இனி பண்டிகை நாட்களில் எளிதாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம் – வந்தாச்சு புதிய அப்டேட்
Train Ticket Relief : பண்டிகை நாட்களில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வது மிகவும் சவாலானதாக இருந்து வந்தது. இந்த நடைமுறையை மாற்றும் வகையில் இந்தியன் ரயில்வே புதிய அப்டேட் ஒன்றை மேற்கொள்ளவிருக்கிறது. அது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

இந்தியாவில் மிகப்பெரிய போக்குவரத்தாக ரயில் போக்குவரத்து விளங்குகிறது. நீண்ட தூர பயணங்களுக்கு ஏற்றது மற்றும் குறைவான கட்டணம் என்பதால் மக்கள் ரயில்வே போக்குவரத்தை தேர்ந்தெடுக்கின்றனர். அதிக மக்கள் பயன்படுத்துவதால் அதில் டிக்கெட் கிடைப்பது மிகவும் சவாலாக இருக்கும். குறிப்பாக பண்டிகை நாட்களில் டிக்கெட் கிடைப்பதும் மிகவும் கடினம். கடைசி நேரங்களில் டிக்கெட் பெற ரிசர்வேஷன் முறையை இந்திய ரயில்வே (Indian Railway) அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் படி கடைசி நேரங்களில் கேன்சல் செய்யும் டிக்கெட்டுகள் நமக்கு கிடைக்கும் வாய்ப்பு இருக்கும். தற்போது இந்த முறையை எளிமைப்படுத்தும் வகையில் அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் உறுதியான டிக்கெட் பெறும் வாய்ப்பு அதிகரிக்கும் அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
நான்கு மடங்கு வேகமாக அப்டேட் செய்யும் வசதி
தற்போதுள்ள ரிசர்வேஷன் முறயைில் ஒரு நிமிடத்தில் குறைவான அளவே டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும். இதனால் பண்டிகை காலங்களில் முன்பதிவு செய்து டிக்கெட் பெறும் வாய்ப்பு குறைவாகவே இறுக்கும். இந்த நிலையில் விரைவில் இந்த முறை மேம்படுத்தப்படவிருக்கிறது. அதன் படி முன்பதிவு செய்யும் வேகம் நான்கு மடங்கும் அதிகரிக்கும். இதன் மூலம் பயணிகள் வேகமாகவும் எளிதாகவும் டிக்கெட் முன்பதிவு செய்யலாம்.
இதையும் படிக்க : இனி இரவில் ரயிலில் நிம்மதியாக பயணிக்கலாம் – வெளியான சூப்பர் அறிவிப்பு




கடந்த 2010 ஆம் அறிமுகப்படுத்தப்பட்ட ரிசர்வேஷன் அமைப்பு இன்னும் இடேனியம் சர்வர்ஸ் மற்றும் ஓப்பன் விஎம்எஸ் டெக்னாலஜி முறையில் இயங்குகிறது. இவை தற்போது மேம்படுத்தப்படவிருக்கிரது. அதன் படி கிளவுட் டெக்னாலஜி அடிப்படையில் இயங்கும். இதன் மூலம் இனி டிக்கெட் முன்பதிவை வேகமாகவும், எளிமையாகவும் செய்ய முடியும். இதற்காக இந்தியன் ரயில்வே தகவல் தொடர்பா அமைப்பு மையம் இந்த திட்டத்தை முன்னேடுக்கிறது. இதன் மூலம் இந்தியன் ரயில்வேயில் இதுவரை பயன்படுத்தப்பட்டு வந்த பழைய ஹாட்வேர், சாப்ட்வேர், நெட்வொர்க போன்ற அனைத்தும் நீக்கப்பட்டு, புதிய சிஸ்டம் பயன்படுத்தப்படவிருக்கிறது.
முன்பதிவு செய்யும் நேரத்தில் மாற்றம்
இதன் மூலம் டிக்கெட் முன்பதிவுக்கான காலம் 120 நாட்களில் இருந்து 60 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. இது கடந்த 2024 நவம்பர் 1 முதல் நடைமுறைக்கு வந்தது. இதன் மூலம் தேவையில்லாமல் முன்பதிவு செய்து பின்னற் அதனை ரத்து செய்யும் முறை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. நம்மில் பலர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரயில்வே டிக்கெட் முன்பதிவு செய்கிறோம். ஆனால் அந்த நேரத்தில் பயணம் செய்ய முடியாதபோது டிக்கெட்டை ரத்து செய்யவேண்டியதாகிறது. இதனை இந்த நடைமுறை குறைக்கும். உண்மையில் தேவைப்படுவோருக்கு அந்த டிக்கெட் கிடைக்கும்.
இதையும் படிக்க : ரயில்வேயில் கடும் போட்டி.. 64,197 பணியிடங்களுக்கு 1.87 கோடி பேர் விண்ணப்பம்!
ரயில்ஒன் ஆப்
டிக்கெட் முன்பதிவை எளிதாக்கும் வகையில் ரயில்ஒன் எனும் புதிய மொபைல் ஆப்பை ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் பயணிகள் ரிசர்வ் டிக்கெட் மட்டுமில்லாமல், அன்ரிசர்வ் டிக்கெட்டையும் தங்கள் போனில் இருந்தே நேரடியாக புக் செய்யலாம். இதனால் ரயில் நிலையங்களில் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியதில்லை.