Ration Card : ரேஷன் அட்டை பயனர்களுக்கு குட் நியூஸ்.. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
Public Grievance Redressal Camp on May 10, 2025 | ரேஷன் அட்டை தொடர்பாக பொதுமக்கள் பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகின்றனர். இதற்காக அரசு ஒவ்வொரு மாதமும் முகாம் நடத்தி வருகிறது. அந்த வகையில், மே மாதத்திற்கான குறைதீர் முகாமை அரசு அறிவித்துள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

சென்னை, மே 08 : ரேஷன் அட்டை (Ration Card) திட்டம் மூலம் தமிழகம் முழுவதும் உள்ள லட்சக்கணகான குடும்பங்கள் பயனடைந்து வரும் நிலையில், அது குறித்து தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஏற்கனவே, ரேஷன் அட்டை தொடர்பாக அரசு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வரும் நிலையில், தற்போது ரேஷன் அட்டை பயனர்கள் பயன்பெறும் வகையில் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த நிலையில், ரேஷன் அட்டை குறித்து அரசு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
தமிழ்நாடு முழுவதும் ரேஷன் அட்டை மூலம் பயன்பெறும் லட்சக்கணக்கான மக்கள்
பொதுமக்களின் நலனுக்காக அரசு பல வகையான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அத்தகைய திட்டங்களில் ஒன்றுதான் இந்த ரேஷன் அட்டை திட்டம். ரேட்ஷன் அட்டை திட்டம் மூலம் வருமை கோட்டின் கீழ் உள்ள குடும்பங்களுக்கு அரசு மாநிய விலையில் அரசி, பருப்பு, சர்க்கரை, கோதுமை உள்ளிட்ட உணவு பொருட்களை வழங்கி வருகிறது. இதன் மூலம் அத்தியாவசிய தேவைகளை கூட பூர்த்தி செய்ய முடியாமல் உள்ள விளிம்பு நிலை மக்களுக்கு இது மிகவும் அவசியமாக பயனுள்ளதாக உள்ளது.
ரேஷன் அட்டை மூலம் உணவு பொருட்கள் மட்டுமன்றி மேலும் சில சேவைகளும் வழங்கப்படுகிறது. அதாவது, மகளிர் உரிமைத் தொகை, பொங்கல் பரிசு, முதியோர் உதவி தொகை உள்ளிட்டவை ரேஷட் அட்டையின் அடிப்படையில் வழங்கப்படுகிறது. இதன் மூலம் உண்வு பொருட்கள் மட்டுமன்றி, நிதி உதவியையும் வழங்கும் சிறப்பு திட்டமாக ரேஷன் அட்டை திட்டம் உள்ளது.
ரேஷன் அட்டை குறித்து பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அரசு
ரேஷன் அட்டை விண்ணப்பிப்பது, பெயர் மற்றும் முகவரி மாற்றம் செய்வது என பொதுமக்கள் பல சிக்கல்களை சந்தித்து வருகின்றனர். இதற்காக அரசு அலுவலகங்களுக்கு அலையும் நிலை உள்ளது. இதன் காரணமாக பொதுமக்களின் சிரமத்தை குறைக்க அரசு ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. அதாவது சென்னையில் உள்ள 19 மண்டலங்களில் மே 10, 2025 பொது விநியோக திட்ட மக்கள் குறைதீர் முகாம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னையில் உள்ள 19 மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களில் மே 10, 2025 காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை இந்த குறைதீர் முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.