Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Ration Card : பொதுமக்களுக்கு குட் நியூஸ்.. வீடு தேடி வரும் ரேஷன் கடை ஊழியர்கள்.. அலைச்சல் மிச்சம்!

Important Information of Ration Card Biometric Information | தமிழகத்தில் உள்ள கோடிக்கணக்கான மக்கள் ரேஷன் அட்டை திட்டத்தின் மூலம் பயன்பெற்று வருகின்றனர். இந்த நிலையில், ரேஷன் அட்டையில் பயோமெட்ரிக் விவரங்களை அப்டேட் செய்ய வேண்டும் என அரசு அறிவித்திருந்தது. இந்த நிலையில், தற்போது அது குறித்து முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.

Ration Card : பொதுமக்களுக்கு குட் நியூஸ்.. வீடு தேடி வரும் ரேஷன் கடை ஊழியர்கள்.. அலைச்சல் மிச்சம்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 13 Jun 2025 16:08 PM

பொதுமக்களுக்காக அரசு செயல்படுத்தும் சிறந்த திட்டங்களில் ஒன்றுதான் ரேஷன் கார்டு. இந்த ரேஷன் கார்டு திட்டத்தின் மூலம் பொதுமக்களுக்கு அரசு பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறது. இந்தியாவில் பசி, பட்டினியை போக்க இந்திய அரசு முன்னெடுத்து வரும் சிறப்பு வாய்ந்த அம்சமாக இது கருதப்படுகிறது. தமிழகத்தை பொறுத்தவரை ரேஷன் ஆட்டை திட்டத்தில் கோடிக்கணக்கான மக்கள் பயன் பெற்று வரும் நிலையில், பொதுமக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் ரேஷன் கார்டு குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

வருமை கோட்டின் கீழ் உள்ள பொதுமக்களுக்கு வர பிரசாதமாக உள்ள ரேஷன் அட்டை திட்டம்

இந்தியாவில் வறுமைக் கோட்டின் கீழ் இருக்கும் பொதுமக்களுக்கு உதவி வழங்கும் வகையில் ரேஷன் அட்டை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ரேஷன் அட்டை திட்டம் மூலம் வறுமைக் கோட்டின் கீழ் உள்ள குடும்பங்களுக்கு மானிய விலையில் அரிசி, பருப்பு, கோதுமை, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்கள் வழங்கப்படுகின்றன. இதன் மூலம் ஏராளமான ஏழை, எளிய குடும்பங்கள் பயன் பெற்று வருகின்றன. முன்னதாக ரேஷன் அட்டைகள் காகிதத்தால் ஆன புத்தகமாக இருந்த நிலையில் தற்போது ஸ்மார்ட் கார்டுகளாக வடிவம் பெற்றுள்ளன. இதில் பழைய ரேஷன் அட்டையில் இருப்பதை போலவே குடும்ப உறுப்பினர்களின் பெயர், முகவரி என அனைத்தும் இடம்பெற்று இருக்கும் நிலையில் புதியதாக கைரேகை பதிவும் இணைக்கப்பட்டுள்ளது.

இந்த கைரேகை அடிப்படையில் தான் தற்போது ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. ரேஷன் பொருட்களை வாங்க குடும்ப உறுப்பினர்கள் யாரேனும் ஒருவர் கைரேகை பதிவு செய்ய வேண்டும் என்பது கட்டாயமாக உள்ளது. இந்த நிலையில், ரேஷன் அட்டையில் உள்ள குடும்ப உறுப்பினர்கள் அனைவரது கைரேகையும் ரேஷன் அட்டையில் பதிவு செய்யப்பட வேண்டும் என அரசு வலியுறுத்துகிறது. அவ்வாறு கைரேகை பதிவு செய்யாத உறுப்பினர்களின் பெயர் ரேஷன் அட்டையில் இருந்து நீக்கப்படும் என்றும் அரசு எச்சரித்துள்ளது. இந்த பயோமெட்ரிக் தகவல் பதிவேற்றம் செய்ய மே 30, 2025 கடைசி நாள் என தமிழக அரசு அறிவித்து இருந்தது. இந்த நிலையில், அது குறித்து முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

ரேஷன் கார்டில் பயோமெட்ரிக் விவரங்களை அப்டேட் செய்ய மே 30 கடைசி தேதி

ரேஷன் கார்டில் கைரேகை உள்ளிட்ட பயோமெட்ரிக் விவரங்களை அப்டேட் செய்ய மே 30, 2025 கடைசி தேதி என அறிவிக்கப்பட்டது. இந்த தேதிக்குள் பயோமெட்ரிக் விவரங்களை அப்டேட் செய்யவில்லை என்றால் அட்டை ரத்து செய்யப்படும் என்று அரசு அறிவித்திருந்தது. இந்த நிலையில், பயோமெட்ரிக் விவரங்களை அப்டேட் செய்ய ரேஷன் கடை ஊழியர்களே பொதுமக்களின் வீடு தேடி வருகின்றனர். இந்த பணிகள் முதற்கட்டமாக வேலூரில் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.