AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Voter ID : இனி 15 நாட்களில் வாக்காளர் அடையாள அட்டை பெறலாம்.. தேர்தல் ஆணையம் வெளியிட்ட புதிய விதிகள்!

Election Commission Of India | வாக்காளர் அடையாள அட்டை விநியோகம் மற்றும் விண்ணப்பம் செய்வது தொடர்பான விதிகளில் இந்திய தேர்தல் ஆணையம் சில முக்கிய மாற்றங்களை மேற்கொண்டுள்ளது. வாக்காளர்களுக்கு எளிதாக மற்றும் விரைவாக சேவை வழங்கும் நோக்கில் இந்த புதிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவை என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

Voter ID : இனி 15 நாட்களில் வாக்காளர் அடையாள அட்டை பெறலாம்.. தேர்தல் ஆணையம் வெளியிட்ட புதிய விதிகள்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 20 Jun 2025 11:18 AM IST

வாக்காளர் அடையாள அட்டையை (Voter ID Card) விரைந்து வழங்குவது தொடர்பான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை இந்திய தேர்தல் ஆணையம் (Election Commission of India) வெளியிட்டுள்ளது. இந்த புதிய வழிகாட்டு நெறிமுறைகளின்படி, 15 நாட்களுக்குள் வாக்காளர் அடையாள அட்டையை பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், வாக்காளர் அடையாள அட்டை தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டு நெறிமுறைகள் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இந்திய குடிமக்களுக்கு மிக முக்கியமாக உள்ள வாக்காளர் அடையாள அட்டை

இந்திய குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் வாக்காளர் அடையாள அட்டை மிக முக்கியமான ஆவணங்களில் ஒன்றாக உள்ளது. 18 வயது நிரம்பிய இந்திய குடிமக்கள் தங்களுக்கு விருப்பமான தலைவர்களை தேர்ந்தெடுக்க, தேர்தலில் வாக்களிப்பதற்கான அடையார் ஆட்டையாக இது உள்ளது. அரசாங்கத்தை தேர்ந்தெடுக்கும் அதிகாரத்தை வழங்கும் ஆட்டையாகவும், இந்திய குடிமக்களுக்கு ஜனநாயக உரிமையை வழங்கும் அட்டையாகவும் இது உள்ளது. இது தவிர,  தனிமனித அடையாள அட்டையாகவும் இந்தியாவில் வாக்காளர் அடையாள அட்டை பயன்படுத்தப்படுகிறது.

புதிய வழிகாட்டு நெறிமுறைகள் – தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்தி குறிப்பு

தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்புகள்

வாக்காளர் அடையாள அட்டையை விரைந்து வழங்குவதற்காக இந்திய தேர்தல் ஆணையம் சில வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

15 நாட்களாக குறைக்கப்பட்ட கால அவகாசம்

இந்த புதிய விதிகளின்படி, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தாலோ அல்லது திருத்தங்கள் மேற்கொண்டாலோ சம்பந்தப்பட்ட வாக்காளர்களுக்கு வெறும் 15 நாட்களில் அடையாள அட்டை வழங்கப்படும். தற்போது வாக்காளர் அடையாள அட்டை பெறுவதற்கு ஒரு மாத காலம் வரை ஆகும் நிலையில், அதனை வெறும் 15 நாட்களாக இந்திய தேர்தல் ஆணையம் குறைத்துள்ளது.

வாக்காளர் அடையாள அட்டையை டிராக் செய்யலாம்

இந்திய அஞ்சல் துறை வழியாக வாக்காளர் அடையாள அட்டையை அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. இந்த நிலையில், வாக்காளர்களை அது சென்றடையும் வரை, அடையாள அட்டை வரும் வழித்தடத்தை கைபேசி மூலம் அறிய வசதியும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளது.

நான்கு மாதங்களில் பல்வேறு மாற்றங்கள்

மேலும், வாக்காளர்களுக்கான சேவை வழங்குகளை எளிதாகவும் விரைவாகவும் வழங்கும் வகையில் கடந்த நான்கு மாதங்களாக பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow Us