காலையிலேயே குட் நியூஸ்… அதிரடியாக குறைந்த கேஸ் சிலிண்டர் விலை.. இவ்வளவா?
Chennai Gas Cyliner Price August : கடந்த சில மாதங்களாக வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. அந்த வகையில், 2025 ஆகஸ்ட் 1ஆம் தேதியான இன்றும் வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை குறைந்துள்ளது. அதன்படி, தற்போது ரூ.34.50 காசுகள் குறைந்து, ரூ.1,789க்கு விற்பனையாகிறது. வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றமில்லை.

சென்னை, ஆகஸ்ட் 01 : சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான (Chennai Gas Cylinder Price) கேஸ் சிலிண்டரின் விலை (Commercial Gas Cylinder Price August) குறைந்துள்ளது. 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ. 34.50 காசுகள் குறைந்து, ரூ.1,789க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே நேரத்தில், வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்தவித மாற்றமும் இல்லை. வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.868.50க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நாட்டில் சமையல் எரியாவு சிலிண்டர் விலைகள் மாதத்தின் முதல் நாள் மாற்றப்பட்டு வருகிறது. இந்த விலை நேரடியாக பொதுமக்களையும், வணிகர்களிடமும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக, வணிக சிலிண்டர் விலையில் மாதந்தோறும் ஏற்றம் இறக்கம் இருந்து வருகிறது. இந்த விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றனர்.
சர்வதேச சந்தையின் நிலவரத்தை பொறுத்து, இந்த விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றிக் கொண்டு வருகிறது. இதில் சென்னையில் பாரத் பெட்ரோலியம், இந்தியன் ஆயில், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகியவை கேஸ் சிலிண்டர் விலையை நிர்ணயம் செய்கின்றன. அந்த வகையில், கடந்த சில மாதங்களாகவே 19 கிலோ எடை கொண்ட கேஸ் சிலிண்டர் விலை கடந்த சில மாதங்களாகவே குறைந்து வருகிறது. அதாவது, 2025 ஏப்ரல், மே, ஜூன், ஜூலை மாதங்களில் வணிக சிலண்டர் விலை குறைந்துள்ளது.




Also Read : ஆகஸ்ட் 2 ஆம் தேதி தபால் நிலைய சேவைகள் ரத்து.. வெளியான முக்கிய அறிவிப்பு!
அதிரடியாக குறைந்த கேஸ் சிலிண்டர் விலை
2025 ஏப்ரல் மாதத்தில் ரூ.41 ஆகவும், மே மாதத்தில் ரூ.14 ஆகவும், ஜூன் மாதத்தில் ரூ.24ஆகவும், ஜூலை மாதத்தில் ரூ.58 ஆகவும் குறைந்துள்ளது. 2024ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ரூ.1,980 ஆக இருந்த வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை தற்போது ரூ.1,789க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல, வீட்டு உபயோக சிலிண்டர் விலை 2025 ஏப்ரல் மாதத்தில் இருந்து மாற்றப்படவில்லை. இந்த நிலையில், 2025 ஆகஸ்ட் 1ஆம் தேதியான கேஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டரின் விலை குறைந்துள்ளது. 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ. 34.50 காசுகள் குறைந்து, ரூ.1,789க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.868.50க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
Also Read : தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் UPI.. விரைவில் மாநிலம் முழுவதும் அமல்!
மற்ற மாநிலங்களில் விலை விவரம்
Oil marketing companies have revised the prices of commercial LPG gas cylinders. The rate of 19 kg commercial LPG gas cylinders has been reduced by Rs 33.50 effective from tomorrow. In Delhi, the retail sale price of a 19 kg commercial LPG cylinder will be Rs 1631.50 from August…
— ANI (@ANI) July 31, 2025
தேசிய தலைநகர் டெல்லியை பொறுத்தவரை, 19 கிலோ எடை கொண்ட கேஸ் சிலிண்டர் விலை ரூ.33.50 குறைந்து, 1631.50 ரூபாய்ககு விற்பனை செய்யப்படுகிறது. கொல்கத்தாவில் 19 கிலோ எடை கொண்ட கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,735.50 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மும்பையில் 19 கிலோ எடைய கொண்ட சிலிண்டர் விலை ரூ.1,583 ஆக விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.