ரூ.3,000 போதும்.. பாஸ்டேக் வருடாந்திர பாஸ்.. எப்படி, எப்போது பெறுவது? வெளியான அறிவிப்பு
New Fastag Annual Pass : 2025 ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் ரூ.3,000 கட்டணத்தில் ஒரு வருடம் முழுவதும் பயன்படுத்தும் வகையில், பாஸ்டேக் பாஸ் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்துள்ளார். இந்த வருடாந்திர பாஸ் மூலம் அதிகபட்சமாக ரூ.200 முறை பயணங்கள் மேற்கொள்ள முடியும்.

டெல்லி, ஜூன் 18 : நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளில் வருடாந்திரா பாஸ்டேக் (Fastag Annual Pass) பாஸ் 2025 ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் அறிமுகப்படுத்தப்படும் என்றும் மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கிரி (Nitin Gadkari) அறிவித்துள்ளார். இந்த வருடாந்திர பாஸை ரூ.3,000 செலுத்தி பெற்றுக் கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாஸ் மூலம் 200 ட்ரீப் வரை பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் வரிசையில் காத்திருப்பதை தடுக்க பாஸ்டேக் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் வாகனத்தின் முகப்பில் ஒட்டப்பட்டிருக்கும் ஸ்டீக்கர் தானியங்கி எந்திரம் முலம் ஸ்கேன் செய்யப்பட்டு, வங்கக் கணக்கில் இருந்து நேரடியாக சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த பாஸ்டேக் மூலம் வாகனங்கள் வரிசையில் நீண்ட நேரம் காத்திருப்பதை தடுக்கிறது.
பாஸ்டேக் வருடாந்திர பாஸ் அறிமுகம்
இந்த பாஸ்டேக் குறித்து அவ்வப்போது முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது புதிய அறிவிப்பை மத்திய அமைச்சர் நிதின் கட்கிரி அறிவித்துள்ளது. அதாவது, சுங்கச்சாவடிகளில் வருடாந்திரா பாஸ்டேக் பாஸ் 2025 ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் அறிமுகப்படுத்தப்படும் அறிவித்துள்ளது.




இந்த வருடாந்திர பாஸ் என்றால் என்ன? இதை எப்படி பெறுவது போன்ற விவரங்களை பார்ப்போம். அதாவது, ரூ.3000 கட்டணத்திலும் பாஸ்டேகில் வருடாந்திர பாஸ் 2025 ஆகஸ்ட் 15 ஆம் தேதி முதல் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக அமைச்சர் நிதி கட்கரி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்த பாஸ் மூலம் 200 பயணங்கள் வரை மேற்கொள்ளலாம் அல்லது ஒரு வருடத்திற்கு இதனை பயன்படுத்த முடியும். எப்போதில் இருந்து இந்த வருடாந்திர பாஸை பெறுகிறீர்களோ, ஒரு வருடம் வரை பயன்படுத்தலாம். கார்கள், ஜீப்புகள், வேன்கள் போன்ற வணிக நோக்கமில்லாத வாகனங்களுக்கு மட்டுமே இந்த பாஸ் பொருந்தும். வணிக வாகனங்களுக்கு இந்த வருடாந்திர பாஸ் பொருந்தாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நிதின் கட்கரி அறிவிப்பு
Important Announcement 📢
🔹In a transformative step towards hassle-free highway travel, we are introducing a FASTag-based Annual Pass priced at ₹3,000, effective from 15th August 2025. Valid for one year from the date of activation or up to 200 trips—whichever comes…
— Nitin Gadkari (@nitin_gadkari) June 18, 2025
இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், ” புதிய பாஸ்டேக் பாஸ் 2025 ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் கிடைக்கும். வருடாந்திர பாஸ் நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் செலவு மற்றும் பயண நேரத்தை குறைக்கும். காத்திருப்பு நேரங்களைக் குறைப்பதன் மூலமும், நெரிசலைக் குறைப்பதன் மூலமும், சுங்கச்சாவடிகளில் ஏற்படும் பிரச்னை தடுக்க உதவும். மில்லியன் கணக்கான வாகன உரிமையாளர்களுக்கு விரைவான மற்றும் சிறப்பான பயண அனுபவத்தை வழங்குவதை நோக்கமாக கொண்டுள்ளது” என்றார்.
வருடாந்திர பாஸ் பெறுவது எப்படி?
இந்த வருடாந்திர பாஸை ராஜ்மார்க் யாத்ரா செயலி, NHAI அதிகாரப்பூர்வ இணையதளம், MORTH சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் இணையதளம் மூலம் பெற்றுக் கொள்ளலாம். இந்த பாஸ் 2025 ஆகஸ்ட் 15ஆம் தேதி அறிமுகப்படுத்தப்டும். அதன்பிறகு, மேற்கொண்ட இணையதளம் அல்லது செயலி மூலம் உங்கள் வாகன பதிவு விவரங்கள் மற்றும் மொபைல் எண்ணை உள்ளிட்டு, வருடந்திர பாஸ் என்ற ஆப்ஷனை கிளிக் செய்து ரூ.3000 கட்டணத்தை செலுத்த வேண்டும். பணம் செலுத்திய பிறகு, உங்கள் FASTag வருடாந்திர பாஸுடன் தானாக இணைக்கப்படும். இதன்பிறகு, 24 மணி நேரத்திற்கு உங்களது வருடாந்திர பாஸ் மூலம் பயணிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.