ரயில் பயணிகளுக்கு முக்கிய தகவல் – டிக்கெட் புக் செய்யும் முறையில் புதிய மாற்றம்
Railways Update : டிக்கெட் புக்கிங் விதிகளில் இந்திய ரயில்வே ஒரு முக்கிய மாற்றத்தை கொண்டு வந்திருக்கிறது. அதன் படி ரயில் டிக்கெட் புக் செய்யும்போது போர்டிங் ஸ்டேஷனை தவறாக குறிப்பிட்டால், அதனை உடனடியாக மாற்ற வேண்டும். இல்லையெனில் அனுமதி மறுக்கப்படலாம்.

தீபாவளிக்கு (Diwali) இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், ரயிலில் (Train) பயணம் செய்யும் பயணிகள் டிக்கெட் புக்கிங் செய்யும்போது கவனமாக இருக்க வேண்டும் என இந்தியன் ரயில்வே அறிவித்துள்ளது. ஆன்லைன் டிக்கெட் புக் செய்யும்போது, குறிப்பாக தட்கல் டிக்கெட் புக் செய்யும்போது நாம் ஏறும் ரயில்வே ஸ்டேஷன் (Boarding Station) மற்றும் இறங்கும் ஸ்டேஷன் (Destination) ஆகிய விவரங்களை தவறாமல் சரியாக உள்ளிட வேண்டும். ஏனெனில் அதில் நாம் செய்யும் தவறுகள் நம் பயணம் தடைபடவும் வாய்ப்பிருக்கிறது. இதற்கான விதிகளில் இந்திய இரயில்வே புதிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. அது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
போர்டிங் ஸ்டேஷன் விதிகளில் மாற்றம்
இந்திய ரயில்வேயின் விதிகளின் படி நாம் போர்டிங் ஸ்டேஷனை குறிப்பிடும்போது கவனமாக இருக்க வேண்டும். உதாரணமாக சென்னையின் எக்மோர் ரயில் என்பதற்கு பதிலாக, சென்னை தாம்பரம் என குறிப்பிட்டால், அவற்றை உடனடியாக மாற்ற வேண்டும். இல்லையென்றால் ரயிலில் பயணிக்க அனுமதி மறுக்கப்படலாம்.
இதையும் படிக்க : கடைசி நிமிடத்திலும் ரயில் டிக்கெட் புக் பண்ணலாம் – கரண்ட் புக்கிங் பற்றி தெரியுமா?




தற்போது வந்துள்ள புதிய மாற்றத்தின் படி ரயில் புறப்படும் நேரத்தில் இருந்து 24 மணி நேரத்திற்குள் போர்டிங் ஸ்டேஷனை மாற்றினால் அதற்கான பணம் திருப்பி அளிக்கப்படாது. ஆனால் ரயில் ரத்து, 3 மணி நேரத்திற்கு மேல் ரயில் வர தாமதம், கோச் இணைக்கப்படாதது போன்ற காரணங்களுக்கு பணம் திருப்பி கிடைக்கும். .ஒருமுறை போர்டிங் ஸ்டேஷனை மாற்றிய பிறகு முதலில் குறிப்பிட்ட போர்டிங் ஸ்டேஷனில் இருந்து ரயிலில் ஏறும் உரிமை பயணிகளுக்கு ரத்து செய்யப்படும். தவறான போர்டிங் ஸ்டேஷனில் ஏற முயன்றால் அதற்கான கட்டணத்துடன் அபராதமும் வசூலிக்கப்படும்.
அதே போல விகால்ப் தேர்வு செய்யப்பட்ட டிக்கெட்டுகளுக்கு போர்டிங் ஸ்டேஷன் மாற்ற அனுமதி இல்லை. அதே போல கரண்ட் டிக்கெட்டுக்கும் மாற்றம் இல்லை. ஒருமுறை புக்கிங் செய்யும் போர்டிங் ஸ்டேஷனை தேர்வு செய்திருந்தால் Booked Ticket History பகுதியில் மாற்றிக்கொள்ளலாம்.
இதையும் படிக்க : இனி பண்டிகை நாட்களில் எளிதாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம் – வந்தாச்சு புதிய அப்டேட்
ஐஆர்சிடிசியில் போர்டிங் ஸ்டேஷன் மாற்றும் முறை
- பயணிகள் தவறுதலாக போர்டிங் ஸ்டேஷனை ஐஆர்சிடிசி ஆப் மூலம் மாற்றிக்கொள்ளலாம்.
- உங்கள் User ID மற்றும் பாஸ்வேர்டு மூலம் ஐஆர்சிடிசியில் லாகின் செய்யவும்.
- My Account – My Transactions – Booked Ticket History என்பதை கிளிக் செய்யவும்.
- போர்டிங் பாயிண்ட் மாற்றவேண்டிய டிக்கெட்டை தேர்வு செய்து Change Boarding Point என்ற ஆப்சனை கிளிக் செய்யவும்.
- லிஸ்டில் வரும் ரயில் நிலையங்களில் சரியான ரயில் நிலையத்தை தேர்வு செய்யவும்.
- Ok அழுத்தியதும் போர்டிங் ஸ்டேஷன் வெறறிகரமாக மாற்றப்படும்.
- இது தொடர்பான அறிவிப்பு உங்களுக்கு எஸ்எம்எஸ் மூலம் கிடைக்கும்.