இ-பான் என்றால் என்ன?.. இணையத்தில் விண்ணப்பிப்பது எப்படி?..சிம்பிள் ஸ்டெப்ஸ் இதோ!
e PAN Card | இந்திய குடிமக்களின் நிதி நடவடிக்கைகளை கண்காணிக்க உள்ள ஒரு ஆவணம் தான் பான் கார்டு. தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக அனைத்தும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுவிட்டன. அந்த வகையில் பொதுமக்களுக்கு அரசு வழங்கும் ஆவணங்களும் டிஜிட்டல் மயமாக உள்ளன. அந்த வகையில் பான் கார்டின் டிஜிட்டல் வடிவமாக இ பான் கார்டு உள்ளது.

இந்தியாவில் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக தற்போது அனைத்தும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் குடிமக்களுக்கு அரசு வழங்கும் ஆவணங்களும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன. மிகவும் எளிதாக பயன்படுத்தும் வகையில் இந்த மின்னணு ஆவணங்கள் தற்போது பயன்பாட்டில் உள்ளன. இதன் மூலம் இணையதளத்தில் இருந்து நேரடியாக ஆவணங்களை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். எல்லா நேரத்திலும் ஆவணங்களை கையில் எடுத்த செல்ல வேண்டிய தேவையை இது குறைக்கிறது. ஆதார் கார்டை (Aadhaar Card) போலவே பான் கார்டையும் (PAN Card) மின்னணு முறையில் பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த நிலையில், இ பான் (e PAN) என்றால் என்ன, அதனை இணையத்தில் விண்ணப்பிப்பது எப்படி பெறுவது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இ-பான் என்றால் என்ன?
இந்தியாவில் உள்ள பொதுமக்களின் நிதி நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக அரசு பான் கார்டை பயன்பாட்டில் வைத்துள்ளது. பான் கார்டில் ஒருவரின் அனைத்து வங்கி கணக்குகளும் இணைக்கப்படும். இந்த நிலையில், ஒருவர் ஒரு ஆண்டுக்கு எத்தனை முறை பண பரிவர்த்தனை மேற்கொள்கிறார், எவ்வளவு பண பரிவர்த்தனை மேற்கொள்கிறார் என்பதை தெரிந்துக்கொள்ளலாம். மேலும், பான் கார்டு மூலம் ஒருவர் முறையாக வருமான வரி செலுத்துகிறாரா என்பதையும் தெரிந்துக்கொள்ள முடியும். இவ்வாறு ஒருவரின் தனிப்பட்ட நிதி நடவடிக்கைகளை கண்காணிக்கும் ஒரு முக்கிய ஆவணமாக பான் உள்ளது.
பான் கார்டுக்கு விண்ணப்பித்து அதனை கையில் பெறுவதற்கு குறிப்பிட்ட சில நாட்கள் தேவைப்படும். இந்த நிலையில், உடனடி தேவை உள்ளவர்களுக்கு அது சிரமத்தை ஏற்படுத்தும். இந்த நிலையில் தான், இ-பான் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. பான் கார்டை விடவும் இ- பான் பெறுவதற்கான கால அவகாசம் மிகவும் குறைவு. இந்த இ-பான் கார்டு உடனடி பண பரிவர்த்தனை, வங்கி கணக்கு தொடங்குவது உள்ளிட்டவற்றுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. காகிதம் இல்லா பான் கார்டு விண்ணப்பத்தை இது ஊக்குவிக்கிறது.
இதையும் படிங்க : இனி புதிய பான் கார்டுக்கு ஆதார் கட்டாயம் – ஏற்கனவே பான் கார்டு வைத்திருப்பவர்கள் என்ன செய்ய வேண்டும்?
இ பான் கார்டு பெறுவது எப்படி?
- அதற்கு முதலில் வருமான வரித்துறையின் இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
- அதில் Instant e- PAN என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
- பிறகு Get New e-PAN என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
- அதில் உங்கள் 12 இலக்க ஆதார் எண் மற்றும் ஓடிபியை உள்ளிட்டு சரிபார்க்கவும்.
- பிறகு திரையில் தோன்றும் ஆதார் விவரங்களை உறுதி செய்ய வேண்டும்.
- விண்ணப்பத்தை சமர்பித்த பிறகு உங்களுக்கு ஒப்புகை எண் அனுப்பப்படும்.
- அந்த எண்ணை பயன்படுத்தி ஒருசில நிமிடங்களில் இ-பான் பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம்.
மேற்குறிப்பிட்ட முறையை பின்பற்றி மிக எளிமையாக பான் கார்டு பெற்றுக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.