Ration Card : ரேஷன் கார்டு இல்லாமல் மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்கலாமா?.. கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!
Kalaignar Magalir Urimai Thogai | தமிழ்நாடு அரசு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட பெண்கள் பயனடைந்து வருகின்றனர். இந்த நிலையில், புதிய பயனர்கள் திட்டத்தில் சேருவதற்கான அறிவிப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இந்த நிலையில், அதற்கான முகாம்களை அரசு ஜூன் மாதம் முதல் அரசு செயல்படுத்த உள்ளது.

தமிழ்நாடு அரசு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை (Kalaignar Magalir Urimai Thogai) திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் லட்சக்கணக்கான பெண்கள் பயனடைந்து வருகின்றனர். ஏற்கனவே ஒரு கோடிக்கும் அதிகமான பெண்கள் இந்த திட்டத்தில் பயன்பெற்று வரும் நிலையில், அரசு மேலும் புதிய பயனர்களை இந்த திட்டத்தின் கீழ் இணைத்துக்கொண்டே வருகிறது. மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பயன்பெற ரேஷன் கார்டு கட்டாயமாக உள்ளது. இந்த நிலையில், ரேஷன் கார்டு இல்லாமல் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பயன்பெற ஏதேனும் வாய்ப்பு உள்ளதா என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை பரவலாக பயன்படுத்தி வரும் தமிழ்நாடு அரசு
2021 சட்டமன்ற தேர்தல் வாக்கு சேகரிப்பின் போது திமுக அரசு ஆட்சிக்கு வந்தால் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்ற நிலையில், ஆட்சிக்கு வந்த திமுக ஒரு சில மாதங்கள் கழித்து மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தில் ஏற்கனவே ஒரு கோடிக்கும் அதிகமான குடும்ப தலைவிகள் பயன்பெற்று வரும் நிலையில், புதிய பயனர்களை திட்டத்தில் இணைக்கும் அறிவிப்பை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தார்.
சட்டப்பேரவையில் அறிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
விடுபட்டவர்களுக்கு விரைவில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, ஜூன் முதல் மீண்டும் விண்ணப்பிக்கலாம்.
சட்டப்பேரவையில், கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்கள்#TNAssembly pic.twitter.com/KOf34SAW8d
— DMK (@arivalayam) April 25, 2025
சட்டப்பேரவையில் அறிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2025, ஜூன் மாதம் முதல் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் புதிய பயனர்கள் இணையலாம் என அறிவித்தார். இதனால் குடும்ப தலைவிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பயனடைய ரேஷன் கார்டு கட்டாயமாக உள்ளது. ரேஷன் கார்டு இல்லை என்றால் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படாது. எனவே, மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் புதிய பயனராக விரும்பும் நபர்கள் தங்களிடம் ரேஷன் கார்டு இல்லை என்றால் முதலில் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க வேண்டும். ரேஷன் கார்டு கிடைத்த பிறகு மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம்.
மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி?
ஜூன் 4, 2025 அன்று அரசு மக்களுடன் முதல்வர் திட்டத்தின் சிறப்பு முகாமை நடத்த உள்ளது. தமிழ்நாடு முழுவதும் சுமார் 9,000 இடங்களில் நடைபெறும் இந்த முகாம்களில் ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, பாஸ்போர்ட் அளவு புகைப்படம் உள்ளிட்டவற்றை கொடுத்து மகளிர் உரிமைத்திகைக்கு விண்ணப்பிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.