ஒரு மாநில பதிவு எண் கொண்ட வாகனத்தை வேறு மாநிலத்தில் ஓட்ட முடியுமா? உண்மை என்ன?
Vehicle Ownership Rules Explained : பொதுவாக பலருக்கு வேலை சார்ந்து வேறு மாநிலத்துக்கு குடிபெயர வேண்டிய தேவை இருக்கும். இதுபோன்ற நேரங்களில் நம் வாகனத்தின் பதிவு எண்ணை மாற்ற வேண்டுமா என்ற சந்தேகம் ஏற்படுவது இயல்பு. அதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.

ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்கு வாகனத்தின் ரிஜிஸ்டிரேஷனை மாற்றுவதற்கு சிறிது நேரம் ஆகலாம், ஆனால் நீங்கள் சரியான ஆவணங்கள் மற்றும் செயல்முறையுடன் சென்றால், அது கடினமாக இருக்காது. சரியான நேரத்தில் பதிவு செய்து, செயல்முறையை விரைவில் முடிப்பது போன்ற அனைத்து நடவடிக்கைகளும் பின்னர் எந்தவொரு சட்ட அல்லது நிர்வாக சிக்கலிலிருந்தும் உங்களைக் காப்பாற்றும். நீங்கள் ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்கு வேலை சார்ந்து மாற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால், உங்களிடம் கார் (Car) அல்லது பைக் இருந்தால், அதன் ரிஜிஸ்டிரேஷனை புதிய மாநிலத்திற்கு மாற்றுவது அவசியம். பலர் இந்த செயல்முறையை கடினமானது என நினைக்கிறார்கள். ஆனால் நீங்கள் சரியான டாக்குமென்ட்டை எடுத்து சென்றால் இந்த வேலை உங்களுக்கு எளிதாக இருக்கும். ரிஜிஸ்டிரேஷனுக்கு (Registration Certificate) உங்களுக்கு என்ன ஆவணங்கள் தேவை, அதன் விலை எவ்வளவு, மற்றும் நீங்கள் மனதில் கொள்ள வேண்டிய விஷயங்களை இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
தடையில்லாச் சான்றிதழைப் பெறுவது அவசியம்
உங்கள் வாகனத்தை ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்கு மாற்ற விரும்பும் போதெல்லாம், முதல் மற்றும் மிக முக்கியமான படி தடையில்லா சான்றிதழ் பெறுவது தான். தடையில்லா சான்றிதழ் என்பது உங்கள் வாகனத்திற்கு வரி செலுத்த வேண்டியதில்லை, எந்த வழக்கும் நிலுவையில் இல்லை என்பதை நிரூபிக்கும் ஆவணம். இதனை பெற்ற பிறகு நீங்கள் அதை எந்த மாநிலத்திற்கும் எடுத்துச் சென்று மீண்டும் பதிவு செய்யலாம்.
தடையில்லா சான்றிதழைப் பெற, உங்கள் வாகனம் பதிவு செய்யப்பட்டுள்ள, வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு சென்று ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.




இதையும் படிக்க : வாகனத்தின் ஆர்சி தொலைந்து விட்டதா? நகலைப் பெற ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?
தேவையான ஆவணங்கள்
- படிவம் 27 மற்றும் 28 . இரண்டு படிவங்களும் வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் கிடைக்கும் அல்லது ஆன்லைனில் பதிவிறக்கம் செய்யலாம்.
- வாகனத்தின் அசல் பதிவு சான்றிதழ் . PUC சான்றிதழ்
- காப்பீட்டு நகல்
- வாகனத்தின் சேஸ் எண்ணின் பென்சில் இம்ப்ரெஷன்
- அடையாள அட்டை மற்றும் முகவரிச் சான்று
- சில சந்தர்ப்பங்களில், காவல்துறை சரிபார்ப்பும் தேவைப்படுகிறது.
தடையில்லா சான்றிதழ் பெற 7 முதல் 21 நாட்கள் வரை ஆகலாம். தடையில்லா சான்றிதழ் பெற்ற பிறகு, நீங்கள் புதிய மாநிலத்திற்குச் சென்று 6 மாதங்களுக்குள் வாகனத்தைப் பதிவு செய்ய வேண்டும். இந்த நேரத்திற்குள் நீங்கள் பதிவு செய்யாவிட்டால், மீண்டும் தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும். இது தவிர, புதிய மாநிலத்திற்கு மாறிய 12 மாதங்களுக்குள் வாகனத்தின் பதிவை மாற்ற வேண்டும், இல்லையெனில் நீங்கள் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும்.
இதையும் படிக்க : ஒரு முறை ரீச்சார்ஜ் செய்தால் ஆண்டு முழுவதும் கட்டணம் செலுத்த வேண்டாம்.. ஃபாஸ்டேக் ஆண்டு பாஸுக்கு விண்ணப்பிப்பது எப்படி?
புதிய மாநிலத்தில் வாகனத்தைப் பதிவு செய்ய, நீங்கள் சம்பந்தப்பட்ட வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
- ஒரிஜினல் ஆர்சி உங்களிடம் இருக்க வேண்டும்.
- PUC சான்றிதழ்
- பதிய முகவரிக்கான சான்று. உதாரணமாக மின்சார பில், வாடகை ரசீது, ஆதார் அட்டை போன்றவற்றில் ஒன்றை சமர்பிக்கலாம்.
- படிவம் 29 மற்றும் 30. இது உங்கள் போக்குவரத்து அலுவலகத்திலேயே கிடைக்கும்.
இந்த ஆவணங்கள் அனைத்தையும் சரிபார்த்த பிறகு, புதிய மாநிலத்திற்கான பதிவு எண் உங்களுக்கு வழங்கப்படும். இதற்கான கட்டணம் மாநிலத்தை பொறுத்து மாறுபடும். பொதுவாக இதற்கு ரூ.300 முதல் ரூ.2000 வரை செலவாகும். இது தவிர, புதிய மாநிலத்தில் சாலை வரி அதிகமாக இருந்தால், அந்த வித்தியாசத்தையும் நீங்கள் செலுத்த வேண்டியிருக்கும்.