மஹிந்திரா XUV 3XO REVX ரூ.8.94 லட்சத்தில் அறிமுகம் – அதன் சிறப்பம்சங்கள் என்ன?
Next-Gen SUV Unveiled: மஹிந்திரா XUV 3XO REVX என்ற புதிய எஸ்யூவி மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த காரில் ஸ்டைலிஷ் தோற்றம் மற்றும் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும், ரூ.8.94 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) தொடக்க விலையில் கிடைக்கும் இந்த REVX எடிஷன், நகரப் பயணத்திற்கும் ஹைவே ஓட்டத்திற்கும் ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

சி செக்மெண்ட் எஸ்யூவி (SUV) என்பது நடுத்தர அளவுள்ள எஸ்யூவி கார்கள் என்பதைக் குறிக்கும். இவை குடும்பத்துடன் பயணிக்க ஏற்ற வகையில், தேசிய நெடுஞ்சாலைகளிலும் நல்ல கட்டுப்பாட்டுடன் ஓடும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. இந்த நிலையில் மஹிந்திரா (Mahindra) நிறுவனம், இந்தியாவில் தனது புதிய XUV 3XO REVX எடிஷன் வாகனத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விலை எக்ஸ-ஷோரூம் அடிப்படையில் ரூ.8.94 லட்சம் தொடக்க விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன. சி செக்மெண்ட் எஸ்யுவி வாகனமான இது, தற்போதைய XUV 3XO வரிசையில் சில முக்கியமான வடிவ மாற்றங்களுடனும் புதிய வசதிகளுடனும் வருகிறது. அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மஹிந்திராவின் புதிய XUV 3XO REVX மாடல்களில் இரண்டு விதமான பெட்ரோல் எஞ்சின் விருப்பங்கள் வழங்கப்படுகின்றன. இவை இரண்டும், நகரங்களில் அதிக டிராஃபிக்கில் பயணிக்கவும், தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்கவும் ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
1.2 லிட்டர் mStallion TCMPFi பெட்ரோல் எஞ்சின்
-
இது 110 ஹார்ஸ் பவர் உற்பத்தி செய்யும்
இதையும் படியுங்கள் -
200 Nm டார்க் வழங்குகிறது
-
நகரங்களில் தினசரி பயணம் செய்தவற்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது.
-
மைலேஜ், பயண வசதி ஆகியவற்றில் சிறந்த தேர்வாகும்.
1.2 லிட்டர் mStallion TGDi பெட்ரோல் எஞ்சின்
-
இது 131 ஹார்ஸ் பவருடன், மேலும் அதிக 230 Nm டார்க் வழங்குகிறது.
-
இது சிறந்த பிக்-அப் மற்றும் வேகத்துடன் ஓட்ட விரும்புபவர்களுக்கு சிறந்தது
-
ஹைவே பயணங்களுக்கு ஏற்றது.
இதையும் படிங்க: கார் கண்ணாடியில் நீர் படிவதற்கான காரணம் என்ன? சுத்தம் செய்வது எப்படி?
தோற்றத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றம்
REVX எடிஷனில் சில முக்கியமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன் இரண்டு கலர்களில் அதாவது டூயல் டோன் கலருடன் கிடைக்கிறது. REVX பேட்ஜிங் மற்றும் காரின் ரூஃப் பகுதியில் கலர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் ஆர்16 கருப்பு நிற வீல் கவர்ஸ் கொடுக்கப்பட்டிருக்கிறது. இது காருக்கு பதுமையான தோற்றத்தை அளிக்கின்றன. இந்த காரில் கிரே, டாங்கோ ரெட், நெப்யூலா ப்ளூ, எவரெஸ்ட் வைட், ஸ்டெல்த் பிளாக் ஆகிய 5 நிறங்களில் கிடைக்கின்றன.
உட்புற வசதிகள்
மஹிந்திரா XUV 3XO REVX சிறந்த பயண அனுபவத்தை அளிக்கும் வகையில் புதிய தொழில்நுட்பங்கள் வழங்கப்பட்டுள்ளன.
-
10.24 இன்ச் டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்
-
ஸ்டீயரிங் ஆடியோ கன்ட்ரோல்
-
டிரைவர் சீட் உயரம் கட்டுப்படுத்தும் வசதி
-
Dual-tone Black Leatherette சீட்கள்
-
4 ஸ்பீக்கர் ஆடியோ சிஸ்டம்.
இதையும் படிங்க: ஆட்டோமேட்டிக் கார் வாங்கலாமா? அதன் நன்மைகள் மற்றும் குறைகள் என்ன?
பாதுகாப்பு அம்சங்கள்
XUV 3XO REVX வாகனங்களில் பாதுகாப்பாக பயணிப்பதற்காக சில வசதிகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. அவை,
- 6 ஏர்பேக்
-
ESC (Electronic Stability Control)
-
ஹில் ஹோல்ட் கன்ட்ரோல் (HHC)
-
நான்கு டிஸ்க் பிரேக்குகள்
விலை விவரம்இந்த எக்ஸ்ஷோரூம் அடிப்பைடையில் XUV 3XO REVX M என்ற மாடல் ரூ.8.94 லட்சமும், XUV 3XO REVX M(O) ரூ.9.44 லட்சமும், XUV 3XO REVX A என்ற மாடல் ரூ.11.79 லட்சம் எனவு் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளன.