கடைசி நிமிடத்திலும் ரயில் டிக்கெட் புக் பண்ணலாம் – கரண்ட் புக்கிங் பற்றி தெரியுமா?
Current Booking: இந்தியாவில் ரயில் டிக்கெட் கிடைப்பது என்பது மிகவும் சவாலானது. குறிப்பாக தீபாவளி போன்ற பண்டிகைகளின் போது ரயில் டிக்கெட் கிடைப்பது என்பது மிகவும் கடினம். இந்த நிலையில் கடைசி நேரத்தில் ரயில் டிக்கெட் புக் செய்ய கரண்ட் புக்கிங் என்ற வசதி இருக்கிறது.

இந்தியாவில் ரயில் (Train) பயணத்துக்கான டிக்கெட்டுகள் 60 நாட்களுக்கு முன் புக் செய்ய முடியும். இது முன்பு 120 நாட்களாக இருந்தது. பலர் தீபாவளி போன்ற பண்டிகைகளுக்கு சொந்த ஊர் செல்ல முன் கூட்டியே டிக்கெட்டுகள் புக் செய்கின்றனர். ஆனால் கடைசி நிமிடத்தில் ரத்து செய்கின்றனர். இதனை தவிர்க்க, ரயில் டிக்கெட் புக் செய்வதற்கான கால அளவு 120 நாட்களில் இருந்து 60 நாட்களாக குறைக்கப்பட்டது. அதே போல பயண நாளுக்கு முந்தைய நாள் டிக்கெட் புக் செய்வதற்கு ஏதுவாக, தட்கல் டிக்கெட் புக்கிங் வசதி பயணர்களுக்கு வழங்கப்படுகிறது. ஆனால் சில நிமிடங்களில் டிக்கெட்டுகள் முடிந்து விடும். இந்த நிலையில் ரயில் கிளம்பும் கடைசி நிமிடத்திலும் டிக்கெட் புக் செய்வதற்காக கொண்டுவரப்பட்ட கரண்ட் புக்கிங் பற்றி உங்களுக்கு தெரியுமா?
கரண்ட் புக்கிங் என்றால் என்ன?
ரயிலில் தட்கல் மூலம் புக் செய்யப்பட்டது போக மீதமுள்ள இருக்கைகள் காலியாக இருக்கும். அப்படி கடைசி நிமிடத்தில் Chart Preparation செய்யப்பட்ட பிறகு காலியாக இருக்கும் இருக்கைகள் மீண்டும் புக் செய்வதற்காக மீண்டும் ஒதுக்கப்படும். அதாவது ரயில் கிளம்பும் 4 மணி நேரத்துக்கு முன் Chart தயாரிக்கப்படும். அதன் பின் காலியான உள்ள இருக்கைகளை கரண்ட் ரிசர்வேஷன் முறையில் புக் செய்யலாம். ரயில் புறப்படும் நேரத்திற்கு சரியாக 30 நிமிடங்களுக்கு முன் புக் செய்யலாம். கடந்த 2023 முதல் இதற்காக சாதாரண கட்டணமே வசூலிக்கப்படுகிறது.
இதையும் படிக்க : இனி பண்டிகை நாட்களில் எளிதாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம் – வந்தாச்சு புதிய அப்டேட்




கரண்ட் டிக்கெட் எப்படிப் புக் செய்வது?
- தற்போது கரண்ட் டிக்கெட் ஐஆர்சிடிசி ஆப் மூலம் புக் செய்ய முடியும்.
- இதற்காக முதலில் IRCTC Rail Connect App அல்லது ஐஆர்சிடிசி இணையளதம் சென்று லாகின் செய்யவும்.
- நீங்கள் பயணம் செய்யும் தேதியைக் குறிப்பிட வேண்டும். உதாரணமாக ஆகஸ்ட் 23, 2025 அன்று பயணம் செய்ய வேண்டும் எனில் அதே தேதியைத் தேர்வு செய்ய வேண்டும்.
- பின்னர் ரயில் கிளம்பும் இடம், நீங்கள் செல்ல வேண்டிய இடம் ஆகியவற்றை தேர்ந்தெடுக்க வேண்டும்.
இதையும் படிக்க : ரயில் டிக்கெட்டில் முன்பதிவில் 20% சலுகை.. IRCTC அட்டகாசமான அறிவிப்பு.. இன்று முதல் முன்பதிவு தொடக்கம்!
- அன்றைய தினம் செல்லவிருக்கும் ரயில்களின் பட்டியல் உங்களுக்கு காட்டப்படும். அந்த ரயில்களில் உங்களுக்கு விருப்பமான ஒன்றை தேர்ந்தெடுத்து கிளாஸ் ஆகியவற்றை குறிப்பிட வேண்டும்.
- இருக்கைகள் இருந்தால் CURR_AVBL எனக் காட்டும்.
- எவ்வளவு வேகமாக தகவல்களைக் குறிப்பிட்டு புக் செய்கிறோமோ, ரயில் டிக்கெட் கிடைக்கும் வாய்ப்பு அதிகரிக்கும்.
- ரயில்களில் புக் செய்வதற்கு முன், உங்கள் தகவல்களை அதில் முன்பாகவே பதிவு செய்திருப்பது உங்களுக்கு விரைவாக புக்கிங் செய்ய ஏதுவாக இருக்கும்.