Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Train Ticket Price Hike : ரயில் டிக்கெட் கட்டண உயர்வு.. இன்று முதல் அமல்!

Indian Railways Increases Express Train Fares | இந்திய ரயில்வே விரைவு ரயில்களுக்கான ரயில் டிக்கெட் கட்டணத்தை உயர்த்தியுள்ள நிலையில், அது இன்று (ஜூலை 01, 2025) முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த நிலையில், எந்த எந்த ரயில்களுக்கு எவ்வளவு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

Train Ticket Price Hike : ரயில் டிக்கெட் கட்டண உயர்வு.. இன்று முதல் அமல்!
மாதிரி புகைப்படம்
vinalin-sweety
Vinalin Sweety | Updated On: 01 Jul 2025 07:59 AM

சென்னை, ஜூலை 01 : இந்தியாவில் விரைவு ரயில்களுக்கான கட்டணம் உயர்வு (Express Train Fare Hike) இன்று (ஜூலை 01, 2025) முதல் அமலுக்கு வந்துள்ளது. ஜூலை 01, 2025 முதல் இந்திய ரயில்வேயில் முக்கிய சில மாற்றங்கள் அமலுக்கு வந்துள்ள நிலையில், புதிய கட்டணமும் அமலுக்கு வந்துள்ளது. கடைசியாக 2020  ஆம் ஆண்டு ரயில் கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் ரயில் கட்டணத்தை இந்திய ரயில்வே (Indian Railway) உயர்த்தியுள்ளது. இந்த நிலையில், ரயில்களுக்கு எவ்வளவு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ரயில் கட்டணத்தை உயர்த்திய இந்திய ரயில்வே

இந்தியாவைப் பொருத்தவரை பொதுமக்களின் பிரதான போக்குவரத்து சேவையாக ரயில்கள் உள்ளன. குறைந்த கட்டணத்தில் மிக விரைவாக பயணம் செய்ய முடியும் என்பதால் பெரும்பாலான பொதுமக்கள் ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். இந்த நிலையில், ரயில்களுக்கான கட்டணத்தை உயர்த்தி இந்திய ரயில்வே உத்தரவிட்டுள்ளது. இந்தியா முழுவதும் சுமார் 12,617 ரயில்கள் இயக்கப்படும் நிலையில், பயணிகளுக்கு பெரிய பாதிப்பு ஏற்படாத வகையில் சிறிய அளவில் கட்டணம் உயர்த்த திட்டமிட்டு வருவதாக கூறப்பட்டு வந்த நிலையில், இன்று (ஜூலை 01, 2025) முதல் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது.

அமலுக்கு வந்துள்ள ரயில் டிக்கெட் கட்டண உயர்வு – விவரம் இதோ

புறநகர் ரயில் டிக்கெட் மற்றும் சீசன் டிக்கெட் கட்டணத்தில் எந்த வித மாற்றமும் செய்யப்படவில்லை. விரைவு ரயிலில் 500 கிலோ மீட்டர் வரை கட்டண அதிகரிப்பு இல்லை. இந்த  நிலையில், 500 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரூபாய் ஐந்து கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதே போல 1,501 முதல் 2,500 கிலோமீட்டருக்கு ரூபாய் பத்து கட்டணமும், 2,501 முதல் 3,000 கிலோமீட்டர் தூரத்துக்கு ரூபாய் 15 கட்டணமும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஸ்லீப்பர் முன் பதிவு வகுப்பு பெட்டிகளில் ஒரு கிலோ மீட்டருக்கு ஐந்து காசுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதே போல ஏசி வகுப்புகளுக்கு ஒரு கிலோ மீட்டருக்கு 5 காசுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. மேலும் பிற ஏசி வகுப்புகளுக்கு ஒரு கிலோ மீட்டருக்கு இரண்டு காசுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேற்குறிப்பிட்ட இந்த கட்டண உயர்வுகள் அனைத்தும் இன்று (ஜூலை 01, 2025) முதல் அமலுக்கு வந்துள்ளது. நேற்றைய (ஜூன் 30) வரை ரயில் டிக்கெட் முன்பதிவு செய்தவர்களுக்கு இது பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது.