Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

குழாய் மூலம் வீடுகளுக்கு இயற்கை ஏரிவாயு.. சென்னையில் வரும் மாற்றம்.. எங்கெங்கு தெரியுமா?

Chennai Corporation Natural gas System : சென்னையில் குழாய் மூலம் வீடுகளுக்கு இயற்கை எரிவாயு விநியோகம் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதற்காக பணிகளை மேற்கொள்ள டிட்கோ நிறுவனத்திற்கு மாநகராட்சி அனுமதி அளித்துள்ளது. நீலாங்கரை, திருவான்மியூர், சேப்பாக்கம், ராயபுரம், தண்டையார்பேட்டை, திருவெர்ற்றியூர் உள்ளிட்ட 8 இடங்களில் குழாய் மூலம் வீடுகளுக்கு இயற்கை எரிவாயு விநியோகம் செய்யப்பட உள்ளதாக சென்னை மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

குழாய் மூலம் வீடுகளுக்கு இயற்கை ஏரிவாயு.. சென்னையில் வரும் மாற்றம்.. எங்கெங்கு தெரியுமா?
சென்னை மாநகராட்சி
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 01 Jul 2025 07:20 AM

சென்னை, ஜூலை 01 :  சென்னையில் குழாய் மூலம் வீடுகளுக்கு இயற்கை எரிவாயு விநியோகம் (Natural Gas) செய்யும் திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக சென்னை மாநகராட்சி (Greater Chennai Corporation) அறிவித்துள்ளது. சென்னையில் 8 இடங்களில் எரிவாயு குழாய் அமைக்கும் பணியை விரையில் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் மேயர் பிரியா ராஜன் தலைமையில் 2025 ஜூன் 30 ஆம் தேதி நடைபெற்றது. இந்த கூட்டத்தில் துணை மேயர் மகேஷ் குமார், ஆணையாளர் குமரகுருபரன், நிலைக் குழுத் தலைவர்கள், மண்டல குழுத் தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் சென்னையின் அடிப்படை திட்டங்கள் குறித்தும், வளர்ச்சி திட்டங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. அதோடு, பல்வேறு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டது.

குழாய் மூலம் வீடுகளுக்கு இயற்கை எரிவாயு

இந்த நிலையில், சென்னையில் குழாய் மூலம் வீடுகளுக்கு எரிவாயு விநியோகம் விரைவில் செய்யப்படும் என மாநகராட்சி கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னையில் 8 இடங்களில் குழாய்கள் மூலம் வீடுகளுக்கு இயற்கை எரிவாயு விநியோகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக 8 இடங்களில் பணியை மேற்கொள்ள டிட்கோ நிறுவனத்திற்கு மாநகராட்சி மன்ற கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சென்னையில் 27 இடங்களில் டிட்கோ நிறுவனம் அனுமதி கோரி இருந்தது. ஆனால், 8 இடங்களில் மட்டுமே அதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதால் டிட்கோ நிறுவனத்திற்கு மாநகராட்சி மன்ற கூட்டத்தில் அனுமதி வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதன்படி, நீலாங்கரை, திருவான்மியூர், சேப்பாக்கம், ராயபுரம், தண்டையார்பேட்டை, திருவெர்ற்றியூர், எண்ணூர், திருவான்மியூர் ஆகிய 5 இடங்களில் குழாய் மூலம் இயற்கை எரிவாயு திட்டத்தில் பணிகள் தொடங்கம் என தகவல் வெளியாகி உள்ளது. இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வரும் பட்சத்தில், சிலிண்டர் வாங்கும் நிலை இருக்காது என கூறப்படுகிறது.

சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம்

 

மேலும், சென்னை மாமன்ற கூட்டத்தில் 110 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, சென்னை மாநகராட்சி பள்ளிகள் அனைத்திலும் சிசிடிவி காட்சிகளை பொருந்துவதற்கான தீர்மானம் நிறைவேற்ப்பட்டது. அதாடு, கடற்பாசி பூங்கா அமைக்க சிஎம்டிஏவுக்கு நுழைவு அமைதி அளித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து, மயான பூமிகளை தனியார் மூலம் பராமரிக்க சென்னை மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.