Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Aadhaar Card : பெயர் முதல் முகவரி வரை.. ஆதார் கார்டில் இனி அனைத்து விவரங்களையும் சுலபமாக அப்டேட் செய்யலாம்!

Aadhaar Update Online | ஆதார் கார்டில் இருக்கும் விவரங்கள் சரியாக இருக்க வேண்டும் என்ற கட்டாயம் உள்ளது. இதன் காரணமாக முகவரி மாறினாலோ, அல்லது வேறு ஏதேனும் தகவல்களை மாற்ற வேண்டும் என்றாலோ பொதுமக்கள் இ சேவை மையங்களுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இந்த நிலையில், பொதுமக்கள் மிக விரைவாக ஆதார் சேவை பெற ஒரு அம்சத்தை அரசு அறிமுகம் செய்ய உள்ளது.

Aadhaar Card : பெயர் முதல் முகவரி வரை.. ஆதார் கார்டில் இனி அனைத்து விவரங்களையும் சுலபமாக அப்டேட் செய்யலாம்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 29 Jul 2025 12:35 PM

இந்தியாவில் ஆதார் கார்டு (Aadhaar Card) முக்கிய ஆவணங்களில் ஒன்றாக உள்ள நிலையில், அதில் உள்ள விவரங்களை அவ்வாப்போது அப்டேட் செய்ய வேண்டியது அவசியமாக உள்ளது. அவ்வாறு ஆதார் கார்டில் உள்ள விவரங்களை அப்டேட் செய்ய வேண்டும் என்றால் இ சேவை மையங்களுக்கு செல்ல வேண்டும் என்ற நிலை உள்ளது. இந்த நிலையில், பொதுமக்களின் சிரமத்தை குறைக்கவும், மிக எளிதாக ஆதார் சேவைகளை பெறவும் அரசு ஒரு அதிரடி அம்சத்தை அறிமுகம் செய்ய உள்ளது. இதன் மூலம் ஆதார் கார்டில் உள்ள பெயர், முகவரி, பிறந்த தேதி, மொபைல் எண் உள்ளிட்ட தகவல்களை ஆதார் மையங்களுக்கு போகாமலே இலவசமாக அப்டேட் செய்துக்கொள்ளலாம்.

இந்திய குடிமக்களின் முக்கிய அடையாள ஆவணமாக விளங்கும் ஆதார் கார்டு

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு இந்திய குடிமக்களுக்கும் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI – Unique Identification Authority of India) 12 இலக்க எண் கொண்ட ஆதார் கார்டை வழங்கும். இந்த ஆதார் கார்டில் ஒருவரின் பெயர், முகவரி, வயது, பாலினம், புகைப்படம், கண்ரேகை மற்றும் கைரேகை உள்ளிட்ட தனிப்பட்ட மற்றும் மிக முக்கிய தகவல்கள் இடம் பெற்றிருக்கும். இவ்வாறு ஆதார் கார்டில் உள்ள முகவரி, வயது, புகைப்படம் ஆகியவை மாற்றத்திற்கு உட்பட்டவை என்றால் அவற்றை அவ்வப்போது மாற்றம் செய்ய வேண்டியது அவசியமாகிறது. இந்த நிலையில் தான் பொதுமக்களுக்கு பயனளிக்கும் வகையில் அரசு ஒரு அசத்தல் அம்சத்தை கையில் எடுத்துள்ளது.

இதையும் படிங்க : PAN Card : உங்கள் பான் கார்டை வேறு யாரேனும் பயன்படுத்துகின்றனரா?.. கண்டுபிடிப்பது எப்படி?

ஆதார் சேவைகளை எளிமையாக்கும் இந்திய தனித்துவ அடையாள ஆணையம்

நவம்பர் 2025 முதல் ஆதார் சேவைகளை எளிமையாக்கும் விதமாக புதிய இணைய சேவையை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக அரசு அறிமுகம் செய்ய உள்ளது. இதில் கூடுதல் சிறப்பாக ஆதார் கார்டில் உள்ள விவரங்களை அப்டேட் செய்ய பான் கார்டு, ரேஷன் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை அரசு ஏற்றுக்கொள்ள உள்ளது. மேலும், கேஸ் சிலிண்டர் பில் மற்றும் மின்சார கட்டண பில் ஆகியவற்றை முகவரி சான்றாக எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட உள்ளது. முன்னதாக ஆதார் முகவரியை அப்டேட் செய்ய வாடகை ஒப்பந்த பத்திரம், பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை சமர்பிக்க வேண்டாம்.

இதையும் படிங்க : இ-பான் என்றால் என்ன?.. இணையத்தில் விண்ணப்பிப்பது எப்படி?..சிம்பிள் ஸ்டெப்ஸ் இதோ!

இதிதவிர புதிய செயலி ஒன்றை அறிமுகம் செய்யும் முயற்சியிலும் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் இறங்கியுள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் ஆதார் கார்டை டிஜிட்டல் ஆக பயன்படுத்தவும், QR கோடு மூலம் ஆதார் விவரங்களை பெறவும் இது அனுமதிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.