Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Aadhaar Card : ஜூன் 14 தான் கடைசி.. இன்னும் ஒரு நாள் தான் இருக்கு.. அதுக்குள்ள ஆதார் கார்டில் இத பண்ணிடுங்க!

Update Your Aadhaar Card Before June 14, 2025 | ஆதார் கார்டில் முகவரி, வயது, புகைப்படம் உள்ளிட்ட மாற்றத்திற்கு உரிய தகவல்கள் இடம்பெற்று இருக்கும் நிலையில், அவற்றை அவ்வப்போது மாற்றம் செய்வது அவசியம் ஆகிறது. இந்த நிலையில் தான், ஜூன் 14, 2025 வரை மட்டுமே ஆதார் விவரங்களை இலவசமாக புதுப்பித்துக்கொள்ள முடியும் என இந்திய தனித்துவ அடையாள ஆணையம் கூறியுள்ளது.

Aadhaar Card : ஜூன் 14 தான் கடைசி.. இன்னும் ஒரு நாள் தான் இருக்கு.. அதுக்குள்ள ஆதார் கார்டில் இத பண்ணிடுங்க!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 27 Jun 2025 11:06 AM

இந்தியாவில் உள்ள இந்திய குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் ஆதார் கார்டு (Aadhaar Card) கட்டாயமாக உள்ளது. ஆதார் கார்டு இவ்வளவு மிக முக்கியமான ஆவணமாக உள்ள நிலையில் அதில் உள்ள விவரங்களை 10 ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது அப்டேட் செய்ய வேண்டும் என இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI – Unique Identification Authority of India) கூறுகிறது. அந்த வகையில் தற்போது வரை ஆதார் கார்டில் உள்ள விவரங்களை இலவசமாக அப்டேட் செய்து கொள்ள இந்திய தனித்து அடையாள ஆணையம் அனுமதி வழங்குகிறது. ஆனால் ஜூன் 14, 2025 பிறகு ஆதார் விவரங்களை அப்டேட் செய்ய வேண்டும் என்றால் கட்டணம் செலுத்த வேண்டும். எனவே ஆதார் விவரங்களை அப்டேட் செய்ய விரும்பும் நபர்கள் ஜூன் 14, 2025-க்குள் அதனை செய்து முடிப்பது கட்டணம் செலுத்தாமல் இருக்க உதவும்.

ஜூன் 14 தான் கடைசி – அதுக்குள்ள ஆதார் அப்டேட் பண்ணிடுங்க

இந்திய தனித்துவ அடையாள ஆணையம், இந்திய குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் ஆதார் கார்டை வழங்குகிறது. 12 இலக்க எங்களை கொண்டுள்ள இந்த கார்டில் ஒரு தனிநபரின் பெயர், வயது, பாலினம், முகவரி, கைரேகை, கண் ரேகை மற்றும் புகைப்படம் உள்ளிட்ட முக்கிய தகவல்கள் இடம் பெற்றிருக்கும். இவ்வாறு ஒருவரின் தனிப்பட்ட அனைத்து முக்கிய தகவல்களும் ஆதார் கார்டில் இடம் பெற்று இருப்பதால் அது முக்கிய ஆவணமாக கருதப்படுகிறது. ஆதார் கார்டில் உள்ள வயது முகவரி புகைப்படம் உள்ளிட்ட தகவல்கள் மாற்றத்திற்கு உரியது என்பதால் அதனை அவ்வப்போது அப்டேட் செய்ய வேண்டியது கட்டாயமாக உள்ளது.

குறிப்பாக ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறையாவது இந்த விவரங்களை அப்டேட் செய்ய வேண்டும் என இந்திய தனித்துவ அடையாள ஆணையும் கூறுகிறது. இந்த நிலையில், ஆதார் கார்டில் உள்ள இந்த விவரங்களை இலவசமாக அப்டேட் செய்துக்கொள்ள தற்போது வரை அனுமதி வழங்கப்படுகிறது. ஆதார் கார்டை இலவசமாக அப்டேட் செய்துக்கொள்ள ஜூன் 14, 2025 ஆம் தேதியை கடைசி நாளாக UIDAI நிர்ணயம் செய்துள்ள நிலையில், ஜூன் 14, 2025-க்கு மேல் ஆதார் கார்டு அப்டேட் செய்தால் ரூ.50 கட்டணம் செலுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஆன்லைனில் இலவசமாக ஆதார் கார்டு அப்டேட் செய்வது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஆதார் கார்டை ஆன்லைனில் இலவசமாக அப்டேட் செய்வது எப்படி?

  1. அதற்கு முதலில்  ஆதார் இணையதளமான https://uidai.gov.in/ க்கு செல்ல வேண்டும்.
  2. அதில்  Update Aadhaar  என்ற ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.
  3. பின்னர் 12 இலக்க ஆதார் எண் மற்றும் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ள செல்போன் எண்ணை பதிவிட வேண்டும்.
  4. செல்போன் எண்ணை பதிவிட்டதும், அந்த எண்ணுக்கு ஓடிபி வரும்.
  5. அந்த ஓடிபியை டைப் செய்து வேண்டும்.
  6. பினன்ர் என்ன விவரங்களை புதுப்பிக்க வேண்டுமோ அவற்றை மாற்றம் செய்து அதற்கான  ஆவணங்களை அப்லோடு செய்ய வேண்டும்.
  7. நீங்கள் அப்டேட் செய்ய வேண்டிய தகவல்கள் மற்றும் ஆவணங்கள்  சரியாக உள்ளதா என்பதை செக் செய்துகொள்ள வேண்டும்.
  8. பிறகு Submit செய்ய வேண்டும்.

நீங்கள் விவரங்களை அப்டேட் செய்த ஒருசில நாட்களில், அதாவது 15 நாட்களுக்குள்ளாக மாற்றப்பட்ட விவரங்களுடன் கூடிய ஆதார் கார்டை பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.