயன்சர் தன்னிடம் இருக்கும் உப்பை எடுத்து அவர்களுக்கு கொடுக்கிறார். அதனை வாங்கும் ஒரு பழங்குடியினர் அதனை தனக்கு பிடிக்கவில்லை என்பதை போல முகம் சுளிக்கிறார். உடனடியாக அந்த குழு அங்கிருந்து செல்கிறது. இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.

இதையும் படிங்க : Viral Video : ஆற்றில் வட்டமேசை மாநாடு நடத்திய ஆமைகள்.. இணையத்தில் வைரலாகும் வியப்பூட்டும் வீடியோ!

வைரல் வீடியோவுக்கு நெட்டிசன்கள் கருத்து

இந்த வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வரும் நிலையில், தனிமையாக வாழ்ந்துக்கொண்டு இருக்கும் அந்த பழங்குடியின மக்களை தொந்தரவு செய்வது குற்றம் என்றும் அது குறித்து அந்த நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.