ரயில் வரும் நேரத்தில் தண்டவாளத்தில் ரீல்ஸ் எடுத்த இளைஞர்கள் – என்ன நடந்தது தெரியுமா?
Viral Video : சமூக வலைதளங்களில் பிரபலமாவதற்காக பலரும் உயிரை பணயம் வைத்து ரீல்ஸ் வீடியோ எடுக்கின்றனர். அந்த வகையில் 3 இளைஞர்கள் ரயில் வரும் நேரம் பார்த்து தண்டவாளத்தில் ரீல்ஸ் எடுக்கின்றனர். ரயில் அருகே வரும் நேரம் பார்த்து ஆற்றில் குதிக்கின்றனர்.

நாளுக்கு நாள் சமூக ஊடகங்களின் (Social Media) தாக்கம் மிகவும் அதிகரித்து வரும் நிலையில், மக்கள் ரீல்ஸ் வீடியோவுக்காக தங்கள் உயிரைப் பணயம் வைக்கின்றனர். இதுபோன்ற வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், மூன்று இளைஞர்கள் ரயில்வே மேம்பாலத்தில் நின்று ரயில் வரும் வரை காத்திருக்கிறார்கள். ரயில் (Train) நெருங்கும் போது, அவர்கள் ஒவ்வொருவராக கீழே உள்ள ஆற்றில் குதிக்கின்றனர். இந்தக் காட்சி அனைவரையும் ஆச்சரியப்படுத்தவும் அதிர்ச்சியடையவும் செய்துள்ளது. ஏனென்றால் கொஞ்சம் தாமதமானால் கூட அவர்களின் வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டு வந்திருக்கும். இந்த வீடியோவை @Sparkes_hub என்பவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இது மில்லியன் கணக்கான பார்வைகளைப் பெற்றுள்ளது. இந்த வீடியோ குறித்து முழுமையாக பார்க்கலாம்.
ரயில்வே தண்டவாளத்தில் ரீல்ஸ் எடுக்கும் இளைஞர்கள்
வைரல் வீடியோவில், ரயில் ஒரு ஆற்றின் மீதுள்ள பாலத்தில் ஓடுகிறது. கீழே ஆறு பாய்கிறது. பாலத்தில், மூன்று இளைஞர்கள் தண்டவாளத்தில் நிற்கிறார்கள். அவர்களில் ஒருவரின் கையில் ஒரு ஸ்மார்போன் உள்ளது. அவர்கள் ஒரு ரீல்ஸ் வீடியோ எடுப்பது நன்றாக தெரிகிறது. அதே நேரத்தில், ரயில் ஓட்டுநர் அவர்களை எச்சரிக்கும் விதமாக ஹாரனை அடித்துக் கொண்டே இருக்கிறார் . ரயில் அருகில் வந்ததும் முதலில் ஒரு இளைஞர் குதிக்கிறார். பின்னர் மற்ற இருவரும் குதிக்கிறார்கள். ஆபத்து தெளிவாகத் தெரிகிறது. ரயில் கொஞ்சம் வேகமாகச் சென்றிருந்தால் அல்லது அவர்கள் கட்டுப்பாட்டை இழந்திருந்தால், ஒரு பெரிய விபத்து நடந்திருக்கும்.




இதையும் படிக்க : பழங்குடியின மக்களை தொந்தரவு செய்த இன்ஃப்ளூயன்சர்.. இணையத்தில் குவியும் கண்டனம்!
வைரலாகும் வீடியோ
😳 देश के युवा एक छोटी इंस्टाग्राम रील 🎥 बनाने के लिए इतना गिर गए हैं!
😱 ट्रेन सिर्फ कुछ सेकंड की देरी से गुजरी! 🚂
इन लोगों के बारे में आपका क्या कहना है? 🤔 pic.twitter.com/9exu4LfyWy
— Spark Hub (@Sparkes_hub) August 29, 2025
இதையும் படிக்க : ஓடும் காரில் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர் – போலீஸ் செய்த சம்பவம் – வைரலாகும் வீடியோ
தங்கள் உயிரைப் பணயம் வைத்து எடுக்கப்பட்ட இந்த வீடியோ, விரைவாக விவாதப் பொருளாக மாறி வருகிறது. சமூக ஊடகங்களில் வீடியோவைப் பார்த்த பல நெட்டிசன்கள் மூன்று இளைஞர்கள் மீது தங்கள் கோபத்தை வெளிப்படுத்தினர். அவர்கள் தங்கள் உயிரைப் பற்றி கவலைப்படாமல் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள். சிலர் ரயில் இங்கே தாமதமாக வரவில்லை என்றும், யமன தான் அதை தாமதப்படுத்தினார் என்றும் கருத்து தெரிவித்தனர். மற்றவர்கள், “இளைஞர்கள் இவ்வளவு ஆபத்தான ஸ்டண்ட் செய்யும் நிலையில் அவர்கள் பெற்றோர் என்ன செய்கிறார்கள்?” என்று கேள்வி எழுப்பினர்.