Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ரயில் டிக்கெட் முன்பதிவில் 20% தள்ளுபடி – எப்படி புக் செய்வது? முழு விவரம் இதோ!

Rail One : இந்தியன் ரயில்வே பயணிகளுக்கு அதிரடி தள்ளுபடியை அறிவித்திருக்கிறது. அதன் படி குறிப்பிட்ட முறையில் டிக்கெட் முன்பதிவு செய்கிறவர்களுக்கு 20 சதவிகிதம் தள்ளுபடியை அறிவித்திருக்கிறது. ரயில்ஒன் செயலி மூலம் இந்த சலுகையை பெறலாம். அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ரயில் டிக்கெட் முன்பதிவில் 20% தள்ளுபடி  – எப்படி புக் செய்வது? முழு விவரம் இதோ!
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 01 Sep 2025 15:24 PM

நாடு முழுவதும் குறைந்த கட்டணத்தில் எளிய மக்களின் பயண தேவைகளை பூர்த்தி செய்கிறது இந்தியன் ரயில்வே (Indian Railways). குறிப்பாக நீண்ட தூர பயணங்களுக்கு மிகவும் ஏற்றது என்பதால் மக்கள் ரயில் போக்குவரத்தை தேர்ந்தெடுக்கின்றனர். இந்தியன் ரயில்வே மக்களுக்கு நன்மை பயக்கும் வகையில் பல திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது ரவுண்ட் டிரிப் ஸ்கீம் (Round Trip Scheme) என்ற புதிய திட்டத்தை இந்தியன் ரயில்வே அறிமுகப்படுத்தியிருக்கிறது. இதன் படி பயணிகளுக்கு டிக்கெட் புக்கிங் செய்யும் போது 20 சதவிகித தள்ளுபடி அறவித்திருக்கிறது.  ரயில் ஒன் (RailOne) செயலி மூலம் இதனை பெறலாம். இந்தியன் ரயில்வேயின் இந்த 20 சதவிகித டிக்கெட் பெறுவதற்கான வழிமுறைகள் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இந்தியன் ரயில்வே ரயில் ஒன் செயலி மூலம் ஒரே நேரத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு செல்வதற்கும் திரும்பி வருவதற்கும் என 2 முறை டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கு 20 சதவிகித தள்ளுபடி வழங்குகிறது. இந்த தள்ளுபடி ரயில் ஒன் செயலி மூலம் டிக்கெட் புக் செய்கிறவர்களுக்கு கிடைக்கும்.

இதையும் படிக்க : ரயில் பயணிகளுக்கு முக்கிய தகவல் – டிக்கெட் புக் செய்யும் முறையில் புதிய மாற்றம்

எந்த தேதிகளில் செல்லுபடியாகும்?

இந்த குறிப்பிட்ட சலுகை எந்த தேதிகளில் செல்லுபடியாகும் என பார்க்கலாம். இந்தியன் ரயில்வேயில் 20 சதவிகித தள்ளுபடி பெற அக்டோபர் 13 முதல் அக்டோபர் 26, 2025 வரை டிக்கெட் முன்பதிவு செய்கிறவர்களுக்கு கிடைக்கும். அதே போல ரிட்டர்ன் டிக்கெட் நவம்பர் 17 முதல் டிசம்பர் 1, 2025 வரை டிக்கெட் முன்பதிவு செய்கிறவர்களுக்கு இந்த சலுகை கிடைக்கும்.

இதற்கு பயணிப்போரின் விவரங்கள் ஒன்றாக இருக்க வேண்டும். அதே போல ஒரே பெட்டியில் பயணிக்க வேண்டும். மேலும் இரண்டு முறையும் நாம் ரயில் ஏறும் இடமும், செல்லும் இடமும் ஒன்றாக இருக்க வேண்டும். இவை அனைத்தும் பொருந்தினால் மட்டுமே நமக்கு சலுகைகள் கிடைக்கும்.

இதையும் படிக்க : கடைசி நிமிடத்திலும் ரயில் டிக்கெட் புக் பண்ணலாம் – கரண்ட் புக்கிங் பற்றி தெரியுமா?

ரயில்ஒன் செயலி மூலம் எப்படி முன்பதிவு செய்வது?

  • ரயில் ஒன் செயலியை பிளே ஸ்டோர் அரல்லது ஆப் ஸ்டோரில் இருந்து பதிவிறக்கவும் செய்யவும், பின்னர் உங்கள் விவரங்களை உள்ளிட்டு லாகன் செய்யவும்.
  • பின்னர் Avail Festive Package என்ற ஆப்சனைத் தேர்ந்தெடுத்து Round Trip Scheme என்பதைக் கிளிக் செய்யவும்.
  • பயணம் தொடங்கும் ரயில் நிலையம், செல்லும் இடம், அக்டோபர் 13 முதல் 26,2025 இடைப்பட்ட தேதிகளில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பின்னர் பணம் செலுத்தவும். PNR எண் உறுதிப்படுத்தப்படும்.
  • நாம் செல்லும் பயணம் உறுதிப்படுத்தப்பட்ட பின், Book Return Ticket என்பதைத் தேர்ந்தெடுக்கவும்செயலி தானாகவே பயணிகள் விரவம், நிலையம், வகுப்பு ஆகியவற்றை நிரப்பிவிடும். இதற்கு நவம்பர் 17, 2025 முதல் டிசம்பர் 1, 2025 இடைப்பட்ட தேதியைத் தேர்வு செய்யவும்.
  • பணம் செலுத்திய பிறகு ரிட்டர்ன் டிக்கெட் 20 % தள்ளுபடியுடன் உங்களுக்கு கிடைக்கும்.

கவனிக்க வேண்டியவை

  • செல்லும் மற்றும் ரிட்டர்ன் டிக்கெட்டுகளையும் ஒரே பயணிகளுக்காக ஒரே வகுப்பில் புக் செய்ய வேண்டும். பயணம் தொடங்கும் ரயில் நிலையம், சேரும் ரயில் நிலையம் ஒன்றாக இருக்க வேண்டும்.
  • இந்த சலுகையை ரயில்ஒன் செயலி மூலமாக மட்டுமல்லாமல், ரயில் நிலைய டிக்கெட் கவுண்டர்களிலும் இந்த சலுகை கிடைக்கும்.
  • அக்டோபர் 13 முதல் 26, 2025  மற்றும் நவம்பர் 17 முதல் டிசம்பர் 1 ஆகிய தேதிகளுக்குள் புக் செய்ய வேண்டும். இல்லையென்றால் தள்ளுபடி கிடைக்காது.