Pune Bridge Collapse: புனேவில் இந்திராயானி ஆற்று பாலம் இடிந்து விபத்து.. வெள்ளத்தில் 30 பயணிகள் அடித்துச் செல்லப்பட்ட சோகம்!
Indrayani River Bridge Collapse in Pune: புனே மாவட்டத்தில் உள்ள குண்ட்மாலா கிராமத்தில், இந்திராயணி ஆற்றின் மீது இருந்த பாலம் இடிந்து விழுந்ததில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். 25-30 பேர் நீரில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. பாலம் பழுதடைந்த நிலையில் இருந்ததும், அதிக எண்ணிக்கையிலான மக்கள் பாலத்தில் இருந்ததும் விபத்துக்கு காரணம் எனக் கூறப்படுகிறது. மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

புனே, ஜூன் 15: மகாராஷ்டிராவின் புனே மாவட்டத்தின் மாவல் தாலுகாவில் உள்ள குண்ட்மாலா கிராமத்திற்கு அருகே இன்று அதாவது 2025 ஜூன் 15ம் தேதி பிற்பகல் 3.30 மணியளவில் இந்திரயானி ஆற்றின் (Indrayani River) மீது இருந்த பாலம் இடிந்து (Pune Bridge Collapse) விழுந்தது. இதில் 25 முதல் 30 பேர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த எதிர்பாராத விபத்தில் சிறுவர்கள் உள்பட இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளதாக அப்பகுதி எம்.எல்.ஏ சுனில் ஷெல்கே தெரிவித்துள்ளார். முதற்கட்ட விசாரணையில் ஆற்றின் வேகமான ஓட்டத்தை காண பலர் நின்று கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.
என்ன நடந்தது..?
புனேவில் உள்ள பிம்ப்ரி-சின்ச்வாட் காவல் நிலையத்திற்கு உட்பட்ட குண்டலாமா கிராமத்திற்கு அருகில் இந்திராயானி ஆற்றில் ஒரு பாலம் இடிந்து விழுந்தது. குண்டமாலா புனேவிலிருந்து 30 கி.மீ தொலைவில் உள்ளது. மும்பை செல்லும் வழியில் விரைவுச் சாலையில் நுழைவதற்கு முன்பு இந்த இடம் அமைந்துள்ளது. பாலம் இடிந்து விழுந்ததில் சில சுற்றுலா பயணிகள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த பிற்பகல் 3.30 மணியளவில் நடந்ததாக கூறப்படுகிறது. வார இறுதி நாட்களில் ஆயிரக்கணக்கான மக்கள் இங்கு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.




கிடைத்த தகவல்களின்படி, இந்த பாலம் ஏற்கனவே மிகவும் மோசமாகவும், பாழடைந்த நிலையிலும் இருந்தது. விபத்து நடந்த நேரத்தில், பாலத்தில் அதன் இருப்பை தாண்டி அதிகமான சுற்றுலா பயணிகள் இருந்தனர். இதுமட்டுமின்றி, அப்பகுதி மக்கள் இருசக்கர வாகனங்கள் மற்றும் சைக்கிள்களை ஏற்றியதால், பாலத்தால் பாரம் தாங்க முடியாமல் இடிந்துள்ளது.
மீட்பு பணி தீவிரம்:
#WATCH पुणे, महाराष्ट्र: पिंपरी-चिंचवड़ पुलिस स्टेशन के अंतर्गत कुंदामाला गांव के पास इंद्रायणी नदी पर एक पुल ढह गया। 10 से 15 लोगों के फंसे होने की आशंका है। 5 से 6 लोगों को रेस्क्यू कर लिया गया है। अधिक जानकारी की प्रतीक्षा है: पिंपरी चिंचवड़ पुलिस pic.twitter.com/Fl8O2rt6iK
— ANI_HindiNews (@AHindinews) June 15, 2025
பிம்ப்ரி-சின்ச்வாட் கமிஷனரேட்டின் தலேகான் தபாதே காவல்துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்ற குண்ட்மாலாவை கடப்பதற்காக இந்த பாலம் கட்டப்பட்டுள்ளது. மக்கள் இதன் வழியாக ஒரு பக்கத்திலிருந்து மறுபுறம் கடந்து செல்வார்கள். 2025 ஜூன் 15ம் தேதியான இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்துள்ளனர். இதனால், பாரம் தாங்காமல் பாலம் இடிந்துள்ளது. எத்தனை பேர் நீரில் மூழ்கி இறந்தார்கள் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. முதற்கட்ட தகவல்களின்படி, சுமார் 20 முதல் 25 பேர் நீரில் மூழ்கி இறந்ததாக கூறப்படுகிறது. சம்பவ இடத்தில் 10 முதல் 12 ஆம்புலன்ஸ்கள் உள்ளன. மீட்புக் குழுவினரால் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.