Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

குட் நியூஸ்.. குறைந்தது கேஸ் சிலிண்டர் விலை.. எவ்வளவு தெரியுமா?

Chennai Gas Cylinder Price July 2025 : சென்னையில் வணிக பயன்பாட்டுக்கு கேஸ் சிலிண்டரின் விலை குறைந்துள்ளது. 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.57.50 காசுகள் குறைந்து, ரூ.1825.50 ஆக விற்பனை செய்யப்படுகிறது. அதே நேரத்தில், வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்படுகிறது.

குட் நியூஸ்.. குறைந்தது கேஸ் சிலிண்டர் விலை..  எவ்வளவு தெரியுமா?
கேஸ் சிலிண்டர் விலை
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 01 Jul 2025 08:47 AM

சென்னை, ஜூலை 01 : சென்னையில் வணிக பயன்பாட்டுக்கு கேஸ் சிலிண்டரின் (Commercial Gas Cylinder Price July) விலை குறைந்துள்ளது. 19 கிலோ எடை  கொண்ட வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.57.50 காசுகள் குறைந்து, ரூ.1825.50 ஆக விற்பனை (Chennai Gas Cyclinder Price) செய்யப்படுகிறது. அதே நேரத்தில், வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.868.50 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்தியாவில் கேஸ் சிலிண்டர் விலை மாதந்தோறும் ஏற்ற இறக்கத்தில் இருக்கும். இது பொதுமக்கள் மற்றும் வணிகர்களுக்கு நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகிறது. குறிப்பாக, உணவகங்கள், சிறிய அளவிலான உணவகங்கள் போன்றவற்றில் 19 கிலோ எடை கொண்ட கேஸ் சிலிண்டரை நம்பி இருப்பதால், மாதந்தோறும் விலையில் ஏற்படும் மாற்றங்கள் வணிகர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

குறைந்தது கேஸ் சிலிண்டர் விலை

சர்வதேச அளவில் இருக்கு சந்தை நிலவத்தை பொறுத்து, எண்ணெய் நிறுவனங்கள் கேஸ் சிலிண்டர் விலைகளை நிர்ணயித்து வருகின்றனர். இதற்காக அறிவிப்பை மாதந்தோறு 1ஆம்தேதி எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டு வருகின்றன.

இதில் சென்னையை பொறுத்தவரை, பாரத் பெட்ரோலியம், இந்தியன் ஆயில், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய மூன்று எண்ணெய் நிறுவனங்கள் கேஸ் சிலிண்டர் விலை நிர்ணயம் செய்கின்றன.  இந்த நிலையில், சென்னையில்  19 கிலோ எடை கொண்ட கேஸ் சிலிண்டர் விலை குறைந்துள்ளது.

அதன்படி, வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.58.50 காசுகள் குறைந்துள்ளது. இதன் மூலம் 19 கிலோ எடை கொண்ட கேஸ் சிலிண்டர் விலை ரூ.1825.50 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே நேரத்தில், 14 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இதன் மூலம் வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.868.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த சில மாதங்களாகவே வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைந்து வருகிறது. 2025 ஏப்ரல், மே , ஜூன் மாதங்களில் சிலிண்டர் விலை குறைந்துள்ளது. அதன்படி, 2025 ஏப்ரல் மாதத்தில் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.41 ஆகவும், மே மாதத்தில் ரூ.14.50 ஆகவும், ஜூன் மாதத்தில் ரூ.24 ஆகவும் குறைந்தது.

மாநில வாரியாக கேஸ் சிலிண்டர் விலை விவரங்கள்

19 கிலோ எடை கொண்ட கேஸ் சிலிண்டர் விலை டெல்லியில் ரூ.1665 ஆகவும், நொய்டாவில் 1,747 ஆகவும், கொல்கத்தாவில் 1,769 ஆகவும், மும்பையில் ரூ.1615 ஆகவும், சென்னையில் ரூ.1823 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை 2025 ஜூலை 1ஆம் தேதியான இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

அதே நேரத்தில், 14 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சிலிண்டர் விலை டெல்லியில் 853 ஆகவும், மும்பையில் ரூ.852.50 ஆகவும், தெலங்கானவில் ரூ.905 ஆகவும், லக்னோவில் ரூ.890 ஆகவும், பாட்னாவில் ரூ.942 ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், வீட்டு உபயோக சிலிண்டர் விலை பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் மானிய விலையில் ரூ.300 குறைந்து ரூ.550க்கு விற்பனை செய்யப்படுகிறது குறிப்பிடத்தக்கது.