AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Ration Card : ரேஷன் கார்டில் e KYC செய்ய கால அவகாசம் நீட்டிப்பு.. எப்போது வரை?

Ration Card e-KYC Deadline Extended | ரேஷன் கார்டுகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ள நிலையில், மோசடிகளை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில், ரேஷன் கார்டில் e KYC மேற்கொள்ள வேண்டும் என்று அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்த நிலையில், ரேஷன் கார்டில் e KYC செய்வதற்கான கால அவகாசத்தை அரசு நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.

Ration Card : ரேஷன் கார்டில் e KYC செய்ய கால அவகாசம் நீட்டிப்பு.. எப்போது வரை?
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 18 Jun 2025 13:46 PM IST

தமிழகத்தில் ரேஷன் அட்டைகள் (Ration Card) டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு e KYC (Know Your Customer) செய்ய வேண்டியது அவசியம் ஆகிறது. தற்போது பலர் தங்களது குடும்ப அட்டையில் இதை செய்யாமல் உள்ளனர். ரேஷன் அட்டை பயனர்கள் e KYC செய்ய வேண்டும் என அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இருப்பினும் பெரும்பாலான குடும்ப அட்டைகளில் e KYC  செய்யப்படாமல் உள்ளது. இந்த நிலையில், ஜூன் 30, 2025-ஐ e KYC செய்வதற்கான கடைசி தேதியாக அரசு நிர்ணயம் செய்துள்ளது. அந்த தேதிக்குள் e KYC  செய்து முடிக்கவில்லை என்றால் ரேஷன் அட்டை ரத்து செய்யப்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

லட்சக்கணக்கான குடும்பங்களுக்கு வாழ்வாதாரமாக விளங்கும் ரேஷன் அட்டை

இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் ரேஷன் அட்டை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்தியாவை பொருத்தவரை மொத்தம் 2 கோடியே 16 லட்சம் குடும்ப அட்டைகள் உள்ளன. அந்த குடும்ப அட்டைகள் எந்த திட்டத்தின் கீழ் வருகிறதோ அதற்கான பலன்கள் வழங்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக இந்த திட்டத்தில் வருமை கோட்டின் கீழ் உள்ள பொதுமக்களுக்கு அரிசி, பருப்பு, கோதுமை, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய உணவு பொருட்கள் மானிய விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. இதன் மூலம் ஏழை, அளிய மக்கள் பயனடைந்து வருகின்றனர்.

ரேஷன் அட்டையில் e KYC செய்வதற்கான கால அவகாசம் நீட்டிப்பு

ரேஷன் கார்டுகள் மூலம் நடைபெறும் முறைகேடுகளை தவிர்க்கும் வகையில், பயனர்களின் விவரங்கள் சரிப்பார்க்கப்பட்டு ஆதார் மையப்படுத்திய கைரேகை பதிவுகளை இணைக்கும்  பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் 2024-ல் தொடங்கப்பட்டது. இந்த நிலையில், 2025 மார்ச் 30 ஆம் தேதி ரேஷன் கார்டில் e KYC சரிப்பார்ப்பதற்கான கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டது. ஆனால், இன்னமும் லட்சக்கணக்கான பொதுமக்கள் ரேஷன் கார்டில் ஆதார் சரிப்பார்ப்பு மூலம் கைரேகை பதிவு செய்யும் e KYC-ஐ மேற்கொள்ளாமல் உள்ளனர். எனவே e KYC சரிப்பார்ப்பதற்கான கடைசி தேதியை அரசு நீட்டித்துள்ளது. அதன்படி, ஜூன் 30, 2025-க்குள் பயனர்கள் தங்களது ரேஷன் கார்டில் e KYC மேற்கொள்ள வேண்டும் என கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ரேஷன் அட்டையில் e KYC செய்வது எப்படி?

  1. ரேஷன் அட்டையில் e KYC செய்ய அருகில் உள்ள ரேஷன் கடைக்கு செல்ல வேண்டும்.
  2. அங்கு எந்த உங்கள் குடும்ப அட்டையில் உள்ள எந்த நபரின் கைரேகை பதிவு செய்யாமல் உள்ளதோ அவரின் கைரேகையை பதிவு செய்ய வேண்டும்.

ரேஷன் கடையில் கைரேகை பதிவு செய்த ஒரு சில நாட்களில் அப்டேட் ஆகிவுடும். அரசு அறிவித்துள்ளபடி ஜூன் 30, 2025-க்குள் ரேஷன் கார்டில் e KYC செய்யவில்லை என்றால், ரேஷன் கார்டு ரத்து செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow Us