குழந்தைகளின் ஆதார் கார்டில் உடனடியாக இத பண்ணுங்க.. இல்லனா ரத்து செய்யப்படலாம்.. UIDAI முக்கிய தகவல்!
UIDAI New Announcement | ஆதார் கார்டு தொடர்பான முக்கிய அறிவிப்புகளை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் குழந்தைகளுக்கான ஆதார் கார்டு குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதை செய்ய தவறும் பட்சத்தில் குழந்தைகளுக்கான ஆதார் கார்டு ரத்து செய்யப்படுவதற்கு வாய்ப்பு உள்ளதாகவும் கூறியுள்ளது.

இந்தியாவில் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை என அனைவருக்கும் ஆதார் கார்டு (Aadhaar Card) கட்டாயமாக உள்ளது. அதிலும் குறிப்பாக ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ப்ளூ ஆதார் (Blue Aadhaar) வழங்கப்படுகிறது. இந்த ஆதார் கார்டு சாதாரண ஆதார் கார்டை விட சற்று வித்தியாசமாக இருக்கும். அதாவது குழந்தைகளுக்கு வழங்கப்படும் இந்த ப்ளூ ஆதார் கார்டில் பெரியவர்களுக்கு வழங்கப்படும் ஆதார் கார்டில் இருப்பதைப் போல கைரேகை, கண்ரேகை உள்ளிட்ட தகவல்கள் இடம்பெற்று இருக்காது. குழந்தைகள் ஐந்து வயதை நிறைவடையும் போது இந்த தகவல்களை ஆதார் கார்டில் இணைக்கும் படி இந்திய தனது அடையாள ஆணையத்தின் விதிகள் கூறுகின்றன (UIDAI – Unique Identification Authority of India). இந்த நிலையில் குழந்தைகளுக்கான ஆதார் கார்டில் செய்ய வேண்டிய சில முக்கிய மாற்றங்கள் குறித்து இந்திய தனித்துவ அடையாள ஆணையம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் முக்கிய அறிவிப்பு
குழந்தைகளுக்கான ஆதார் கார்டில் உள்ள தகவல்களை பெற்றோர்கள் உடனடியாக புதுப்பிக்க வேண்டும் என்று இந்திய தனித்துவ அடையாள ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு வழங்கப்படும் ஆதார் கார்டில் பெயர், பிறந்த தேதி, பாலினம், முகவரி ஆகியவை மட்டுமே இடம் பெற்று இருக்கும் நிலையில், ஐந்து வயது தாண்டிய குழந்தைகளுக்கு கைரேகை மற்றும் கண் ரேகை பதிவுகளை இணைக்கும்படி இந்திய தனித்து அடையாள அணையம் கூறியுள்ளது.
இதையும் படிங்க : Aadhaar Card: உங்கள் ஆதார் கார்டு தொலைந்து விட்டதா? நம்பரை எப்படி தெரிந்துகொள்வது?




கட்டணம் செலுத்த வேண்டுமா? – UIDAI கூறுவது என்ன?
இவ்வாறு குழந்தைகளின் ஆதார் கார்டில் விவரங்களை புதுப்பிப்பது தொடர்பாகவும் சில தகவல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி ஐந்து முதல் ஏழு வயதுடைய குழந்தைகளை அருகில் உள்ள சேவை மையங்கள் அல்லது தபால் நிலையங்களுக்கு அழைத்து சென்று கைரேகை மற்றும் கண் ரேகை உள்ளிட்ட தகவல்களை இலவசமாக இணைத்துக் கொள்ளலாம் என்று கூறியுள்ளது. இதுவே குழந்தைகளுக்கு ஏழு வயதுக்கும் மேல் இருந்தால் ரூபாய் 100 கட்டணம் செலுத்தி இந்த தகவல்களை புதுப்பித்துக் கொள்ளலாம் என்று கூறியுள்ளது.
ஏழு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு ஆதார் எண்ணுடன் கண்ரேகை மட்டும் கைரேகை பதிவு செய்யாவிட்டால் அவர்களின் ஆதார் கார்டு ரத்து செய்யப்படும் என்றும் இந்திய தனது அடையாள ஆணையம் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.