வாகனத்தின் ஆர்சி தொலைந்து விட்டதா? நகலைப் பெற ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?
Quick RC Recovery : வாகனம் நம்முடையது தான் என நிரூபிக்க ஆர்சி கட்டாயம். ஆர்சி தொலைந்துவிட்டால் இனி ஆர்டிஓ அலுவலகத்திற்கு செல்ல தேவையில்லை. அதனை ஆன்லைனில் எளிதாக விண்ணப்பித்து பெற முடியும். அது குறித்து விரிவாக இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

வாகனத்திற்கான மிக முக்கியமான ஆவணம், ஆர்சி புக். வாகனம் உங்களுடையது தான் என நிரூபிக்க இது மிகவும் அவசியம். இந்த ஆவணம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தால் (RTO) வழங்கப்படுகிறது. உங்கள் பைக் மற்றும் காரின் (Car) அசல் பதிவுச் சான்றிதழான ஆர்சி (RC) தொலைந்துவிட்டால், கவலைப்படத் தேவையில்லை. இப்போது ஆர்சி நகல் பெறுவது முன்பைக் காட்டிலும் மிக எளிதாகிவிட்டது. சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் அதன் செயல்முறையை டிஜிட்டல் மயமாக்கியுள்ளது, இதனால் நீங்கள் சில எளிய வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் வீட்டிலிருந்தே புதிய RCக்கு விண்ணப்பிக்கலாம். உங்கள் RC தொலைந்துவிட்டால் அல்லது திருடப்பட்டால், நீங்கள் நகல் RCக்கு விண்ணப்பிக்கலாம். அதற்கு ஆன்லைனில் எவ்வாறு விண்ணப்பிக்கலாம் என்பதை இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
ஆர்சி நகல் பெற எப்படி விண்ணப்பிப்பது?
ஆர்சி தொலைந்தவுடன் உடனடியாக காவல்நிலையத்தில் புகார் அளித்து எஃப்ஐஆர் பதிவு செய்திருக்க வேண்டும். ஆர்சி நகலுக்கு விண்ணப்பிப்பதற்கு முன், எஃப்ஐஆர் நகல், படிவம் 26, வாகன காப்பீட்டு சான்றிதழ், மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் (PUC) , முகவரிச் சான்று, ஆதார் கார்டு, வாக்காளர் ஐடி, பாஸ்போர்ட், மின்சாரக் கட்டணம் போன்ற முக்கியமான ஆவணங்கள் உங்களிடம் இருப்பது அவசியம்.
இதையும் படிக்க : மஹிந்திரா XUV 3XO REVX ரூ.8.94 லட்சத்தில் அறிமுகம் – அதன் சிறப்பம்சங்கள் என்ன?
ஆன்லைன் விண்ணப்ப செயல்முறை
- முதலில், பாரிவாஹன் சேவாவின் இணையதளத்திற்கு செல்லவும்.
- முகப்புப் பக்கத்தில், Online Service என்ற ஆப்சனை தேர்ந்தெடுத்து, வாகனம் தொடர்பான ஆப்சனைத் தேர்ந்தெடுக்கவும்.
- பின்னர் கீழ்தோன்றும் பட்டியலில் இருந்து உங்கள் மாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
- இதற்குப் பிறகு, கொடுக்கப்பட்ட விருப்பங்களிலிருந்து ஆர்சி நகல் விருப்பத்தைக் கிளிக் செய்யவும்.
- நீங்கள் முன்பு போர்ட்டலில் பதிவு செய்யவில்லை என்றால், முதலில் லாகின் செய்யவும். இதற்குப் பிறகு, பயனர் ஐடி மற்றும் கடவுச்சொல்லுடன் உள்நுழையவும்.
- இப்போது உங்கள் வாகனத்தின் பதிவு எண்ணையும் சேசிஸ் எண்ணின் கடைசி 5 இலக்கங்களையும் உள்ளிட்டு சமர்ப்பிக்கவும்.
- இதற்குப் பிறகு, ஆதார் அடிப்படையிலான e-KYC செயல்முறையை முடிக்கவும். உங்கள் ஆதார் எண்ணை உள்ளிட்டு ஓடிபி-ஐ உருவாக்கவும்.
- ஓடிபி உள்ளிட்ட பிறகு, கொடுக்கப்பட்ட படிவத்தில் தேவையான அனைத்து தகவல்களையும் நிரப்பி ஆவணங்களைப் பதிவேற்றவும்.
- விண்ணப்பப் படிவத்தை நிரப்பிய பிறகு, பரிந்துரைக்கப்பட்ட கட்டணத்தை ஆன்லைனில் செலுத்துங்கள்.
இதையும் படிக்க : கார் கண்ணாடியில் நீர் படிவதற்கான காரணம் என்ன? சுத்தம் செய்வது எப்படி?
ஆர்டிஓ அலுவலகத்தில் செய்ய வேண்டிய பணிகள்
ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு, உங்களுக்கு அருகிலுள்ள ஆர்டிஓ அலுவலகத்திற்குச் செல்ல வேண்டும். இதற்காக நீங்கள் முன்கூட்டியே முன்பதிவு செய்திருப்பது அவசியம். நிர்ணயிக்கப்பட்ட நாளில், உங்கள் அனைத்து ஆவணங்கள் மற்றும் பிரிண்ட் அவுட்களுடன் வட்டாரப் போக்குவரத்து அலுவலரை சந்திக்க வேண்டும். ஆவணங்களைச் சரிபார்த்து, அங்கு வாகனத்தை ஆய்வு செய்த பிறகு, உங்கள் நகல் ஆர்சி சில நாட்களில் வழங்கப்படும். இந்த செயல்முறையை ஏற்றுக்கொள்வதன் மூலம், எந்த முகவரும் அல்லது இடைத்தரகரும் இல்லாமல் வீட்டிலிருந்தே ஆர்சி நகலை எளிதாகப் பெறலாம்.