AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Aadhaar Card: உங்கள் ஆதார் கார்டு தொலைந்து விட்டதா? நம்பரை எப்படி தெரிந்துகொள்வது?

Aadhaar Recovery Tips : சிம் கார்டு பெறுவது முதல் அரசு சேவைகளைப் பெறுவது வரை இந்தியாவில் அனைத்து சேவைகளுக்கும் ஆதார் கார்டு அவசியம். ஆனால் ஆதார் கார்டு தொலைந்து விட்டால் அதன் நம்பர் தெரியாமல் சிக்கலை சந்திக்க நேரிடும். இந்த கட்டுரையில் ஆதார் கார்டு தொலைந்தால் அதன் நம்பரை எப்படி தெரிந்துகொள்வது என பார்க்கலாம்.

Aadhaar Card: உங்கள் ஆதார் கார்டு தொலைந்து விட்டதா? நம்பரை எப்படி தெரிந்துகொள்வது?
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 30 Jun 2025 16:29 PM IST

சிம் கார்டு பெறுவது முதல் அரசு சேவைகளைப் பெறுவது வரை இந்தியாவில் அனைத்து வேலைகளுக்கும் ஆதார் கார்டு (Aadhaar Card) மிகவும் அவசியம். தற்போது ரயில் டிக்கெட்டை தட்கல் (Tatkal) முறையில் பெறுவதற்கும் ஆதார் அவசியமாகியிருக்கிறது. ஆதார் என்பது மிக முக்கிய அடிப்படை ஆவணமாகும். ஆதார் கார்டை தொலைத்து விட்டால் அரசின் சேவைகளை பெறுவது பாதிக்கப்படலாம். ஆதார் கார்டை இழந்துவிட்டீர்களா? கவலை வேண்டாம். UIDAI வழங்கும் ஆன்லைன் சேவைகள் மூலம், உங்கள் ஆதார் எண்ணை எளிதாக மீட்டெடுக்கலாம். இதற்கான நடைமுறைகள் எளிமையானது மட்டுமல்லாமல், பாதுகாப்பானதும் கூட. இந்த கட்டுரையில் தொலைந்த ஆதார் கார்டுகளை எப்படி மீட்பது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஆதார் கார்டு தொலைந்துவிட்ட நிலையில் நம்பரை எப்படி தெரிந்துகொள்வது?

  •  இதற்கு அதிகாரப்பூர்வ வலைதளமான https://myaadhaar.uidai.gov.in என்ற இணைய முகவரிக்கு செல்லவும்.
  • ஆதாரில் உள்ளது படி உங்களது முழு பெயர், பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் மற்றும் மெயில் ஐடி போன்ற விவரங்களை உள்ளிடவும்.
  • பின்னர் கொடுக்கப்பட்டிருக்கும் கேப்ட்சாவை சரியாக பதிவிடவும்.
  • பின்னர் நீங்கள் OTP-ஐக் கோரலாம்.
  • பதிவு செய்யப்பட்ட மொபைல் அல்லது மின்னஞ்சலில் பெறப்பட்ட ஓடிபி-ஐ உள்ளிடவும்.
  • சரிபார்ப்பு முடிந்தவுடன் உங்கள் உங்களுக்கு அதிகாரப்பூர்வ ஆதார் தளத்தில் இருந்து எஸ்எம்எஸ் மூலம் உங்களுக்கு ஆதார் எண் அனுப்பப்படும்.

தொலைந்த ஆதாரை மீட்பது தொடர்பாக இந்திய தனித்துவ அடையாள ஆணையம் பதிவு

 

மொபைல் எண்ணை இணைக்காதவர்கள் என்ன செய்வது?

மொபைல் எண்ணை ஆதார் கார்டுடன் இணைக்காதவர்கள் அருகிலுள்ள ஆதார் பதிவு அல்லது புதுப்பிப்பு மையத்திற்கு சென்று, உங்கள் பெயர், பாலினம், மாவட்டம், பின்கோடு போன்ற விவரங்களை தெரிவிக்கவும். அங்கே உள்ள அலுவலர், உங்கள் விவரங்களை பதிவு செய்த பிறகு, பயோமெட்ரிக் சரிபார்ப்பை (கைரேகை/கருவிழி ஸ்கேன்) செய்வார். விவரங்கள் அனைத்தும் பொருந்தினால், உங்களுக்கு மின்னணு ஆதாரை டவுன்லோடு செய்து தருவார். இதனை தற்காலிகமாக பயன்படுத்திக்கொண்டு பயன்பெறலாம்.

இந்தியர்களுக்கான அடிப்படை அடையாள ஆவணமாக பயன்படும் ஆதார் கார்டில் உள்ள விபரங்களை, ஒவ்வொரு பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறை குறைந்தது ஒருமுறை புதுப்பிக்க வேண்டும் என இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வலியுறுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஆதார் கார்டில் உள்ள பெயர், முகவரி, பிறந்த தேதி, பாலினம் போன்ற அடையாள விவரங்களை இலவசமாக ஆன்லைனில் அப்டேட் செய்யும் கடைசி தேதி ஜூன் 14, 2025 என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அதன் காலக்கெடுவை நீட்டித்துள்ளது. அதன் படி வருகிற ஜூன் 14, 2026 வரை ஆதார் கார்டுகளை ஆன்லைனில் முற்றிலும் இலவசமாக புதுப்பித்து கொள்ளலாம்.

ஆதார் என்பது இன்று இந்தியாவில் அடையாள ஆவணம் மட்டுமல்ல, பெரும்பாலான அரசு மற்றும் தனியார் சேவைகளைப் பெறுவதற்கான அடிப்படைத் தரவாகவும் இருக்கிறது. ஆதார் தொலைந்துவிட்டாலும், UIDAI வழங்கும் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் சேவைகள் மூலம் எளிதாக மீட்டெடுக்க முடியும். அதனால், நம்மை பற்றிய தகவல்களை சரியாக பதிவு செய்திருக்க வேண்டும் என்பது மிகவும் முக்கியம். முன்கூட்டியே மொபைல் எண்ணை இணைத்து வைத்திருப்பதும், சுய அடையாளத்தை நிரூபிக்க முக்கியமான பாதுகாப்பு நடவடிக்கையாகும்.

Follow Us