AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

இனி புதிய பான் கார்டுக்கு ஆதார் கட்டாயம் – ஏற்கனவே பான் கார்டு வைத்திருப்பவர்கள் என்ன செய்ய வேண்டும்?

Aadhaar-PAN Update: பான் கார்டு என்பது இந்திய வருமான வரித்துறையின் கீழ் ஒவ்வொரு வரி (Tax) செலுத்துவோருக்கும் வழங்கப்படும் தனித்துவமான அடையாள எண்ணாகும். இந்த நிலையில் புதிதாக பான் கார்டு பெற ஆதார் கார்டு கட்டாயம் என வருமான வரித்துறை அறிவித்துள்ளது. இதன் காரணம் குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

இனி புதிய பான் கார்டுக்கு ஆதார் கட்டாயம் – ஏற்கனவே பான் கார்டு வைத்திருப்பவர்கள் என்ன செய்ய வேண்டும்?
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 22 Jun 2025 17:01 PM IST

பான் (PAN – Permanent Account Number) கார்டு என்பது இந்திய வருமான வரித்துறையின் கீழ் ஒவ்வொரு வரி (Tax) செலுத்துவோருக்கும் வழங்கப்படும் தனித்துவமான அடையாள எண்ணாகும். 10 எழுத்துகளைக் கொண்ட இந்த எண்ணை பயன்படுத்தி, பேங்கிங், வருமான வரி தாக்கல், முதலீடுகள், ஜிஎஸ்டி(GST) பதிவு என ஒருவரின் அனைத்து நிதி தொடர்பான செயல்பாடுகளையும் கண்காணிக்க முடியும்.  இந்த நிலையில் வருமான வரித்துறையின் கீழ் செயல்படும் மத்திய நேரடி வரிகள் வாரியம் (Central Board of Direct Taxes) வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  வருகிற 2025 ஜூலை 1ஆம் தேதியில் இருந்து புதிய பான் கார்டுக்கு விண்ணப்பிக்க ஆதார் அட்டை கட்டாயமாக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளது. வரி விதிப்பு முறையில் பொறுப்புணர்வையும், டிஜிட்டல் செயல்பாடுகளை வலுப்படுத்துவதே இதன் நோக்கமாக கூறப்படுகிறது. வருகிற 2025 ஜூலை 1 ஆம் தேதிக்கு பிறகு, ஆதார் அட்டை இல்லாமல் பான் கார்டுக்கு விண்ணப்பிக்க முடியாது.

புதிய விதிகள் என்ன சொல்கின்றன?

இது வரை பான் கார்டு பெற பல அடையாள ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டியிருந்தது. இந்த நிலையில் இனி ஜூலை 1, 2025 அன்று முதல் பான் கார்டுக்கு விண்ணப்பிக்க ஆதார் கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆதார் கார்டு மூலம் பான் விண்ணப்பதாரரின் அடையாளம் சரிபார்க்கப்படும். இது வருமான வரி கணக்கீட்டில் பொறுப்புணர்வை ஏற்படுத்த கொண்டுவரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.  வருமான வரித் துறையின் புதிய ஆன்லைன் விண்ணப்பத்தளத்தில் இந்த கட்டாய ஆதார் சரிபார்ப்பு மேற்கொள்ளப்படும்.

ஏற்கனவே பான் கார்டு வைத்திருப்பவர்கள் என்ன செய்ய வேண்டும்?

ஆதார் கார்டு ஏன் கட்டாயம்?

மோசடி சம்பவங்கள், ஒரே நபர் பல பான் கார்டுகளைப் பயன்படுத்துவது, தவறான ஜிஎஸ்டி முயற்சிகள் ஆகியவற்றை தவிர்க்க வருமான வரித்துறை ஆதாருடன் பான் கார்டு இணைப்பதை கட்டாயமாக்கியுள்ளது. இதன் மூலம் வரி மோசடிகளை தடுக்க முடியும் என வருமான வரித்துறை கூறுகிறது.

பான் 2.0 என்ன?

வருமான வரித்துறை தற்போது பான் 2.0 என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறது. இதில், பான் மற்றும் டிஏஎன் (TAN) தொடர்பான அனைத்து வேலைகளையும் இனி முழுமையாக டிஜிட்டல் முறையில் நடக்கும். இதனால் வரி செலுத்தும் நபர்களுக்கு செயல்முறை எளிமையாகி, சேவைகளும் விரைவாக கிடைக்கும். புதிய பான் எடுக்க விரும்பும் நபர்களுக்கு இது பயன்படும். ஆனால், ஏற்கனவே பான் உள்ளவர்கள் கவலைப்படத் தேவையில்லை. உங்கள் பான் கார்டில் எந்தவித மாற்றமும் செய்ய வேண்டிய அவசியமில்லை.

Follow Us